
அக்கால கட்டத்தில், கடிகாரங்களின் வருகைக்கு முன்பு, ஊரின் முக்கிய இடங்களில் மணிக்கூண்டுகள், நேரம் காட்டும் கருவிகள் நிறுவப்பட்டிருந்தன. சங்கு ஒலிப்பதன் வாயிலாகவும் நேரத்தை அறிவதும் உண்டு. தற்போது மணிக்கூண்டுகள் காலத்தின் பொக்கிஷமாக கருதப்படுகின்றன. இந்த வகையில் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற சில மணிக்கூண்டுகள் குறித்து பார்ப்போம்.
நாட்டின் மிக உயரமான மணிக்கூண்டு இதுதான். 67 மீட்டர் உயரம் கொண்டது.1837 இல் திறக்கப்பட்ட இந்த கோபுரம் 16 அடி நீளம் கொண்டது. முகலாய விக்டோரியன் கட்டடக் கலையின் கலவை இது. இதன் பாரம்பரிய ஊசல் 14 அடி நீளம் கொண்டது. கடிகாரத்தின் டயல் 12 முழு தங்கப் பூவால் ஆனது. அதனை சுற்றி மணிகள் கொண்டது. நடுவில் 27 ஆண்டுகள் கடிகாரம் இயங்காமல் நின்றது. ஒரு வழியாக சரி செய்யப்பட்டு 2019 மீண்டும் கடிகாரம் இயங்கி வருகிறது.
மகாராஜா சர்தார் சிங்கால் கட்டப்பட்டது இந்த மணிக்கூண்டு. நகரின் மையத்தில் சுமார் 70 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இதன் உச்சிக்கு சென்று ஜோத்பூரின் அழகை ரசிக்கலாம்.
உத்தரப்பிரதேசத்துக்கு உட்பட்ட மிர்சாபூரில் இந்த கடிகார கோபுரம் அமைந்துள்ளது. பாரம்பரிய கட்டடக்கலையை பின்பற்றி இதுகட்டப்பட்டுள்ளது. ஆயிரம் கிலோ உலோகம் அலாய் மணியுடன் கூடிய இக்கோபுரம் 1791ல் கட்டி திறக்கப்பட்டது. இந்திய நிலையான நேரம் கடிகாரத்தின் 82.5 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையில் இருந்து கணக்கிடப்படுகிறது.
உத்தரகாண்டின் ஹரித்துவாரில் உள்ள இந்த மணிக் கூண்டை ராஜா பில்லா கோபுரம் என அழைப்பார்கள்.1938 இல் ராஜா பல் தேவ் தாஸ் பிர்லாவால் கட்டப்பட்டது. மணிக் கூண்டு உள்ள இந்த இடம் மாளவியா தீவு என அழைக்கப்படுகிறது. கங்கையின் பிரபல குளிக்கும் கரையான ஹர்கி பௌரி படிக்கட்டுகளுக்கு எதிரே இது உள்ளது.
1927 -ல் மைசூரு மன்னர் நான்காம் கிருஷ்ணராஜ உடையார் ஆட்சியின் வெள்ளி விழாவை நினைவு கூறும் வகையில் நிறுவப்பட்டது. 'தோட்டா கடியாரா' என அழைக்கின்றனர். இதன் பொருள் 'பெரிய கடிகார கோபுரம்' என்பதாகும். ஆங்கில தேவாலய பாணிகளின் கட்டடக் கலவையில் இது கட்டப்பட்டுள்ளது. 75 அடி உயரம் கொண்டது.
1896 ல் கட்டி முடிக்கப்பட்ட இதனை ராவ்புரா கோபுரம் எனவும் அழைப்பர். பரோடா மன்னர் மூன்றாம் சாயாஜிராவ் ஹெய்க் வாட்டின் ராணி முதல் மனைவி சிம்னா பாய் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. இந்தோசராசனிக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.
தில்லி சப்ஜி மண்டி அருகே உள்ள இதனை ராம் ரூப் கடிகார மணிக்கூண்டு எனவும் அழைப்பர். 50 அடி உயரமுள்ள இந்த மணி கூண்டு 1941 இல் கட்டி முடிக்கப்பட்டது. ராம் சொரூப் என்ற சுதந்திர போராட்ட வீரரின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது இக்கட்டடம். இது ஆர்ட் டெகோ பாணியில் கட்டப்பட்டுள்ளது.