பொறியியல் அதிசயங்களில் ஒன்று பாம்பன் ரயில் பாலம்!

பாம்பன் ரயில் பாலம்
பாம்பன் ரயில் பாலம்
Published on

ந்தியாவில் உள்ள பல கட்டடங்கள், பாலங்கள் அக்கால பொறியியல் வல்லுநர்களின் உழைப்பில் இன்றும் கம்பீரமாய் நிற்கின்றன. அக்கால கட்டடங்களுக்கு பின்னால் நிச்சயம் ஆச்சரியம் தரக்கூடிய ஒரு தகவல் இருக்கும். அப்படிப்பட்ட ஒன்றுதான் ராமேஸ்வரத்தில் அமைந்திருக்கும் பாம்பன் பாலம்.

ராமேஸ்வரம் செல்பவர்கள் அனைவரும் முதலில் பார்க்க வேண்டும் என்று நினைப்பது பாம்பன் பாலத்தைத்தான். ஏனென்றால், அந்தப் பாலத்தின் மீது அப்படி ஒரு ஈர்ப்பு. பாலத்தைப் பார்க்கும் நமக்கு பெரும் ஆச்சரியமாக இருக்கும். எந்தத் தொழில்நுட்ப வசதியும் இல்லாத அக்காலகட்டத்தில் கட்டப்பட்டு இருக்கும் இந்த பாலம் நம் முன்னோர்களின் வலிமையையும் புத்திசாலித்தனத்தையும் உழைப்பையும் பறைசாற்றுகின்றது.

இந்தியாவின் மிகச்சிறந்த பொறியியல் அதிசயங்களில் ஒன்று ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலம். ராமேஸ்வரம் தீவை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கிறது இந்தப் பாலம். இந்தியாவில் கடலின் குறுக்கே கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்கது பாம்பன் பாலம்.

பாம்பன் ரயில் பாலம் கட்டுவதற்கான முயற்சிகள் 1870களில் பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கைக்கு வர்த்தக இணைப்பை விரிவுபடுத்த முடிவு செய்தபோது தொடங்கியது. இது அதிகாரப்பூர்வமாக 1914ல் தொடங்கப்பட்டது. சுமார் 2.2 கி.மீ. வரை நீண்டு, 143 தூண்களுடன், மும்பையின் பாந்த்ரா - வொர்லி கடல் இணைப்புக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் இதுவாகும்.

பாம்பன் ரயில் பாலம் 90 டிகிரி கோணத்தில் மேல்நோக்கி திறக்கும் படகு இயக்கத்தை அனுமதிக்க ஷெர்சர் ரோலிங் லிப்ட் தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது. பாம்பன் பாலம் ரயில் பயணத்தின்போது அரபிக் கடலின் நீலப் பரப்பின் காட்சிகளோடு எப்போதும் வியக்க வைக்கிறது.

கடலின் நடுவே பாம்பன் ரயில் பாலம்
கடலின் நடுவே பாம்பன் ரயில் பாலம்

வளைகுடாவின் மீது கட்டப்பட்ட இந்தியாவின் மிக நீளமான பாலமாகக் கருதப்படும் பாம்பன் ரயில் பாலம் 1988 வரை ராமேஸ்வரத்திற்கும் பிரதான நிலப்பகுதிக்கும் இடையிலான ஒரே இணைப்பாக இருந்தது. அதன் பிறகு அதற்கு இணையாக ஒரு சாலைப் பாலம் கட்டப்பட்டது.

இதையும் படியுங்கள்:
சதுப்பு நில மரங்களின் முக்கியத்துவம் பற்றித் தெரியுமா?
பாம்பன் ரயில் பாலம்

நகரின் செழிப்பான பகுதியான தனுஷ்கோடியை கடுமையாக பாதித்த பெரிய சூறாவளிகளில் இருந்து பாலம் தப்பிப் பிழைத்துள்ளது. பாலம் பின்னர் 46 நாட்களில் புதுப்பிக்கப்பட்டது. 2009ல் சரக்குப் போக்குவரத்துக்காக மேலும் பலப்படுத்தப்பட்டது.

புதிய பாம்பன் பாலம் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கட்டப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் முதல் செங்குத்து லிப்ட் ரயில்வே கடல் பாலமாக மாறும். புதிய பாலம் சுமார் 2.2 கி.மீ. நீளம் இருக்கும். மேலும், கடல் மட்டத்திலிருந்து 22 மீட்டர் உயரத்திற்கு அதை உயர்த்த முடியும். புதிய கட்டுமானமானது ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடிக்கு ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் வருகையை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்களும் ராமேஸ்வரம் சென்றால் பொறியியலின் அதிசயமான பாம்பன் பாலத்தை அவசியம் கண்டு ரசித்து வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com