
தேவை: விருப்பமான வடிவ மண் பானை/தம்ளர்- 1, ஃபேப்ரிக் பெயின்ட் - விருப்பமான வண்ணம், பெயின்ட் பிரஷ் (வார்லி ஆர்ட்டிற்கு குறிப்பிட்ட அதே பொருட்கள்தான் இதற்கும் தேவை).
செய்முறை: மண் பானை/தம்ளரை நீரில் கழுவிக் காயவிடவும். விருப்பமான ஃபேப்ரிக் வண்ணத்தால் பானையில் ஒரு இடத்தில் முக்கோணமாக வண்ணம் தீட்டவும்.
(படம் 1).
வேறு வண்ணத்தில் அருகில் வேறு வடிவம் வரைந்து வண்ணம் தீட்டவும்.
(படம் 2).
இது மாதிரி நெருக்கமாக பானை முழுவதும் வேறு வேறு வண்ணம், வடிவத்தால் வண்ணம் தீட்டிக் காயவிடவும்.
(படம் 3).
பார்ப்பதற்கு மார்பிள் கல் பதித்தது போன்று இருக்கும்.
(படம் 4).
பிறகு, வெள்ளை வண்ணத்தில் அனைத்துக்கும் அவுட் லைன் வரைந்து காயவிடவும்.
(படம் 5).
அழகான மார்பில் பாட் பென் ஹோல்டர் ரெடி (படம் 6).