Paithani Saree: பைதானி கைத்தறி புடவையின் சுவாரசிய தகவல்கள்!

Marathi Girl Wearing Saree
Paithani SareeImge Credit: Shaadiwish
Published on

இந்தியா முழுவதும் ஏராளமான கைத்தறி சேலைகள் பழமைக்கும், பாரம்பரியத்திற்கும், கலாச்சாரத்திற்கும் பெயர்போனவையாக உள்ளன. அந்தவகையில், மகாராஷ்திராவின் பாரம்பரிய சேலையான பைதானி கைத்தறி சேலைகளைப் பற்றி பார்ப்போம்.

மகாராஷ்திராவில் மணப்பெண்கள் அணியும் பாரம்பரிய சேலையான இந்த பைதானி சேலை, அவுரங்கபாத்தின் பைதான் நகரத்தில், இடைக்கால கட்டத்திலிருந்து  (Medieval Period)  பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பட்டுகள் மற்றும் உள்ளூரில் கிடைக்கும் தூய்மான ஜாரி நூல் ஆகியவற்றால் இந்த சேலை செய்யப்படுகிறது. ஜாரி நூல் பெங்களூர், சூரத் ஆகிய பகுதிகளிலிருந்து வாங்கப்படுகிறது.

இந்த பைதானி சேலைகள் ஒவ்வொன்றும், ஆடம்பரத்தின் அடையாளமான கோல்ட் நிறத்தைப் பயன்படுத்தியும், பூக்கள், பறவைகள் போன்ற இயற்கை டிசைன்களை பயன்படுத்தியும் வடிவமைக்கின்றனர். ஆறு யார்டுகள் (ஆறு மடிசார்) கொண்ட ஒரு பைதானி புடவைக்கு 500 கிராம் பட்டும் 250 கிராம் ஜாரி நூல்களும் பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக காரா எம்பிராய்டரி (அதாவது இலை வடிவம்) மற்றும் ஸ்டோன்கள் போன்ற டிசைன்கள் செய்யும்போது, கைத்தரி என்றால் அதிக சிக்கல் வரும். அதாவது, நூல் பிரியும், வளையல்களில் மாட்டிக் கிழியும், இதுபோன்ற நிறைய பிரச்சனைகள் ஏற்படும். ஆனால், பைதானி புடவைகளில் காரா எம்பிராய்டரி பயன்படுத்தும்போது, இதுபோன்ற எந்தப் பிரச்சனைகளும் வராது என்பதே இதன் தனித்துவமாக இருக்கிறது. ஆம்! கைத்தறியாக இருந்தாலும், சேலையில் எதோ அச்சு வைத்தது போலவே இருக்கும்.

டிசைன் மற்றும் புடவை செய்பவரின் திறமைகளைப் பொறுத்து, இந்த புடவையைத் தயாரிக்க குறைந்தது 6 மாதங்களிலிருந்து 2 வருடங்கள் வரை ஆகுமாம். பாரம்பரிய புடவையான இந்த பைதானி புடவையில் பழமை சாயல் படர வேண்டும் என்றால், அந்த சேலை செய்பவர்கள் அதற்கான உழைப்பைப் போட்டால் மட்டுமே உண்டு என்பது மகாராஷ்திரா மக்களின் கருத்து.

பண்டைய காலத்தில், பைதானி புடவைகள் முழுக்க முழுக்க காட்டனால் செய்யப்பட்டன என்றும், பார்டர்கள் மட்டும் பட்டால் செய்யப்பட்டன என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், காலங்கள் மாற மாற புடவை முழுவதுமாக பட்டால் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
வெயில் காலத்தில் எந்த வித வண்ணங்களில் உடை அணிந்தால் இதமாக இருக்கும் தெரியுமா?
Marathi Girl Wearing Saree

பைதானி புடவையில் அதிகமாக இயற்கை வடிவமைப்புகளே பயன்படுத்தப்படும் என்று முன்பே கூறியிருந்தோம். அதில் குறிப்பாக முனியா என்ற மராட்டி மொழியால் சொல்லப்படும் ‘கிளி’ டிசைன் மிகவும் புகழ்பெற்றதாகும். பைதானி புடவைகளிலேயே அப்போதுலிருந்து இப்போது வரை முனியா பைதானி புடவைகள் பெரும்பாலான மக்களால் விரும்பப்படுகிறது.

இலைகளில் அமர்ந்திருக்கும் அந்தப் பச்சை கிளிகளின் பார்டர் டிசைன்கள் இன்றும் அதன் புகழைக் காத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்திய மக்களால் விரும்பப்படும் ஒரு புடவையாகவும் இருந்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com