அழிவின் விளிம்பில் நம் பாரம்பரியக் கலைகள்... மீட்டெடுக்கும் முதன்மை நிறுவனங்கள்!

Traditional Arts India - பாரம்பரியக் கலைகள்
Traditional Arts India - பாரம்பரியக் கலைகள்AI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

பாரம்பரியக் கலைகள் ஒரு சமூகத்தின் அடையாளமும், அதன் பண்பாட்டு வரலாற்றின் உயிர்ப்பான சாட்சியும் ஆகும். அவற்றை அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்து கடத்துவதும், அழிவின் விளிம்பில் நிற்கும் கலையின் வடிவங்களை மீட்டெடுத்து உயிர்ப்புடன் வைத்திருப்பதும் இன்றிமையாத கடமையாகும்.

பாரம்பரியக் கலைகளைப் பேணி பாதுகாப்பதில் முதன்மையாக விளங்கும் தேசிய மற்றும் மாநில அளவிலான முதன்மையான சபைகள் மற்றும் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. குறிப்பாக சங்கீத நாடக அகாடமி, லலித் கலா அகாடமி, இன்டாக் (INTACH), இந்திய கலாச்சார உறவுகள் போன்றவை.

சங்கீத நாடக அகாடமி:

பரதநாட்டியம் மற்றும் கர்நாடக இசை போன்ற பாரம்பரியக் கலைகளை பாதுகாத்து வளர்ப்பதில் சென்னையின் கலாச்சார சபைகள் (Sabhas) உலக அளவில் முதன்மையான இடத்தைப் பெறுகின்றன. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெறும் உலகப்புகழ் பெற்ற "சென்னை மார்கழி இசை விழா" (Madras Music Season) இந்த சபைகளின் மூலமே வழிநடத்தப்படுகிறது.

இந்திய இசை, நாடகம் மற்றும் பாரம்பரிய நடன வடிவங்களை ஆதரிக்கும் இந்தியாவின் தலைசிறந்த பண்பாட்டு நிறுவனம் 1927 இல் தொடங்கப்பட்டது. சென்னை மியூசிக் அகாடமி கர்நாடக இசை மற்றும் பரதநாட்டிய உலகின் உச்சகட்ட அங்கீகாரமாக கருதப்படுகிறது. இங்கு வழங்கப்படும் "சங்கீத கலாநிதி" விருது, பாரம்பரிய இசை உலகிலேயே மிக உயரிய விருதாக போற்றப்படுகிறது.

Traditional Arts India - பாரம்பரியக் கலைகள்
Traditional Arts India - பாரம்பரியக் கலைகள்Ai Image

காட்சிக் கலைகளின் வழியே பாரம்பரியக் கலைகள் காக்கும் லலித் கலா அகாடமி:

ஓவியம், சிற்பம் மற்றும் காட்சிக் கலைகளை (Visual Arts) மேம்படுத்துவதற்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட தேசிய கலை அகாடமி. இது இந்திய அரசாங்கத்தின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பாகும். 1954 ஆம் ஆண்டு புது டெல்லியில் நிறுவப்பட்ட இந்த அமைப்பு, பாரம்பரிய, சமகால மற்றும் பழங்குடியின கலைகள் உட்பட அனைத்து வகையான காட்சிக் கலைகளையும் பேணிப் பாதுகாத்து மேம்படுத்துவதை முதன்மையாகக் கொண்டுள்ளது.

ஓவியம், சிற்பம், கிராபிக்ஸ் மற்றும் பிற காட்சி கலைகளுக்கான ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கிறது. திறமையான கலைஞர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு நிதியுதவி, பெல்லோஷிப் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கி கௌரவிக்கிறது.

தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கலைக் கண்காட்சிகளை நடத்தி, கலைஞர்களுக்கு சிறந்த மேடையை அமைத்துக் கொடுக்கிறது. புது டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை உட்பட லக்னோ, கொல்கத்தா மற்றும் புவனேஸ்வர் ஆகிய இடங்களில் பிராந்திய மையங்களைக் கொண்டுள்ளது.

உலக அரங்கில் பாரம்பரியக் கலைகள் கொண்டு சேர்க்கும் இந்திய கலாச்சார உறவுகள் (ICCR):

பாரம்பரியக் கலைகளை உலக அரங்கில் கொண்டு சேர்க்கும் இந்திய அரசின் முதன்மை அமைப்பு. இது பாரம்பரியக் கலைகளை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தவும், கலாச்சார பரிமாற்றங்களை மேற்கொள்ளவும் செயல்படுகிறது.

இந்திய பாரம்பரிய கலைகள், இசை, நடனம் மற்றும் கைவினைப் பொருட்களை சர்வதேச அளவில் பிரபலப்படுத்துகிறது. உலகெங்கிலும் உள்ள கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க திறமையான இந்தியக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறது. 180க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்தியக் கலை, கலாச்சாரம் மற்றும் பிற படிப்புகளுக்காக ஆண்டுதோறும் 3000-க்கும் அதிகமான உதவித்தொகைகளை வழங்குகிறது.

இன்டாக் (INTACH):

பாரம்பரிய கலைகளுக்கு கலாச்சாரத்தை பாதுகாப்பதற்கும் இந்தியாவில் உள்ள முதன்மையான அமைப்பு இன்டாக் (Indian National Trust for Art and Cultural Heritage) ஆகும். இது 1984 ஆம் ஆண்டு புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட ஒரு தன்னாட்சி லாப நோக்கற்ற அமைப்பாகும்.

பாரம்பரிய கலைகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாப்பதில் ஈடுபட்டு வரும் முதன்மை தொண்டு நிறுவனம் இது. கலை, கட்டடக்கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை ஆவணப்படுத்தி பாதுகாக்கும் இந்திய தேசிய அறக்கட்டளை. அழிந்து வரும் பாரம்பரிய கலைகள், ஓவியங்கள் மற்றும் கைவினைப் பொருட்களை ஆவணப்படுத்தி மீட்டெடுக்க உதவுகின்றன. நாட்டின் தொன்மையான காகிதக் கலைகள், மண்பாண்டங்கள், நெசவு வகைகள் மற்றும் பழங்குடியினர் கலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் 228க்கும் மேற்பட்ட நகரங்களில் இதன் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

கலாஷேத்ரா பவுண்டேஷன்:

1936 ஆம் ஆண்டு ருக்மணி தேவி அருண்டேல் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த கலாஷேத்ரா பவுண்டேஷன் பாரம்பரிய பரதநாட்டியக் கலைக்கு உலகளாவிய புதிய பரிமாணத்தை வழங்கியது.

இந்திய நாடாளுமன்றத்தால் இது ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மரபுவழிக் கல்வி மற்றும் குருகுல முறையிலான நுண்கலை வகுப்புகளுக்கு புகழ்பெற்றது.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்:

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் முதலில் 1955 ஆம் ஆண்டு 'தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம்' என்ற பெயரில் தொடங்கப்பட்டது. பின்னர் 1973 ஆம் ஆண்டில் இந்த அமைப்பு முறைப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டு 'தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்' என்று அழைக்கப்பட்டது. தமிழகத்தின் பாரம்பரிய கலைகள், நாடகங்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைகளை பேணிப் பாதுகாக்கும் மாநில அளவிலான அமைப்பு இது.

logo
Kalki Online
kalkionline.com