உலகளவில் பிரபலமான இந்திய விளையாட்டு மைதானங்கள்... வரலாறு படைத்த அரங்கங்கள்!

உலகளவில் பிரபலமான இந்திய விளையாட்டு மைதானங்கள்
Stadiums in india
Stadiums in india
Published on

இந்தியாவில் பிரபலமான கிரிக்கெட் மைதானங்கள் மற்றும் பிற விளையாட்டு மைதானங்கள் உலக அளவில் பெயர் பெற்றுள்ளன. அவற்றில் நரேந்திர மோடி மைதானம், ஈடன் கார்டன், வான்கடே ஸ்டேடியம், சிதம்பரம் ஸ்டேடியம், சின்னசாமி ஸ்டேடியம், அருண் ஜெட்லி ஸ்டேடியம் போன்றவை முக்கியமானதாகும். உலகிலேயே அதிக எண்ணிக்கையில் உள்ள கிரிக்கெட் மைதானங்கள் கொண்டது என்ற பெருமையை இந்தியா பெறுகிறது. கிரிக்கெட் மைதானங்கள் தவிர பிற மைதானங்களை பற்றியும் பார்ப்போம். 

1. சால்ட் லேக் ஸ்டேடியம் 

இந்த மைதானம் கொல்கத்தா பிதான் நகரத்தில் அமைந்துள்ளது. இது உலகில் இரண்டாவது பெரிய கால்பந்து மைதானமாக கருதப்படுகிறது; மிகவும் பழமையானது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கலாம். கால்பந்து போட்டிகளுக்கு மிகவும் பெயர் பெற்ற மைதானம் ஆகும். 

2. ஈடன் கார்டன் 

இந்த மைதானமும் கொல்கத்தாவில் உள்ளது. 1864 இல் திறக்கப்பட்டது. உலகின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானம் ஆகும்.

இந்த மைதானம் ராணுவத்திற்கு சொந்தமானது என்பது இதுவரை யாரும் அறியாத ரகசியம். இந்த மைதானத்தில் 90 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கலாம். 

3. ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் 

டெல்லியில் உள்ள முக்கியமான மைதானத்தில் ஒன்று. 2010ல் காமன்வெல்த் போட்டி நடைபெற்றது. இந்த மைதானத்தில் அவ்வப்போது கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். 60,000 பேர் அமர்ந்து பார்க்கலாம். கலை நிகழ்ச்சி நடக்கும் போது ஒரு லட்சம் பேர் வரை பார்க்கும் வகையில் விரிவுபடுத்தப்படும் வசதி உள்ளது. 

4. பட்டேல் ஸ்டேடியம் 

நவி மும்பையில் நெருன் பகுதியில் அமைந்துள்ளது. 60 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கலாம். இங்கு 9 டென்னிஸ் கோர்ட்கள், நாலு பேட்மிட்டன் கோர்ட்டுகள், ஒரு ஒலிம்பிக் நீச்சல் குளம் ஆகியவை உள்ளன. கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். முதல் கிரிக்கெட் மைதானம் என்ற பெயர் பெற்றது. 

5. கலூர் சர்வதேச மைதானம் 

இந்த மைதானம் கொச்சியில் அமைந்துள்ளது. இதை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் என்றும் அழைக்கிறார்கள். 60 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி உள்ளது. முதலில் கால்பந்து விளையாடுவதற்காக கட்டப்பட்டது. பின்னர் கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. அரசு பேரணி அரசியல் பொதுக்கூட்டங்கள் பொருட்காட்சி மைதானம் ஆகிய நிகழ்ச்சிகளும் செயல்பட்டு வருகின்றன. 

6. ராய்ப்பூர் கிரிக்கெட் மைதானம் 

சத்தீஸ்கர் மாநிலத்தில் நயா ராய்ப்பூர் என்ற பகுதியில் அமைந்துள்ளது. சமீபத்தில் கட்டப்பட்ட கிரிக்கெட் மைதானம் ஆகும். சர்வதேச போட்டிகளுக்காக கட்டப்பட்டது. இந்த மைதானத்தில் 65,000 பேர் அமர்ந்து பார்க்கலாம். 

7. சின்னச்சாமி ஸ்டேடியம் 

பெங்களூர் குயின்ஸ் ரோடு கப்பன் பார்க் மத்தியில் அமைந்துள்ளது.1969ல் கட்டப்பட்டது. நிறைய சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ள மைதானம் ஆகும். இதில் 70 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி உள்ளது. 

8. ராஜீவ் காந்தி ஸ்டேடியம் 

ஹைதராபாத்தில் அமைந்துள்ள சர்வதேச விளையாட்டு மைதானம் ஆகும். இந்த மைதானத்தில் 55 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி உள்ளது.

9. சுப்தரா ராய் சஹரா ஸ்டேடியம்

 இந்த மைதானம் புனே நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. 55,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதி உள்ளது. குவாஷ் பேட்மிட்டன் நீச்சல் குளம், ஸ்பா, உணவகம், மதுபான விடுதிகள் போன்ற வசதிகள் இந்த மைதானத்தில் உள்ளது. 

10. எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியம் 

சென்னை சேப்பாக்கம் இடத்தில் அமைந்துள்ளது. இதனை 'சேப்பாக்கம் மைதானம்' என்று அழைக்கிறார்கள்.1934 இல் திறக்கப்பட்டது. இந்த மைதானத்தில் 38 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கலாம். இதுவும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு புகழ்பெற்ற மைதானம் ஆகும். 

11. அருண் ஜெட்லி மைதானம் 

இந்த மைதானம் டெல்லியில் உள்ளது. இதன் முந்திய பெயர் 'பிரஷா கோட்லா மைதானம்' ஆகும். தற்போது அருண் ஜெட்லி மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1883 இல் திறக்கப்பட்டது. இந்த மைதானத்தில் 45 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி உள்ளது. 

12. பிரபோன்ஸ் ஸ்டேடியம் 

இந்த மைதானம் மும்பையில் உள்ளது.1937 இல் திறக்கப்பட்டது.  வாங்கடே ஸ்டேடியம் திறக்கப்பட்ட பின் இங்கு போட்டிகள் நடைபெறுவது நிறுத்தப்பட்டது. மற்ற எல்லா மைதானங்களும் சதுர வடிவில் இருக்கும். ஆனால் இந்த மைதானம் மட்டும் ஓவல் வடிவத்தில் இருக்கும் 20,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதி உள்ளது. 

13. மொஹாலி ஸ்டேடியம்

பஞ்சாபில் சண்டிகார் அருகில் மொகாலி என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் 26 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கலாம். மிகவும் பழமையான மைதானம்.1992 இல் சர்வதேச போட்டிகள் நடைபெற்ற மைதானம் ஆகும். 

இதையும் படியுங்கள்:
3வது T20 போட்டி: தென்னாப்பிரிகாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி..!
Stadiums in india

14. நரேந்திர மோடி ஸ்டேடியம் 

இந்த மைதானம் குஜராத் அகமதாபாத்தில் உள்ளது. முன்னர் சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானமாக செயல்பட்டு வந்தது தற்போது 'நரேந்திர மோடி மைதானம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1983 இல் கட்டப்பட்டது. ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மைதானம் ஆகும். உலக அளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என்று பெருமையை பெற்றுள்ளது இந்த மைதானம்.

இந்த மைதானங்கள் அனைத்தும் உலக தரத்தில் கட்டப்பட்டுள்ளது என்றால் மிகையாகாது. உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் இந்த மைதானங்கள் அமைந்துள்ளன. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com