சிவ நாதமும் ருத்ர வீணையும்: ஒரு தியானப் பயணம்!

Rudra Veena history
Rudra Veena history
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ந்திய பாரம்பரிய இசையில் பயன்படுத்தப்படும் பழமையான, கம்பீரமான மற்றும் மதிப்புமிக்க நரம்பிசைக் கருவிதான் இந்த ருத்ர வீணை. இந்துஸ்தானி இசையின் 'துருபத்' (Dhrupad) இசைப்பாணியின் மூலக்கல்லாகக் கருதப்படும் பழமையான கருவி இது. வட இந்திய பாரம்பரிய இசை வடிவமான 'துருபத்' இசையில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. சிவபெருமானின் பெயரால் அழைக்கப்படும் இது, மிகப் புனிதமான இசைக்கருவியாக போற்றப்படுகிறது.

இதன் அமைப்பு (structure):

ஒரு பெரிய மூங்கில் தண்டின் இருபுறமும் இரண்டு பெரிய சுரைக்காய்களால் (Tumba) செய்யப்பட்ட குடங்கள் பொருத்தப்பட்டு உருவாக்கப்படுகிறது. இதில் பொதுவாக உலோகத்தால் ஆன 24 மெட்டல் பிரெட்களும் (Frets), 4 முக்கிய கம்பிகளும், 3 துணைக்கம்பிகளும் இருக்கும். இது மிக ஆழமான, மென்மையான மற்றும் ஆன்மீக அதிர்வுகளைத் தரக்கூடிய கம்பீரமான ஒலியை எழுப்பக்கூடியது.

வரலாறு:

இந்து சமயக் கடவுளான சிவபெருமானின் வடிவமான 'ருத்ரன்' மற்றும் பார்வதி தேவியின் வடிவத்தில் இருந்து இது உருவானதாக இந்து புராணங்கள் கூறுகின்றன. 19ஆம் நூற்றாண்டு வரை இந்திய இசையில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்த இந்த கருவி, நவீன இசைக்கருவிகளின் வரவால் வழக்கொழிந்து போகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. எனினும் தாகர் குடும்பம் போன்ற பாரம்பரிய இசை மரபினர் இக்கருவியை பாதுகாத்து மீட்டெடுத்துள்ளனர்.

இந்திய பாரம்பரிய இசையின் மிக மெதுவான மற்றும் தியான நிலையைத்தரும் 'ஆலாப்'(Alap) பகுதியை வாசிப்பதற்கு இது மிகவும் உகந்தது. இக்கருவி தியான நிலைக்கு அழைத்துச் செல்லக்கூடிய கம்பீரமான மற்றும் ஆழமான நாதத்தை எழுப்பக்கூடியது. ஆனால் தற்பொழுது மிகக் குறைந்த கலைஞர்களே இக்கருவியை வாசித்து வருகின்றனர் என்பது வருத்தமான ஒன்று.

இதையும் படியுங்கள்:
இந்திய நாட்டுப்புற இசையின் பழமையான இசைக்கருவி புங்கி: பாம்பாட்டி குழலிலிருந்து கலாச்சாரச் சின்னமாக!
Rudra Veena history

கின்னாரி வீணை (Kinnari Veena):

இது 19ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முந்தைய காலங்களில் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த வரலாற்று சிறப்புமிக்க ஒரு சுரைக்காய் குழாய் ஜிடார் (Tubular zither) கருவியாகும். பல இசை வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, புகழ்பெற்ற ருத்ர வீணையானது இந்த கின்னாரி வீணையின் வழித்தோன்றலாகவே கருதப்படுகிறது. தட்டையான அல்லது உருளை வடிவ மரத்தாலான குழாயில் சுரைக்காய்கள் இணைக்கப்பட்டு கம்பிகள் கட்டப்பட்டிருக்கும். கின்னாரி வீணை மிகவும் எளிமையான ஆரம்ப கால வடிவமைப்பைக் கொண்டது. ருத்ர வீணை என்பது கின்னாரி வீணையின் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு, பரிணாம வளர்ச்சி அடைந்த ஒரு பிரம்மாண்டமான மற்றும் மேம்படுத்தப்பட்ட கருவியாகும்.

பரிணாம வளர்ச்சி:

பீன் என்றும் அழைக்கப்படும் ருத்ர வீணை பெரும்பாலும் சிவபெருமானுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. மாறிவரும் இசைப்பாணிகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப, இந்தக் கருவியின் வடிவமைப்பும், வாசிக்கும் நுட்பமும் பல நூற்றாண்டுகளாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன. ஆரம்பத்தில் இது மூங்கில் மற்றும் சுரைக்காய்களால் செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்:
மேட்ரியோஷ்கா பொம்மைகள், ரஷ்ய பாலே, வெங்காயக் கோபுரங்கள்: ரஷ்யாவின் காலத்தால் அழியாத கலை மரபு!
Rudra Veena history

ஆனால் நவீன பதிப்புகள் மேம்பட்ட நீடித்துழைப்பு மற்றும் ஒலி தரத்திற்காக பெரும்பாலும் மரம் மற்றும் உலோகத்தை பயன்படுத்துகின்றன. இந்திய பாரம்பரிய இசையின் பரிணாம வளர்ச்சியில் ருத்ரவீணை முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் முக்கியத்துவம் இசை சார்ந்தது மட்டுமல்ல; கலாச்சார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இது பெரும்பாலும் பண்டைய சிற்பங்கள் மற்றும் ஓவியங்களில் சித்தரிக்கப்படுகிறது.

ஆன்மீக அதிர்வுகளைத் தரக்கூடிய 'நாத யோக' இசையை வழங்கும் கருவியான இதனை உஸ்தாத் மோஹி பஹாவுதீன் தாகர் மற்றும் கார்ஸ்டன் விக்கே போன்றவர்கள் வாசிப்பதில் புகழ்பெற்றவர்கள்.

logo
Kalki Online
kalkionline.com