அமெரிக்க ஆன்மாவின் குரல்: வாஷிங்டன் ஸ்தூபியும் வரலாற்று உரைகளும்!

சிமெண்டே இல்லாமல் கட்டப்பட்ட உலகின் மிக உயரமான தனிக்கல் கட்டிடத்தின் வரலாறு!
வாஷிங்டன் நினைவாலயம் - Obelisk Architecture
வாஷிங்டன் நினைவாலயம் - Obelisk Architecture
Updated on

மெரிக்காவின் தந்தை எனப் போற்றப்படும் முதன்மை அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனின் நினைவாக நிறுவப்பட்ட வாஷிங்டன் நினைவு ஸ்தூபி (Washington Monument), உலகின் மிக உயரமான கல் கட்டடக்கலை அற்புதமாகவும், அமெரிக்க ஜனநாயகத்தின் வாஷிங்டன் நினைவாலயம் தலைசிறந்த அடையாளமாகவும் திகழ்கிறது.

இந்த ஸ்தூபியோடு இணைத்து அங்கு நிகழ்த்திய உரைகள் வரலாற்று சிறப்புமிக்கவையாக இன்றும் போற்றப்படுகிறது. அப்படி போற்றப்படுவதற்கான காரணங்கள், அந்த ஸ்தூபியின் சிறப்புகள் அனைத்தையும் இப்பதிவில் காண்போம்!

கலை மற்றும் கட்டடக்கலைச் சிறப்புகள்:

இதன் வடிவம் பண்டைய எகிப்தின் 'ஒபெலிஸ்க்' (Obelisk) எனப்படும் கூம்பு வடிவத்தூண் பாணியில் உருவாக்கப்பட்டது. இது நித்தியத்தையும், அமெரிக்கக் குடியரசின் வலிமையையும் குறிக்கிறது.

உயரம்: 169.29 மீட்டர் (555 அடி). அமைப்பு: எந்தவிதமான இரும்புச் சட்டங்களோ (Steel Frame) அல்லது சிமெண்டோ இன்றி, கற்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி கட்டப்பட்ட 'தனிக்கல் சுமை தாங்கும்' (Masonry) அமைப்பு.

அலுமினிய உச்சிப் பிரமிடு (Aluminum Apex): 1884-ல் இதன் உச்சியில் 2.8 கிலோ எடையுள்ள அலுமினியக் கூம்பு பொருத்தப்பட்டது. அக்காலத்தில் அலுமினியம் வெள்ளியைவிட அரிதான உலோகமாகக் கருதப்பட்டதால், இது அமெரிக்கத் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பின் குறியீடாகப் பார்க்கப்பட்டது.

இரண்டு நிறக் கற்கள் (Two-Color Stone): இத்தூணைக் கூர்ந்து கவனித்தால், 150 அடி உயரத்தில் பளிங்குக் கற்களின் நிறம் லேசாக மாறுவதைக்காணலாம். நிதியின்மை காரணத்தால் கட்டுமானம் 23 ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்டு, வேறு குவாரியிலிருந்து கற்கள் கொண்டு வரப்பட்டதால் இந்த நிற மாற்றம் ஏற்பட்டது.

வரலாற்றுப் பதிவுகள்:

அமெரிக்க உள்நாட்டுப் போர், நிதி நெருக்கடி எனப் பல வரலாற்றுப் புயல்களைக் கடந்து உருவான இச்சின்னத்தின் முக்கியக் காலக்கட்டங்கள்:

கட்டுமானத் தொடக்கம் - 1848

கட்டிடக் கலைஞர் ராபர்ட் மில்ஸ் (Robert Mills) வடிவமைப்பில் வாஷிங்டன் தேசிய நினைவுச் சங்கத்தால் அடிக்கல் நாட்டப்பட்டது.

கட்டுமானம் நிறுத்தம் - 1854

நிதிப் பற்றாக்குறை மற்றும் 'நோ நத்திங்' (Know-Nothing Party) அரசியல் இயக்கத்தின் தலையீடு காரணமாகப் பணிகள் பாதியில் நின்றன.

வாஷிங்டன் நினைவாலயம் - Obelisk Architecture
வாஷிங்டன் நினைவாலயம் - Obelisk Architecture

உள்நாட்டுப் போர் & இடைவெளி - 1861 - 1865

அமெரிக்க உள்நாட்டுப் போர் நடந்ததால், அரைக்குறையாக நின்ற தூண் 'மாட்டுத் தொழுவமாகவும்' ராணுவ முகாம்களாகவும் பயன்படுத்தப்பட்டது.

