தமிழ் சம்மட்டி; ஆங்கில ஸ்மித் - என்ன தொடர்பு?

சொல்வதெல்லாம் தமிழ்
Thamizh Sammatti; Aankila Smith - Enna thodarpu?
Thamizh Sammatti; Aankila Smith - Enna thodarpu?https://www.hindutamil.in

ம் தாய்மொழியாம் தமிழ்மொழிக்கு எத்தனை வயது, எவ்வளவு தொன்மை வாய்ந்தது என்பதை உலகம் ஏற்றுக்கொள்வதில் இன்று வரை குழப்பம் நிலவினாலும், இலத்தீன், கிரேக்கம் போன்ற பண்டைய மொழிகள் வழியாக ஆங்கிலம் சென்றடைந்த தமிழ்ச்சொற்களை, சொல்லாய்வுகள் மூலம் நாம் அடையாளம் காண முடியும்.

இன்றைய உலகில் பரவலாக நாம் பயன்படுத்தும் ஆங்கில மொழியில் வழங்கப்படும் பெரும்பாலான சொற்களின் வேர்ச்சொல்லை வழங்கியது தமிழ் மொழியே  என்பதை தற்போதைய மொழியியல் வல்லுநர்கள் உணரத் தொடங்கியுள்ளனர் என்பது வரவேற்கத்தக்கது.

ஆங்கிலேயர்களிடையே வழிவழியாக பின்பற்றி வரும் சில பெயர்களில் கூட நம் தமிழ் மொழியின் வேர்ச்சொல்களை அடையாளம் காண முடியும். எடுத்துக்காட்டாக, ஸ்மித் (SMITH) என்கிற பெயரை பரவலாக இங்கிலாந்து போன்ற நாடுகளில் இன்றைக்கும் காணலாம். அமெரிக்கர்களிடமும்  இது ஒரு புகழ் வாய்ந்த, அனைவரும் விரும்பும் ஆங்கிலப் பெயராக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வில் ஸ்மித் (ஹாலிவுட் நடிகர்), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்), எமிட் ஸ்மித் (கால் பந்தாட்ட வீரர்) எனச் சில பிரபலங்களை எடுத்துக்காட்டாகச் சொல்ல முடியும்.

முற்காலத்தில் கருப்பு உலோகமான இரும்பை அடிக்கும் கொல்லர் தொழிலின் அடிப்படையில் இப்பெயர் உருவானதாக அகராதிகள் சொல்கின்றன. ப்ளாக்ஸ்மித் (Blacksmith) என்றால் பட்டறையில் இரும்பு வேலை செய்பவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே!

ஆங்கில அகராதிகளின் சொற்பிறப்பு விளக்கங்களின்படி, One who smites is Smith ("to smite" = to hit).A (black)smith is a metal smith who creates objects from wrought iron or steel by forging the metal, using tools to hammer, bend, and cut.

‘ஸ்மைட்’ என்றால் அடிப்பது, மிகுந்த பலமாக அடித்துத் தாக்குதல் என்று பொருள்படும். ‘ப்ளாக்ஸ்மித்’ என்றால் சுத்தியல் முதலிய கருவிகளைக் கொண்டு இரும்பை அடித்து, வளைத்து பல்வேறு இரும்பால் ஆன பொருட்களை பட்டறையில் தயாரிக்கும் தொழிலாளி.

ஆங்கில அகராதிகள் குறிப்பிடும் ‘Smite’ என்ற வினையானது, தமிழ்ச் சொல்லான 'சமட்டு' என்பதன் திரிபு ஆகும். தமிழ் மொழியில், ‘சமட்டுதல்’ என்றால் ஓங்கி அடித்தல், கொல்லுதல், மொத்துதல் எனப் பொருள். சமட்டுதலை சவட்டுதல் என்றும் சொல்வர். சவட்டை, சாட்டை என்ற சொல்லின் உட்பொருளும் ஓங்கி அடிப்பதுதான்!

சமட்டும் வினைக்குப் பயன்படும் கருவியே நம் மொழியில் ‘சமட்டி’ என்பது சம்மட்டி எனப் பெயர் பெற்றது. சமட்டு > சமட்டி > சம்மட்டி.

பட்டறைகளில் ஓங்கியடிக்கப் பயன்படும் பெரிய வகை சுத்தியலுக்கு தமிழ்மொழியில் சம்மட்டி என்ற பெயருண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததுதானே!

சமட்டுபவனே (One who smites) ஸ்மித். சம்மட்டி அடிப்பவனே ஸ்மித் என ஆங்கிலத்தில் அழைக்கப்படுவதை தெள்ளத் தெளிவாக நாம் விளங்கிக்கொள்ள முடியும்.

சமட்டு > SMITE > Smith… என தமிழ்ச்சொல்லினை மூலமாகக் கொண்டு பிறந்த பெயரே ஸ்மித் ஆகும்.

பெயர்களின் மூலம் மட்டுமல்ல, அவர்களின் கொல்லர் தொழிலின் மூலமே நம்மிடமிருந்து சென்றதும் இதன் மூலம் உறுதியாகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com