பருத்தியின் வரலாறு மற்றும் கலாசாரம் அறிவோம்!

cotton
cotton
Published on

ருத்தி, உலகின் மிக முக்கியமான விவசாயப் பொருள்களில் ஒன்றாகும். அதன் பல்துறை பயன்பாடு, மென்மைத்தன்மை, நீடித்து உழைக்கும் பாங்கு போன்ற காரணங்களால் பருத்தி ஆடை கலாசாரத்தில் முக்கியப் பங்கு கொண்டுள்ளது. இந்த பதிவில் பருத்தியின் வரலாறு மற்றும் கலாசாரத்தை பற்றி பார்ப்போம்.

பண்டைய ஆரம்பம்: பருத்தி வளர்ப்பு பண்டைய நாகரிகங்களுக்கு முந்தியது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து (இன்றைய பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியாவில் காணப்பட்டது) பருத்தி நூற்பு செய்யப்பட்டு நெய்யப்பட்டது என்று தொல்பொருள் கண்டுபிடிப்புகள் குறிப்பிடுகின்றன.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எகிப்து மற்றும் அரேபிய தீபகற்பம் போன்ற பகுதிகளில் பருத்தி பயிரிடப்பட்டது. மத்திய தரைக்கடல் மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் பருத்தி சாகுபடி மற்றும் ஜவுளி உற்பத்தியை பரப்புவதில் அரேபியர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். பருத்தி வர்த்தகம் செழித்து வளர்ந்தது. சந்தைகளில் பருத்தி விலை உயர்ந்ததால் கெய்ரோ மற்றும் பாக்தாத் போன்ற இடங்களில் பருத்தி நெசவு மையங்களை நிறுவ வழி வகுத்தது.

ஐரோப்பாவில் பருத்தி: 15ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவில் பருத்தி பிரபலமடைந்தது. இத்தாலியில் (குறிப்பாக புளோரன்ஸ்) வர்த்தகம் செழித்தது. 15ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஐரோப்பிய ஆய்வாளர்கள் புதிய நிலங்களைக் கண்டுபிடித்ததால், பருத்தி அறிமுகப்படுத்தப்பட்டது, அங்குள்ள பருவநிலை பருத்தி சாகுபடிக்கு ஏற்றதாக இருந்தது.

அமெரிக்காவின் பணப்பயிர்: 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பருத்தி அமெரிக்காவில் மிக முக்கியமான பணப்பயிராக இருந்தது.1793ல் எலி விட்னி கண்டுபிடித்த பருத்தி இயந்திரத்தின் வருகையால். அதன் சாகுபடி அதிவேகமாக வளர்ந்தது. அது விதைகளிலிருந்து பருத்தி இழைகளை திறமையாக பிரித்து செயலாக்கத்தில் புரட்சியை ஏற்படுத்தியது.

தொழில்துறை புரட்சி: தொழில்துறை புரட்சி பருத்திக்கு மற்றொரு குறிப்பிடத்தக்க பாய்ச்சலைக் கொடுத்தது. நிறைய பருத்தி ஆலைகள் முளைத்தன. குறிப்பாக பிரிட்டனில். அங்கு மூல பருத்தியை துணியாக மாற்றிய செயல்பாடுகளால் வளர்ந்து வரும் தொழில்களில் முக்கியமான ஒன்றாக மாறியது. பருத்தி தொழில்துறை வளர்ச்சிக்கு ஏற்றதாக மாறியது. இது உலகளாவிய ஜவுளித் தொழிலை நிறுவுவதற்கு வழிவகுத்தது. சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்தி பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்:
குறைந்த இரத்த அழுத்தத்திற்கான பொதுவான சிகிச்சைகள்!
cotton

பருத்தியின் கலாசார முக்கியத்துவம்: அணிவதற்கு சௌகரியமாகவும் பல்துறை பயன்பாடு காரணமாகவும் நீண்ட காலமாக பருத்தி ஃபேஷன் உலகில் கொண்டாடப்படுகிறது. சாதாரண உடைகள் முதல் உயர் நாகரிகப் பொருட்கள் வரை தயாரிக்க பருத்தி பயன்படுகிறது. வெவ்வேறு கலாசாரங்கள் மற்றும் அவற்றின் தனித்துவத்திற்கு ஏற்ப பருத்தி பயன்படுகிறது.

நவீன கால முக்கியத்துவம்: இன்று பருத்தி உலகில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் இயற்கை இழைகளில் ஒன்றாகும். இது 50 பில்லியன் டாலருக்கும் அதிகமான வர்த்தகத்திற்கு பங்களிக்கிறது. முக்கிய உற்பத்தியாளர்களில் இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரேசில் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் அடங்கும். உலகெங்கும் பருத்தி சாகுபடி மூலம் மில்லியன் கணக்கான விவசாயிகள் நன்மை அடைகின்றனர்.

பருத்தியின் முக்கியத்துவம்: பருத்தியின் மென்மைத்தன்மை மற்றும் வியர்வையை உறிஞ்சக்கூடிய தன்மை காரணமாக உலகெங்கிலும் உள்ள ஆடை, படுக்கை மற்றும் பிற ஜவுளிகளுக்கு ஏற்ற துணி வகையாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள கலாசார மரபுகள் மற்றும் பொருளாதாரங்களில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com