உலக நாடுகள் அனைத்துமே தன்னாடு வளர்ச்சி அடைய வேண்டும், முன்னேற்றம் காண வேண்டும், அமைதி நிலவ வேண்டும் என பல்வேறு விதமான வழிமுறைகளையும் திட்டங்களையும் நிறைவேற்றி வருகின்றன. உலகிலேயே நம் நாடுதான் முதலிடத்தில் இருக்க வேண்டும் அல்லது முதல் ஐந்து இடத்தில் ஆவது இருக்க வேண்டும் என உலக நாடுகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
மத ரீதியான அச்சுறுத்தல்கள் குற்ற சம்பவங்கள் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் பல நிகழ்வுகள் எல்லா நாடுகளிலும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு எந்த நாடும் விளக்கல்ல. ஆயினும் உலக அளவில் ஐந்து நாடுகள் அமைதியான நாடுகள் என உலகளாவிய அமைதி குறியீட்டின் (GPI) முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளது.
1. ஐஸ்லாந்து
உலகளாவிய அமைதி குறியீட்டின் (GPI) படி, ஐஸ்லாந்து தொடர்ந்து 15வது ஆண்டாக உலகின் மிகவும் பாதுகாப்பான நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 3,82,000 என்ற சிறிய மக்கள்தொகையைக் கொண்ட இந்த நாட்டில், மக்களின் உயர்தர வாழ்க்கை, நல்ல கல்வி மற்றும் குறைந்த மக்கள் தொகை காரணமாக இங்கு மிகக் குறைவான குற்றங்களே நடக்கிறது. இந்த நாட்டின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் அவர்களுக்கென்று சொந்த இராணுவம் கூட இல்லை.
2. டென்மார்க்
உலகின் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான நாடுகளில் டென்மார்க் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த நாடு அதன் குடிமக்களுக்கு சமத்துவத்தை அளிக்கிறது. இதனால் சமூக வெறுப்பு போன்ற சிக்கல்கள் இங்கு அறவே இல்லை. டென்மார்க் அரசியல் நம்பிக்கை மற்றும் நேர்மையை அடிப்படையாகக் கொண்டது. அதனால்தான் மக்கள் இங்கு பாதுகாப்பாக உள்ளனர்.
3. அயர்லாந்து
பெரிய போராட்டங்களுக்கும், புரட்சிக்கு பிறகு பிறந்திருந்தாலும் இன்று அயர்லாந்து உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகும், இங்கு குற்ற விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. இந்த நாடு அதன் குடிமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் பாதுகாப்பான சூழலை வழங்குகிறது. அதனால்தான் உலகின் மிகவும் சுற்றுலா நட்பு நாடுகளில் ஒன்றாக அயர்லாந்து உள்ளது.
4. நியூசிலாந்து
உலகின் நான்காவது பாதுகாப்பான நாடாக நியூசிலாந்து உள்ளது, இங்கு குற்ற விகிதம் மிகவும் குறைவாக உள்ளது, இங்கு வன்முறை குற்றங்கள் கிட்டத்தட்ட பூஜ்ஜியம் என்ற நிலையில் உள்ளது. நியூசிலாந்து மக்கள் மிகவும் வெளிப்படையானவர்களாகக் கருதப்படுகிறார்கள், மேலும் அந்த நாடு கருத்துச் சுதந்திரம், சமத்துவம் மற்றும் பேச்சுரிமை போன்றவற்றை ஊக்குவிக்கிறது.
5. ஆஸ்திரியா
முதல் உலகப்போர் தொடங்கிய இடமாகவும், இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாஜி ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருந்த ஆஸ்திரியா, இன்று அதன் குடிமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. குறைந்த குற்ற விகிதம் கொண்ட ஆஸ்திரியாவில் வன்முறை குற்றங்கள் மிகவும் அரிதாகவே நடக்கிறது.
இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
GPI அறிக்கையின்படி, 163 நாடுகளில் இந்தியா 116வது இடத்தில் உள்ளது. மேலும் சமீபத்திய ஆண்டுகளில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டாலும், மத மோதல்களும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இப்போதும் ஆபத்தான குற்ற விகிதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நிலவும் குற்ற விகிதங்கள் பல வளர்ந்த நாடுகளை விட மிக அதிகமாக உள்ளது.
ஜாதி மத மோதல்கள் குற்ற சம்பவங்கள் என அனைத்தையும் கட்டுப்படுத்த வேண்டியது ஒரு அரசின் கடமை என்றாலும் நாடு முன்னேறுவதற்கான அடிப்படை காரணம் பொதுமக்களாகிய நம் கையிலும் இருக்கிறது. உங்களை குறைத்து மத நூல்களை குறித்து நம் நாட்டை அமைதியான நாடாக மாற்றும் சூழ்நிலை குறைக்கும் பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல பெரும் பொறுப்பு மக்களாகிய நம்மிடமும் உள்ளது.