6 ஆயிரம் ஆண்டுகளாக உலகைச் சுற்றும் பஞ்சாரா மக்களின் நாடோடி வாழ்க்கை!

Banjaras People
Banjaras People

பஞ்சாராஸ் (பஞ்சாரா) இன மக்கள், வழிவழியாக கிட்டத்தட்ட 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ஆண்டுகளாக உலகின் பல நாடுகளிலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும் சுற்றித்திரிந்து நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வருபவர்கள் ஆவார்கள்.

உலகைச் சுற்றும் எவராயினும் இறுதியில் சொந்த வீட்டிற்கு வருவதையே சுகமாக நினைப்பார்கள். ஆனால், ஒரு இன மக்கள் இத்தனை ஆண்டுகளாக ஒரு நிலையான சொந்த இடம் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். 53 வெவ்வேரு பெயர்களால் அழைக்கப்படும் இந்த ஹிந்து பஞ்சாரா மக்கள், லம்படி அல்லது லமனி போன்ற மொழிகளை பேசுபவர்கள். இந்தியா மற்றும் பாகிஸ்தானின் நாடோடி மக்களாகிய இவர்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பியாவிற்கும் சென்றார்கள். அகையால், இப்போது இருக்கும் பஞ்சாரா மக்கள் சிலர் ஐரோப்பா வம்சாவழியில் வந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

ஐரோப்பாவின் பல இடங்களில் அவர்கள் வெகுகாலமாக தங்கிவிட்டார்கள் என்றும் நம்பப்படுகிறது. பஞ்சாராஸ் என்ற பெயர் பஜிகா என்ற பெயரிலிருந்து வந்ததாகும். பஜிகா என்றால் வர்த்தகம் அல்லது தொழில் என்று பொருள். மேலும் பஞ்சாரா மக்களில் சிலர், யூதர்களாக எகிப்த் வந்தவர்கள் என்றும், பின் எகிப்த் மற்றும் பெர்ஸியாவிலிருந்த யூதர்கள், இந்தியாவுக்கு வந்த இஸ்லாமியர்களால் அழைத்துவரப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக, தொழில்களை அடிப்படையாகக்கொண்டே சமூகங்கள் பிரிக்கப்பட்டன. இப்போது பஞ்சாரா இன மக்களை பெரும்பாலானோர், குறிச் சொல்பவர்களாகவே பார்க்கிறார்கள். ஆனால், அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உப்பு வியாபாரம், சரக்குகளை ஓர் இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு சென்று ஏற்றுமதி, இறக்குமதி செய்வது, கால்நடைகள் வளர்ப்பது போன்ற தொழில்களையே செய்து வந்தார்கள். ஆகையாலே நாடு விட்டு நாடு சென்று நாடோடிகளாக வாழ்ந்தார்கள்.

அதேபோல், பெண்கள் கைவினை நகைகளை செய்து விற்றார்கள். அவர்களுக்கு இதுதான் நிரந்தரமான தொழில் என்று எதுவும் இல்லை, எந்த இடத்தில் என்ன வேலை செய்தால், அடிப்படை வாழ்க்கையாவது வாழ முடியும் என்று யோசித்து அனைத்து வேலைகளையும் செய்வார்கள். ஆகையாலே அவர்கள் அனைத்திலும் கைத்தேர்ந்தவர்களாக விளங்கினார்கள். இன்னும் சொல்ல போனால், கற்களை உடைப்பதிலிருந்து, இரும்பை உருக்குவது வரை அனைத்து வேலைகளையுமே செய்வார்கள்.

பிற்பாடு, சில பஞ்சாரா மக்கள் தங்களுக்கென ஒரு சிறு இடமும் நிலமும் வாங்கிப்போட்டு விளைச்சல் செய்து பசியைப் போக்கிக் கொண்டார்கள். இவர்கள் பொதுவாக, அவர்களுடைய இனத்திற்குள்ளேயே தான் திருமணம் செய்துக் கொள்வார்கள். திருமணம் ஆன பெண்கள் கைப்பட்டைகள் அணிந்துக் கொள்வது வழக்கம்.

பஞ்சாரா மக்களில் பெரும்பாலும் ஹிந்து கடவுள்களையே வழிப்படுகிறார்கள். பாகிஸ்தானில் சிறிது காலம் வாழ்ந்த பஞ்சாரா மக்கள் இஸ்லாமிய மதத்தையும், சிலர் சீக்கிய மதத்தையும் பின்பற்றுகிறார்கள். மேலும், எகிப்த் பெர்சியா போன்ற நாடுகளில் இருந்து வந்த பஞ்சாரா மக்கள், எந்த மதத்தையும் பின்பற்றாமல், எந்த மதத்தின்மீதும் நம்பிக்கை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

இந்த பெண்கள் தங்கள் கூந்தலை முடியமாட்டார்கள். ஆண்கள் முன் கடந்து செல்லக்கூட மாட்டார்கள். பஞ்சாரா மக்களில் விபச்சாரத்தில் ஈடுப்படும் பெண்களைக் கண்டறிந்தாள், அவர்களை உயிருடன் புதைக்கும் வழக்கமும் இருந்து வருகிறது. தெரியாதவர்கள் அருகில் நிற்கும்போது முக்காடு போடும் வழக்கத்தைப் பின்பற்றுபவர்கள், பஞ்சாரா மக்கள்.

இதையும் படியுங்கள்:
மோனாலிசா ஓவியத்தின் இன்றைய மதிப்பை கேட்டால் அசந்துதான் போயிடுவீங்க!
Banjaras People

இப்படி நிலையாக ஒரு சொந்த இடமில்லாமல், பல பகுதிகளில் சுற்றித்திரிவதால், வளர்ந்த நாகரீக வாழ்க்கையில் கூட, அவர்களால் கல்வி பயில முடியவில்லை. அவர்களுக்கென்று சொந்த எழுத்து மொழி என எதுவும் இல்லை. அந்தந்த மாநிலங்களில் அந்த மக்கள் எழுதும் எழுத்துக்களைப் புரிந்துக்கொள்பவர்கள், அவர்கள். அவர்களுக்குள் பேசுவதற்கு மட்டுமே லம்படி மொழியைப் பயன்படுத்துவார்கள்.

நாடோடி வாழ்க்கையில் பல இன்னல்களை அவர்கள் சந்தித்தாலும், அந்த வாழ்க்கையையே அவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com