Red Puneri pagadi
Puneri pagadi

மகாராஷ்திராவின் பெருமையாகக் கருதப்படும் Puneri pagadi தலைப்பாகை!

Published on

புனேரி பகடி என்றழைக்கப்படும் புனேரி தலைப்பாகை, இந்தியாவின் மகாராஷ்திரா மற்றும் புனே ஆகிய மாநிலங்களின் பாரம்பரிய தலைப்பாகையாகும். புனேவின் கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் இந்த தலைப்பாகை மராட்டிய சமூகத்தைத் தொடர்புடையாத விளங்குகிறது.

புனேரி பகடி என்பது 17 முதல் 19ம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆட்சிப்புரிந்த முக்கிய பேரரசு மராட்டிய சாம்ராஜ்ஜியத்தின் அடையாளமாகும். மராட்டிய வீரர்கள் பெரும்பாலும் போர்களிலேயே இதனைப் பயன்படுத்தினார்கள். ஏனெனில், போர் புரியும்போது சூரிய ஒளியிலிருந்து அவர்களை காக்கும் முக்கிய பொறுப்பு அந்தத் தலைப்பாகைக்கு இருந்ததாகக் கருதினார்கள். அதேபோல், தலையை நோக்கி ஆயுதம் வரும்போது, ஒரு குஷனாக செயல்போட்டு அவர்களின் அரணாக விளங்கும் என்றும் நம்பினார்கள். இவையனைத்தையும் விட, அவர்கள் இந்தத் தலைப்பாகை அணியும்போதுதான் தைரியமாக உணர்ந்ததாக சொல்லப்படுகிறது.

மராட்டியர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கிய இந்தத் தலைப்பாகை, அவர்களின் தனித்துவமான தலைக்கவசமாக மாறியது. பின்னர் அந்தத் தலைப்பாகைகளில் அதிக அளவு டிசைன் பயன்படுத்தப்பட்டு ஆடம்பரத்தின் சின்னமாகவும் மாறியது.

இந்தப் பெரிய மாற்றத்திற்கு ஆணி வேராக இருந்தவர்கள், மராட்டிய பேரரசர்களின் முக்கிய பிரதமர்களாக இருந்த பேஷ்வாக்கள் ஆவார்கள். இவர்கள் இருந்த காலத்திலேயே, புனேரி பகடி பல வடிவமைப்புகளுடனும், டிசைன்களுடனும், பெரியதாகவும் மாற்றப்பட்டு மராட்டியத்தின் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியது. இந்த பேஷ்வாக்களே மராட்டியர்கள் அனைவரும் தலைப்பாகை அணிய வேண்டும் என்று ஊக்குவித்தார்கள்.

அதன்பின்னர், ஆங்கிலேயர்களால் பல சவால்களை சந்தித்தனர், தலைப்பாகை அணிந்த மகாராஷ்திரா மக்கள். ஆம்! ஆங்கிலேயர்கள், அவர்கள் தலைப்பாகை அணிவது கிளர்ச்சி மற்றும் எதிர்ப்பின் அடையாளம் என்று சொல்லி அவர்களை பல வழிகளில் துன்புறுத்தினர். இருப்பினும், பலர் தங்கள் தலைப்பாகைகளை கலட்டவே இல்லை. ஆனால், சிலர் தங்கள் உயிருக்கு பயந்து கழட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆகையால், அதன் பயன்பாடு குறைந்தது என்றாலும், சுதந்திரத்திற்கு பிறகு, அவர்கள் சுதந்திரமாக புனேரி பகடி தலைப்பாகையை அணிந்தார்கள். இந்த நவீன காலத்தில் அனைவரும் எப்போதும் தலைப்பாகை அணிகிறார்களா என்று கேட்டால், அது சந்தேகம்தான். ஆனால், முக்கிய விழாக்களுக்கு, பண்டிகைகளுக்கு, திருமண விழாக்களுக்கு கட்டாயம் அனைவருமே அணிந்துக் கொள்வார்கள்.

இதையும் படியுங்கள்:
வாடிகன் நகரம்: ஊர் சிறுசு; சுவாரசியம் பெரிசு!
Red Puneri pagadi

நீண்ட பட்டுத் துணியால் செய்யப்படும் இந்த புனேரி பகடி தலைப்பாகையை, அதில் தேர்ச்சி பெற்றவர்கள் தான் கட்ட இயலுமாம். இரண்டு அடிக்கும் நீளமாக செய்யப்படும் இந்த துணியில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை பயன்படுத்தியே டிசைன் செய்வார்கள்.

முன்னர் கூறியது போலவே, இந்த நவீனக் காலங்களில் புனேரி பகடி தலைப்பாகை பயன்பாடு சற்றுக் குறைந்ததால், இதற்கான விழிப்புணர்வுகள், பட்டறைகள் போன்றவற்றின் மூலம் புனேரி பகடியின்  மகத்துவத்தை இன்றைய இளைஞர்களுக்கு தெரிவித்துதான் வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com