அன்பின் தங்குமிடமாக விளங்கும் ஷாலிமார் பாக் முகலாயத் தோட்டம்!

அன்பின் தங்குமிடமாக விளங்கும் ஷாலிமார் பாக் முகலாயத் தோட்டம்!
Published on

‘சாலிமார் பாக்’ என்பது ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் அமைந்த ஒரு முகலாயத் தோட்டமாகும். பல நூற்றண்டுகள் பழைமையான இந்தத் தோட்டம் ஒவ்வொரு காலக்கட்டங்களிலும், சாலிமார் பாக், பரா பக்ச் மற்றும் பையஸ் பக்ச் என்று வெவ்வேறு பெயர்களிலும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. மகாராஜா ரஞ்சித் சிங்கின் ஆட்சியின்போது, இங்குள்ள பளிங்கு அரண்மனை ஐரோப்பிய பார்வையாளர்களுக்கு விருந்தினர் மாளிகையாக இருந்துள்ளது. மகாராஜா ஹரி சிங்கின் ஆட்சியில் இந்த வளாகத்தின் மின்மயமாக்கம் செய்யப்பட்டது. இவ்வாறு இந்தத் தோட்டம் பல ஆட்சியாளர்களால் விரிவாக்கம் மற்றும் மேம்படுத்தப்பட்டு வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

இதன் அருகில், ‘நிசாத் தோட்டம்’ எனும் இன்னொரு புகழ் பெற்ற தோட்டமும் உள்ளது. 1619ம் ஆண்டில் முகலாய பேரரசர் ஜஹாங்கிர் தனது மனைவி நூர்ஜஹானுக்காக இந்தத் தோட்டத்தைக் கட்டினார். இந்தத் தோட்டம் முகலாய தோட்டக்கலையை உலகுக்கு பறைசாற்றுவதாக உள்ளது. தற்போது இது ஒரு பொது பூங்காவாகத் திகழ்கிறது. இது, ‘ஸ்ரீநகரின் கிரீடம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

மன்னர் ஷாஜகானின் உத்தரவின் பேரில் 1630ல் காஷ்மீர் ஆளுநர் ஜாபர்கான் இந்தத் தோட்டத்தை விரிவுபடுத்தினார். ஷாலிமார் என்றால், ‘அன்பின் தங்கும் இடம்’ என்று பொருள். இந்தத் தோட்டம் 31 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோடை காலத்தில் ஜஹாங்கிரும் அவரது மனைவி நூர்ஜஹானும் டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் வந்து தங்குவது வழக்கம். It was their imperial summer residence and the royal court. அவர்கள் தில்லியிலிருந்து யானைகள் மீது முழு அரச பரிவாரங்களுடன் குறைந்தது 13 முறையாவது பிர்பஞ்சால் மலைத்தொடரின் கடினமான பனி வழிகளைக் கடந்து ஸ்ரீநகர் சென்றதாகக் குறிப்புகள் உள்ளன.

காஷ்மீரின் புகழ் பெற்ற, ‘தால்’ ஏரியின் அழகை இந்த சாலிமார்  தோட்டத்தில் இருந்து ரசிக்கலாம். பல வண்ணப் பூக்கள் நிறைந்தது இந்தத் தோட்டம். பார்க்கப் பார்க்க பரவசப்படுத்தும் வண்ணமயமான இந்த ஷாலிமார் பாக், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தோட்டக்கலையின் பெருமையை இன்றும் பேசுவதாக அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com