அரசுப் பொறுப்பேற்பு & பூர்த்தி - 1876 - 1884

அமெரிக்க சுதந்திரத்தின் 100-வது ஆண்டைக்குறிக்க, ராணுவப் பொறியாளர்கள் (US Army Corps of Engineers) மூலம் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டு 1884-ல் உச்சி அமைக்க முடிந்தது.

பொதுமக்கள் பயன்பாடு - 1888

அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டு, உலகின் மிக உயரமான கட்டடமாக (ஈபிள் கோபுரம் கட்டப்படும் வரை) அங்கீகாரம் பெற்றது.

கலாச்சார மற்றும் தேசிய முக்கியத்துவம்:

ஜனநாயகத்தின் மையப் புள்ளி: வாஷிங்டன் டி.சி-யின் மையப்பகுதியான 'நேஷனல் மால்' (National Mall) வளாகத்தில் அமைந்துள்ள இத்தூபி, அமெரிக்கக் கேபிட்டல் (Capitial) மற்றும் லங்கன் நினைவுச் சின்னத்திற்கு நடுவே அமைந்த பண்பாட்டு மையமாகும்.

நினைவுக் கற்கள் (Commemorative Stones): தூணின் உள்பகுதியில் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்கள், அமைப்புகள் மற்றும் உலக நாடுகள் நன்கொடையாக அளித்த 193 செதுக்கப்பட்ட நினைவுக் கற்கள் சுவர்களில் பதிக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுடன் இயற்கையை ரசிக்க இதோ சில 'அட்வென்ச்சர்' இடங்கள்!
வாஷிங்டன் நினைவாலயம் - Obelisk Architecture

உரிமைப் போராட்டங்களின் சாட்சி: மார்ட்டின் லூதர் கிங்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க "எனக்கொரு கனவு இருக்கிறது" (I Have a Dream) உரை மற்றும் பல சிவில் உரிமைப் பேரணிகள் இத்தூபியின் நிழலில்தான் நடைபெற்றன.

உயரக்கட்டுப்பாடு விதி: வாஷிங்டன் நகரின் கலாச்சார அடையாளத்தைப் பாதுகாக்க, எந்தவொரு புதிய கட்டடமும் இந்த நினைவுக் தூபியை விட உயரமாகக் கட்டப்படக் கூடாது என்ற சட்ட விதி இன்றளவும் பின்பற்றப்படுகிறது.

உறுதி, சுதந்திரம் மற்றும் ஜனநாயகக் கொள்கைகளின் உறைவிடமாக விளங்கும் இந்த நினைவுச் சின்னம், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளைக் கவரும் உலகப் புகழ்பெற்ற அடையாளமாகத் திகழ்கிறது.

அதோடு மட்டுமல்லாமல் இந்த ஸ்தூபியின் பின்னணியில் பேசிய பேச்சுக்களின் தனிச்சிறப்புகள் மற்றும் முக்கியமான உரைகள் என்றென்றும் உலகம் போற்றப்படுபவையாக உள்ளன. அவை வரலாற்றில் தனிச்சிறப்பு மிக்கவை. அந்த உரைகளின் அற்புதமான பதிவுகள் இதோ:

தூபிக்கு அடிக்கல் நாட்டியபோது, அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் ராபர்ட் சார்லஸ் வின்த்ராப் நிகழ்த்திய உரை:

இத்தூண் வெறுமனே கல்லால் ஆன கட்டிடமல்ல, ஜார்ஜ் வாஷிங்டனின் தூய்மையான குணத்தையும் அமெரிக்க குடியரசின் உயரத்தையும் குறிக்கும் தூண் என்று பிரகடனப்படுத்தினார்.

வரலாற்று வார்த்தை: "இந்த ஸ்தூபி வானத்தை நோக்கி உயர்ந்து நிற்பதைப்போல, ஜார்ஜ் வாஷிங்டனின் புகழும் மக்களின் மனங்களில் உன்னதமான இடத்தில் உயர்ந்து நிற்கும்!" என்று முழங்கினார்.

