Aipan-Art
Aipan-Arthttps://rishikeshdaytour.com

இந்தியப் பாரம்பரியத்தைப் பேசும் ஓவியக் கலைகள்!

லை என்பது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஏற்றவாறு மாறும். அதேபோல், கலை எப்போதும் ஒரு குறிப்பிட்ட சமூகம் உருவாக்குவதாகத்தான் இருக்கும். அதுவும் குறிப்பாக, பாரம்பரிய கலைகளை இன்னும் அந்தந்த சமூகத்தினர் பாதுகாத்து வருகின்றனர் என்றே கூறலாம். நமது அரசும் அந்த பாரம்பரிய கலைகளைத் தேடிப்பிடித்து பாதுகாத்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் உள்ள ஐந்து மாநிலங்களின் பாரம்பரிய கலைகள் பற்றி இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.

எய்பன்(Aipan) கலை ஓவியம்: இது உத்தரகாண்ட் மாநிலத்தின் பாரம்பரிய ஓவியக் கலை. இந்தக் கலை 10ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த சந்த் ராஜ்யத்தில் உருவாக்கப்பட்ட ஒன்று. எய்பன் கலை இயற்கை மற்றும் இந்து, ஜெயின், புத்த சமயங்களின் கோட்பாடுகள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவான ஒன்றாகும். இந்த ஓவியத்தை இந்தியாவில் பெரும்பாலும் வாசல் அல்லது சாமி சிலைகள் வைக்கும் அறைக்குள் பயன்படுத்துவார்கள். இந்த ஓவியங்களில் பயன்படுத்தும் காவி அல்லது அரிசி மாவு அதிர்ஷ்டத்தைத் தரும் என பலராலும் நம்பப்பட்டு வருகிறது.

அசாமீஸ் ஓவியக் கலை: இது 16வது நூற்றாண்டில் வளர்ந்த கலை. அசாமீஸ் ஓவியத்தை யானை தந்தத்தில், மரத்தில், மெட்டல் அல்லது காகிதத்தில் மிகச் சிறியதாக வரைவார்கள். அதாவது 1 முதல் 24 அங்குலம் உயரம் மற்றும் 8 முதல்12 அங்குலம் அகலம் இருக்கும்.

Assam Art
Assam Arthttps://www.exoticindiaart.com

முதலில் லேசாக ஓவியத்தை வரைந்து விட்டு பின்னர் மஞ்சள் மற்றும் மரத்தின் பால் (Kendu என்று குறிப்பிடப்படும் மரம்) பயன்படுத்தி வண்ணம் தீட்டுவார்கள். அதில் சான்சிபட் (Sanchipat) என்ற அவர்களுடைய எழுத்துகளையும் பயன்படுத்துவார்கள்.

பில் ஓவியம்: இது மத்திய பிரதேச மாநிலத்தின் மிகவும் பழைமையான பில் சமூக மக்கள் உருவாக்கிய கலை. இவர்களே இந்தியாவின் மிகவும் பழங்குடி மக்கள் என நம்பப்படுபவர்கள். பில் மக்கள் இந்தியாவின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் வேட்டையாடுதல், அம்பு எய்தல், விவசாயம் செய்தல் ஆகிய வேலைகளைச் செய்து வந்தனர்.

Bhil Art
Bhil Arthttps://bhilart.com/

இவர்கள் ஏகலைவன் மற்றும் வால்மீகி வழியில் வந்தவர்கள் என நம்பப்படுகிறது. பில் சமூகத்தினர் தங்களின் கலாசாரம், நிகழ்ச்சி, சந்தித்த நோய்கள் என பலவற்றை இந்த ஓவியத்தின் மூலம் வரைந்து வைத்தார்கள். இந்த ஓவியத்தின் தனித்துவம் புள்ளிகள் மூலம் ஆரம்பிப்பதும், சீரான புள்ளிகள் வைத்து ஒரு ஓவியத்தை வரைவதும்தான்.

cheriyal art
cheriyal arthttps://scroll.in

செரியல் சுருள் ஓவியம்: செரியல் சுருள் ஓவியம் தெலங்கானாவில் வாழும், ‘பல்லடீர்’ எனப்படும் காகி படகொல்லு சமூகத்தினர் உருவாக்கியது. ராகி மாவு மற்றும் பழங்கள் மூலம் தயாரிக்கும் வண்ணங்கள் பயன்படுத்தி ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக் கதைகளை ஓவியமாகத் தீட்டுவார்கள். இந்த ஓவியம் 40 முதல் 45 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்டதாக இருக்கும். இந்த ஓவியத்தின் பின்புலத்திற்கு காவி நிறம்தான் பயன்படுத்துவார்கள்.

சித்தரா ஓவியம்: இந்த ஓவியம் கர்நாடகாவில் உள்ள தேவாரா சமூகத்தினர் உருவாக்கியது. குறிப்பாக, பெண்கள் விழாக்கள், வாழ்வின் முக்கியமான நிகழ்வுகள் ஆகியவற்றை வரைந்து வைப்பார்கள்.

Chittraa art
Chittraa arthttps://theartofindia.in

இன்னும் கர்நாடகாவில் சித்தரா ஓவியக் கலையை வரைவது பழக்கத்தில் உள்ளது. இந்த ஓவியம் 2 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்டதாக இருக்கும். வெள்ளை நிறத்திற்கு அரிசி மாவும், கருப்பு நிறத்திற்கு வறுத்த அரிசி மாவும் பயன்படுத்துவார்கள். வரைவதற்கு நார் பிரஷ்ஷையே பயன்படுத்துவார்கள்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com