சங்கு ஒலிப்பதில் இத்தனை விஷயங்கள் இருக்கா?

பூஜையில் சங்கு
பூஜையில் சங்கு

ங்கு ஊதுதல் என்பது ஆன்மிகத்தில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. ‘சங்கு ஊதுவதில் இத்தனை தெய்வீக நன்மைகள் இருக்கிறதா?’ என்று நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு சில உண்மைகளைச் சொல்வதுதான் இந்தப் பதிவு.

பல விசித்திரமான பழக்க வழக்கங்களையும், சடங்குகளையும் கொண்டது நமது இந்து மதம். குறிப்பாக, இந்து மத கடவுள் வழிபாட்டில் பல வித்தியாசமான சடங்குகள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்றுதான் பூஜையின்போது சங்கு ஒலிப்பது. கோயிலாக இருந்தாலும், வீட்டு பூஜையாக இருந்தாலும் அங்கு சங்கு ஒலிப்பது என்பது முக்கியமான ஒன்றாகும். இந்து மதத்தில் பல கடவுள்கள் கையில் சங்கு வைத்திருப்பார்கள். ஆனால், சங்கு பொதுவாக காக்கும் கடவுளான திருமாலின் அடையாளமாகக் கூறப்படுகிறது.

புராதன கால நம்பிக்கைகளின்படி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை அமிர்தத்திற்காக கடைந்தபோது கடலில் இருந்து வெளியே வந்ததுதான் சங்கு. இதனால் இந்து மத வழிபாட்டில் சங்குக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

ஆன்மிகம் தவிர்த்து, அறிவியல் ரீதியாகவும் சங்கிலிருந்து வெளிப்படும் ஒலிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. சங்கு சரியாக ஒலிக்கப்படும்போது அது சுற்றுப்புறத்தில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களை அழிக்கிறது. வீட்டை சுத்தம் செய்து பாதுகாப்பாக வைக்க அக்காலத்தில் எப்படி சாணத்தை கரைத்து வீட்டில் மெழுகுவார்களோ, அதேபோல சங்கு ஊதுவதும் வீட்டை சுத்தம் செய்யும் ஒரு முறையாகும். இது வீட்டில் உள்ளவர்களை பல நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் முறையாகும்.

இதையும் படியுங்கள்:
பிள்ளைகள் முன்பு பெற்றோர்கள் கட்டாயம் செய்யக்கூடாதவை!
பூஜையில் சங்கு

முன்னரே குறிப்பிட்டது போல, இந்து மதத்தில் சங்குக்கு என்று ஒரு முக்கியத்துவம் உள்ளது. பூஜைகளின்போது இது பயன்படுத்தப்பட காரணங்களும் உள்ளன. வராக புராணத்தில் குறிப்பிட்டுள்ளபடி சங்கு ஊதாமல் எந்தக் கோயிலின் கதவும் திறக்கப்படாது.

சங்கை ஊதும்போது அதிலிருந்து சக்தி வாய்ந்த அதிர்வுகள் வெளிப்படும் என்பது நாம் அறிந்ததுதான். பூஜையின்போது இதிலிருந்து வரும் சக்தி வாய்ந்த அதிர்வுகள் நம்மை சுற்றியிருக்கும் எதிர்மறை ஆற்றல்களை விரட்டும் என்று கூறப்படுகிறது. மேலும், இது ஆற்றலை ஒரு இடத்தில் குவிக்கும் மையப்புள்ளியாகவும் இருக்கிறது. சாதாரண மக்களுக்கும் புரியும்படி கூற வேண்டுமென்றால், பூஜையின்போது மணி அடிப்பது எப்படி கவனத்தை ஈர்த்து காஸ்மிக் ஆற்றலை உருவாக்குகிறதோ, அதேபோல், சங்கு ஒலிப்பது அதனை விட சக்தி வாய்ந்த ஒன்றாகக் கூறப்படுகிறது.

சங்கு ஒலிப்பது என்பது பூஜைகளுக்கு மட்டுமின்றி, மேலும் பல பலன்களையும் வழங்கக்கூடியதாக இருக்கிறது. வாஸ்துவை பொறுத்தவரையில் இது மிகவும் பயனுள்ள ஒன்றாகும். வீட்டின் சரியான திசையில் சங்கை வைப்பது உங்கள் வீட்டிற்கு மகாலட்சுமியின் அருளை பெற்றுத் தரும். சங்கில் குளிப்பது, தண்ணீர் குடிப்பது என ஒவ்வொன்றும் உங்களுக்கு ஒரு பலனை வழங்கக்கூடியது சங்கு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com