இதையும் படியுங்கள்:
வனவிலங்கு பாதுகாப்பு: இளைஞர்களின் அதிரடிப் புரட்சி!
வாஷிங்டன் நினைவாலயம் - Obelisk Architecture

திறப்பு விழா உரை 1885 - ஜான் ஷெர்மன் மற்றும் செனட்டர்கள்:

கட்டுமானம் நிறைவுற்று அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டபோது நிகழ்த்தப்பட்ட உரைகளின் தனிச்சிறப்பு:

உள்நாட்டுப் போரினால் (Civil War) பிளவுபட்டு, ரத்தக் களறியைக் கண்ட அமெரிக்கா, மீண்டும் ஒன்றாக இணைந்ததன் அடையாளமாக இத்தூபியைப் பார்த்தனர். ஒருமைப்பாட்டுச் செய்தி. வடக்கு மற்றும் தெற்கு மாநிலங்கள் மீண்டும் இணைந்து இந்த பிரம்மாண்ட தூணைக் கட்டி முடித்ததுபோல, அமெரிக்க ஒன்றியத்தின் ஒற்றுமையும் இனி எந்தச் சக்தியாலும் உடைக்க முடியாதபடி உறுதியாக இருக்கும் என்பதை உலகிற்கு உணர்த்தினர்.

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் வரலாற்று உரை - 1963 - "I Have a Dream")

வாஷிங்டன் தூபியின் நிழலில், அதன் எதிரே உள்ள நீர்நிலைக்கு (Reflecting Pool) அருகில் நின்று மார்ட்டின் லூதர் கிங் நிகழ்த்திய 'எனக்கொரு கனவு இருக்கிறது' உரை:

சுதந்திரத்தின் அடையாளமான வாஷிங்டன் தூபியை சாட்சியாக வைத்து, கருப்பின மக்களின் சம உரிமைக்காகக் குரல் கொடுத்தது இதன் சிறப்பு.

அரசியல் மற்றும் பண்பாட்டுத் தாக்கம்: இத்தூபி எந்த 'சுதந்திரக் கொள்கைக்காக' எழுப்பப்பட்டதோ, அந்தச் சுதந்திரம் அமெரிக்காவின் அனைத்துக் குடிமக்களுக்கும்—குறிப்பாகக் கருப்பின மக்களுக்கு—முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்பதை இத்தூபியின் பிரம்மாண்டத்தை வைத்தே உலகிற்கு உணர்த்தினார்.

பேச்சுக்களின் ஒட்டுமொத்தத் தனிச்சிறப்பு:

உயரமும் லட்சியமும்: உரையாற்றிய ஒவ்வொரு தலைவரும், 555 அடி உயரமுள்ள இத்தூபியின் உயரத்தை அமெரிக்காவின் 'உயர்ந்த லட்சியங்களோடு' (Liberty & Justice) ஒப்பிட்டே பேசினார்கள்.

இதையும் படியுங்கள்:
ஐடி வேலையைத் துறந்து மண்ணை நேசிக்கும் இளைஞர்கள்! ஏன் இந்த மாற்றம்?
வாஷிங்டன் நினைவாலயம் - Obelisk Architecture

ஒற்றுமையின் குறியீடு: பல வண்ணக் கற்களாலும், பல மாநிலங்கள் அளித்த நினைவுக் கற்களாலும் உருவான இத்தூபியை வைத்து, "மாறுபட்ட மனிதர்கள் இணைந்ததே அமெரிக்கா" என்ற கருப்பொருளை திரும்பத் திரும்ப வலியுறுத்தினர்.

எதிர்காலத் தலைமுறைக்கான வழிகாட்டி: தூபியைக் சுட்டிக்காட்டிப் பேசப்பட்ட பேச்சுக்கள் அனைத்தும் வெறும் கடந்தகால வரலாற்றைப் பேசுவதோடு நிற்காமல், வருங்காலத் தலைமுறையினர் எவ்வாறு ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலாக அமைந்தன.

வாஷிங்டன் டி.சியின் கம்பீரத்தை உயர்த்திய இந்த உரைகள், இத்தூபியை வெறும் 'கற்களின் வடிவமாக' பார்க்காமல், அமெரிக்க ஆன்மாவின் 'சமுதாயக் குரலாக' மாற்றின என்பதே இதன் மிகப்பெரிய தனிச்சிறப்பாகும்!

இந்தக் கட்டுரையை படிக்கும் பொழுது ஒரு தனி மனிதனுக்குப் பின்னால் "பிறப்பு ஒரு சம்பவம் இறப்பு ஒரு சரித்திரம்"என்பதற்கு இணங்க அவர் புகழ் ஓங்கி இருந்ததை வாஷிங்டன் நினைவு ஸ்தூபியை மையமாகக் கொண்டு நிகழ்த்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த உரைகள், அமெரிக்க மக்களின் தேசபக்தி, விடுதலை உணர்வு மற்றும் ஜனநாயக விழுமியங்களை உலகிற்குப் பறைசாற்றும் கம்பீரமான சான்றுகளாக விளங்குகின்றன என்பதை புரிந்துகொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com