எப்படி இப்படி பெயர் வச்சாங்க? 6 வினோத ரயில் நிலையங்கள்!

Six railway stations with different names
Six railway stations with different names

1. வாட்டர் பைப்

Water pipe
Water pipe

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தின் பெயர் 'வாட்டர் பைப்' என்பதாகும். இந்த ரயில் நிலையம் மத்திய ரயில்வே மண்டலத்தை சேர்ந்ததாகும்.

2. சிங்கப்பூர் ரோடு

Singapore road
Singapore road

ஒடிஷா மாநிலம் ராயகாடா மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தின் பெயர் 'சிங்கப்பூர் ரோடு'. கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தைச் சேர்ந்தது இந்த ரயில் நிலையம்.

3. புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் ஸ்டேஷன்

Dr. M. G. Ramachandran Central Railway Station
Dr. M. G. Ramachandran Central Railway Station

அட! இது நம்ம சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்தான்ங்க. இந்தியாவிலேயே நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையம் எனும் பெருமை இந்த ரயில் நிலையத்தையே சேரும். உலகிலேயே நீளமான பெயர் கொண்ட ரயில்வே நிலையம் எனும் பெருமையை ஒரே ஒரு எழுத்தில் தவற விட்டு விட்டது இந்த நிலையம்.

4. IB

IB
IB

ஒடிஷா மாநிலம் ஜார்சுகூடா மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தின் பெயர் 'IB'. இந்தியாவிலேயே சிறிய பெயர் கொண்ட ரயில் நிலையம் எனும் பெருமை இந்த ரயில் நிலையத்தையே சேரும். IB எனும் ஒரு நதியின் பெயர் இந்த ரயில் நிலையத்திற்கு வைக்கப் பட்டுள்ளது.

5. சாம்பியன்

Champion railway station
Champion railway station

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தின் பெயர் 'சாம்பியன்'. தென் மேற்கு ரயில்வே மண்டலத்தைச் சேர்ந்தது இந்த ரயில் நிலையம்.

இதையும் படியுங்கள்:
உலகில் உள்ள மிகவும் வித்தியாசமான 5 பறவைகள் பற்றி தெரியுமா?
Six railway stations with different names

6. 6. காலா பக்ரா

Kala bakra Railway station
Kala bakra Railway station

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் அருகே உள்ள ஒரு ரயில் நிலையத்தின் பெயர் 'காலா பக்ரா' என்பதாகும். காலா பக்ரா என்பதற்கு அர்த்தம் கறுப்பு ஆடு என்பதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com