ஊமத்துரை தஞ்சம் புகுந்த திருமயம் கோட்டை!

Thirumayam Fort
Thirumayam Fort

வெளிநாட்டு சுற்றுலா வாசிகள் தேடிச் செல்லும் ஒரு சுற்றுலா இடம்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் கோட்டை. ஆனால், ஒரு காலத்தில் இந்தக் கோட்டை எப்படி இருந்தது தெரியுமா?

பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர் அரசர்கள், விஜயாலய தேவர், சுந்தரபாண்டிய விஜயாலய தேவர் போன்ற பல குறுநில மன்னர்களால் இந்த திருமயம் பகுதி ஆளப்பட்டது. 16 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் ராமநாதபுரம் சேதுபதிகள் திருமயம் கோட்டையை உள்ளடக்கிய சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள்.

இது 1687 ல் ராமநாதபுரம் ரகுநாத தேவர் ராஜாவால் கட்டப்பட்டது. பின்னர், இது அவரது மைத்துனரான ரகுநாத ராய தொண்டைமானின் பராமரிப்பிற்கு வழங்கப்பட்டது. அவர் 1730 வரை புதுக்கோட்டை ராஜ்யத்தை ஆட்சி செய்தார்.

எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்த போது ஆங்கிலேயர்கள் வந்தார்கள். இந்தக் கோட்டை தனது வலிமையினால், பல மாதக் காலங்கள் ஆங்கிலேயர்களை உள்ளே வர விடாமல் தடுத்தது. ஆனால், பிரிட்டிஷார்களின் வலிமைமிக்க பீரங்கிகள் சில காலத்திலேயே கோட்டையை வீழ்த்தியது. கோட்டை அவர்கள் கைக்குச் சென்றது.

வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்த மறுத்தார், மேலும் அதைக் கோர வந்த தளபதியையும் கொன்றார். இதன் விளைவாக, அவர் தேடப்படும் மனிதராகக் குறிக்கப்பட்டு, இறுதியாகப் பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இந்தப் போரில் மற்றொரு வீரரான அவரது சகோதரர் ஊமத்துரை, திருமயம் கோட்டையில் தஞ்சம் புகுந்தார். அதிலிருந்து அந்தக் கோட்டைக்கு ஊமயன் கொட்டை என்றும் பெயர்வந்தது. ஆனால், ஊமத்துரை உள்ளூர் மக்களால் காட்டிக் கொடுக்கப்பட்டார். அதன்பின்னர் அவரும் பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். பின்னர் அந்தக் கோட்டை ஆங்கிலேயர் கட்டுப்பாட்டுக்குச் சென்றது.

இதையும் படியுங்கள்:
விவேகானந்தரும் முகமது ஷமியும்…
Thirumayam Fort

இந்தக் கோட்டை முதலில் செறிவான வட்டங்களில் ஏழு சுவர்களைக் கொண்ட 'வளையக் கோட்டையாக' கட்டப்பட்டது.  அந்த யுத்த காலத்திலும் தப்பிப்பிழைத்தவை, மத இடங்கள் மற்றும் கட்டமைப்புகள் மற்றும் கோட்டையின் வடமேற்கு பகுதியில் ஒரு சிறிய குளம். இந்த இடம் முழுவதும் ஹனுமான், சக்தி, கணபதி மற்றும் கருப்பர் போன்ற கடவுள்களின் சன்னதிகள் உள்ளன.

போர் சமயங்களில், கோட்டைக்குள் இருந்தவர்கள், தப்பிப்பதற்கு நிறைய வழிகள் இருந்தன. அதேபோல் எதிரிகள் உள்ளே நுழையாமல் இருப்பதற்கு கோட்டையைச் சுற்றி ஒரு அகழி கட்டி, அதில் விஷம் கொண்ட பாம்புகளையும் முதலைகளையும் வளர்த்தனர்.

போரில் பல பேரைக் காப்பாற்றிய இந்த திருமையம் கோட்டைக்கு தற்போது ஏராளமான சுற்றுலாவாசிகள் சென்று பார்த்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com