மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தின் பெயர் 'வாட்டர் பைப்' என்பதாகும். இந்த ரயில் நிலையம் மத்திய ரயில்வே மண்டலத்தை சேர்ந்ததாகும்.
ஒடிஷா மாநிலம் ராயகாடா மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தின் பெயர் 'சிங்கப்பூர் ரோடு'. கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தைச் சேர்ந்தது இந்த ரயில் நிலையம்.
அட! இது நம்ம சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்தான்ங்க. இந்தியாவிலேயே நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையம் எனும் பெருமை இந்த ரயில் நிலையத்தையே சேரும். உலகிலேயே நீளமான பெயர் கொண்ட ரயில்வே நிலையம் எனும் பெருமையை ஒரே ஒரு எழுத்தில் தவற விட்டு விட்டது இந்த நிலையம்.
ஒடிஷா மாநிலம் ஜார்சுகூடா மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தின் பெயர் 'IB'. இந்தியாவிலேயே சிறிய பெயர் கொண்ட ரயில் நிலையம் எனும் பெருமை இந்த ரயில் நிலையத்தையே சேரும். IB எனும் ஒரு நதியின் பெயர் இந்த ரயில் நிலையத்திற்கு வைக்கப் பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தின் பெயர் 'சாம்பியன்'. தென் மேற்கு ரயில்வே மண்டலத்தைச் சேர்ந்தது இந்த ரயில் நிலையம்.
பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் அருகே உள்ள ஒரு ரயில் நிலையத்தின் பெயர் 'காலா பக்ரா' என்பதாகும். காலா பக்ரா என்பதற்கு அர்த்தம் கறுப்பு ஆடு என்பதாகும்.