ஜல்லிக்கட்டு தெரியும்; சேவல் கட்டு தெரியுமா?

Jallikkattu Theriyum; SevalKattu Theriyumaa?
Jallikkattu Theriyum; SevalKattu Theriyumaa?https://www.etvbharat.com
Published on

ம் தமிழர்களின் பாரம்பரிய கலைகள் அநேகம் என்றாலும், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையில் வீரர்கள் மாடுகளை அடக்கும் ஜல்லிக்கட்டுதான் பிரதானமாக உள்ளது. சில காரணங்களால் தடை கண்ட ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் போராட்டக் களத்தை தமிழகம் சந்தித்தது அனைவரும் அறிவோம்.

ஜல்லிக்கட்டு மட்டுமல்ல, புறா பந்தயம், எருதாட்டம் போன்ற விளையாட்டுகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. ஆனால், பழங்காலத்தில் பாரம்பரியமிக்க சேவல்கட்டு எனப்படும் சேவல் சண்டை இன்றைக்கு தமிழகத்தில் நடத்த அனுமதி இல்லை என்பதால் அந்த  விளையாட்டு பற்றிய தகவல்கள் இன்று பல பேர் அறிவதில்லை.

சினிமா காட்சிகளில் காட்டப்பட்ட சேவல் சண்டைகளுக்கான கோழிகளை சேலம் மாவட்டம், தேவூர் பகுதியில் பல கிராமங்களில் தங்கள் வீட்டுப் பிள்ளைகளைப் போல் வளர்த்து வருகின்றனர். தேவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் உள்பட, குடிசைத் தொழில் போன்றே சண்டை சேவல்களை வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆரஞ்சு, சிவப்பு, சாம்பல் போன்ற நிறங்களில் மயில், கீரி, பேய்கருப்பு, கொக்குவெள்ள, காகப்பேடு, செங்கருப்பு, வெள்ளசுள்ளி போன்ற பெயர் கொண்ட ரகங்களில் சுமார் ஐந்து லட்சம் சேவல்களை கூண்டுகளிலும், மரத்தின் அடியிலும்  வளர்க்கின்றனர். மேலும், இந்த சேவல்களுக்கு கம்பு, அரிசி, கேழ்வரகு, சோளம் போன்ற பல்வேறு தானியங்களை தீனியாகப் போட்டு வளர்த்து வருகின்றனர்.

தினமும் சேவல்களை சில நிமிடங்கள் காவிரி ஆற்றில் நீந்த விடுதல், சேவல்களுக்கு மசாஜ் செய்தல் போன்றவற்றுடன்  நல்ல தைரியமான சேவல்களை இரண்டு பேர் ஆளுக்கு ஒன்றாக  பிடித்து எடுத்து சேவலின் தலை பகுதியில் ஒரு கையும் வால் பகுதியில் ஒரு கையும் வைத்து முகத்துக்கு முகம் நீட்டுவதன் மூலம் சேவல்களின் கோபத்தைத் தூண்டி சண்டையிட பயிற்சி அளிக்கிறார்கள். அவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்ட  திடகாத்திரமான, தைரியமான சேவல்களை விற்பனையும் செய்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
நொதிக்கச் செய்த உணவுகளில் இத்தனை நன்மைகளா?
Jallikkattu Theriyum; SevalKattu Theriyumaa?

பயிற்சி தரப்பட்ட சண்டை சேவல்களை வாங்கிட கேரளா, கர்நாடகா மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் தேவூர் சுற்று வட்டார பகுதிகளைத் தேடி வந்து சேவலின் தரத்திற்கு ஏற்றவாறு 2000 முதல் ஒரு லட்சம் வரை விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.

தமிழகத்திலேயே சேவல் கட்டுக்குப் பயன்படுத்தப்படும் சேவல் வளர்ப்பில் முக்கியத்துவம் பெறும் தேவூர் கிராம மக்கள்  இந்த பாரம்பரிய சேவல் சண்டை விளையாட்டுக்கு அரசு அனுமதி வழங்கினால் மகிழ்வோம் என்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com