சின்ன பழுவேட்டரையர் சிலை உள்ள கோவிலா? எங்குள்ளது தெரியுமா?

Nageswarar temple
Nageswarar temple

1100 ஆண்டுகளுக்கு முன்பு ஆதித்த சோழன் கட்டிய நாகேஸ்வரர் கோவில் சோழர்களின் கட்டடக்கலை கட்டட தொழில்நுட்பம் மற்றும் வானியல் ஆகியவற்றின் சிறந்த சான்றாக உள்ளது. கும்பகோணத்தில் அமைந்திருக்கும் நாகேஸ்வரர் கோவிலின் முக்கிய தெய்வம் நாகேஸ்வர ஸ்வாமி. கோவில் ஆரம்பகால சோழர்கலையை அதன் சிறந்த வடிவத்தில் குறிப்பாக மனித உருவங்களின் சிலை வடிவத்தில் காட்டுகிறது.

சித்திரை மாதம் 11 ,12 ,13 தேதிகளில் மட்டும் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் வகையில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த நாட்களில் சூரிய பகவான் வந்து இந்த கோவிலில் வழிபடுவதாக நம்பப்படுகிறது. இதனால் இங்கு ஆண்டு தோறும் சூரிய விழா நடைபெறுவது வழக்கம். நாகேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் ஐந்து நிலைகளை கொண்டது. இந்த கோவில் கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் இரண்டு கோபுரங்களை கொண்டுள்ளது. இடப்பக்கம் நந்தவனமும் சிங்கமுக கிணறும், வலப்பக்கம் பிருகன் நாயகி சன்னதியில் நடராஜர் சபையும் உள்ளது.

இந்த நடராஜர் மண்டபம் தேர் வடிவத்தில் நேர்த்தியாக கட்டப்பட்டிருக்கும். அதில் இருக்கும் 12 கரங்கள் 12 ராசிகளை குறிக்கும் இரண்டு குதிரைகள்  நான்கு யானைகள் இழுக்கும் நிலையில் உள்ள இந்த மண்டபத்திற்கு, ஆனந்த தாண்டவ மண்டபம் என்ற பெயரும் உள்ளது.

இதையும் படியுங்கள்:
சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முந்தைய 'சுடுமண்' சிற்பங்கள்!
Nageswarar temple

நடராஜரின் நடனத்துக்கு ஏற்ப தாளம் போடும் பாவனையில் சிவகாமி அம்மையும், நடராஜர் அருகில் மகாவிஷ்ணு குழல் ஊதும் காட்சியும் அங்கு செல்லும் பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கின்றன. மேலும் இந்த கோவிலில், மாரியம்மன், அய்யனார், விநாயகர், சப்த லிங்கங்கள், வைத்தீஸ்வரர், அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா என அனைத்து தெய்வங்களையும் தரிசிக்கலாம்.

ராகு தோஷம் உள்ளவர்கள் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் ராகு தோஷம் நீங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த கோவிலில் சின்ன பழுவேட்டரையர் சிலை உள்ளது. இவரின் சிலை மூலவர் பின்புறம் உள்ளது. சோழர்களின் காலத்தில் செதுக்கப்பட்ட மிக அழகான பெண் சிற்பங்கள் இந்த கோவிலில் தான் உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com