
சிறிய பொருளாக பேனா இருந்தாலும், கோடிக்கணக்கான மக்களின் மனதிலும் பாக்கெட்டுகளிலும் இடம் பிடித்த அது பல சிறந்த வேலைகளை செய்கிறது. நவீன யுகத்தில் என்னதான் மொபைல் போன்கள் மடிக்கணினிகள் வந்தாலும், பேனா தனக்கென ஒரு தனி இடத்தை பெற்று தலை சிறந்த பொருளாக உள்ளது. ஒவ்வொரு மனிதனின் உணர்வுகளின் வெளிப்பாடுகள் பேனாவின் மூலமாகத்தான் உயிர்பெறுகின்றன. அந்த பேனா குறித்த வரலாறை இப்பதிவில் காண்போம்.
ஒரு நீண்ட பயணத்தை பேனாவின் வளர்ச்சி கொண்டது என்பதே உண்மையாகும். இங்கிலாந்தை சேர்ந்த ஆர்தர் ஃபோவ்லர் ஒரு மை பேனாவிற்கான முதல் காப்புரிமையை 1809ம் ஆண்டில் பெற்றார். இருப்பினும், பாரிஸை சேர்ந்த பெட்ராச் போயன்னெரோ என்பவர் உலகின் முதல் fountain பேனாவை வடிவமைத்தார். அவர் பிரெஞ்சு அரசாங்கத்திடமிருந்து 1827ல் காப்புரிமையையும் பெற்றார்.
மேலும், fountain பேனாக்கள் பெரிய அளவில் 1850களில் இருந்து தயாரிக்கப்பட்டன. இதனால் சாதாரண மக்களுக்கும் பேனாக்களை அணுகக்கூடியதாக மாற்றியது. இந்தியாவின் முதல் fountain பேனாவை 1910ல் டாக்டர் ராதிகா நாஷ் கண்டுபிடித்ததோடு காப்புரிமையும் பெற்றார்.
பேனாக்கள் பல வகைகளில் தற்போதைய காலகட்டத்தில் கிடைக்கின்றன. அதிலும் நீல மை பேனா மிகவும் பிரபலமானதாக இருக்கிறது. கருப்பு, சிவப்பு மற்றும் பச்சை போன்ற வண்ணங்களிலும் பேனாக்கள் கிடைக்கின்றன. ஆசிரியர்களால் சிவப்பு மை பேனாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஜெல் பேனாக்கள், பால்பாயிண்ட் பேனாக்கள், ஸ்கெட்ச் பேனாக்கள் மிகவும் ஸ்டைலான பேனாக்களாக இன்று அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது சந்தைகளில் இந்த பேனாக்கள்
ஒரு ரூபாயில் தொடங்கி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலை கொண்ட பிரீமியம் பேனாக்களும் கிடைக்கின்றன. சிறியதாக பேனா இருந்தாலும், அதன் பயன்பாடு மிகவும் அதிகமாகும்.
Poets Essayists Novelists என்பது பேனாவின் (PEN) முழு வடிவம் ஆகும். நாம் கணினிகளில் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தட்டச்சு செய்யுப் ஆவணத்தில் இறுதியில், கையொப்பமிட ஒரு பேனா தான் நமக்கு தேவைப்படுகிறது.
'கல்வி கற்றவர் இரண்டு கண்ணுடையவர். கல்வி கல்லாதவர் முகத்தில் இருந்து புண் உடையவர்' என்ற வள்ளுவரின் கூற்றுக்கிணங்க கற்றவர்களின் அடையாளமாக இருக்கும் இந்த பேனாவை கல்லாதவர்களும் தெய்வமாக மதித்து வழிபடுகின்றனர் என்பதே உண்மை.