பாரம்பரிய விளையாட்டுகள் கற்றுத்தரும் வாழ்க்கைப் பாடங்கள்!

Traditional games teach life lessons
Traditional games teach life lessons

ந்திய கலாச்சாரம் என்றாலே, அதில் ஏராளமான அர்த்தங்கள் அடங்கியிருக்கும். இந்தியாவில் இருக்கும் கலைகளையும், விளையாட்டுகளையும், கட்டடங்களையும் நமது முன்னோர்கள் அர்த்தம் இல்லாமல் உருவாக்கியது இல்லை. பாரம்பரிய விளையாட்டுகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

விளையாட்டுகள் என்றாலே ஏதோ ஒரு பலனை நமக்குக் கட்டாயம் தரும். மைதானத்தில் விளையாடும் விளையாட்டுகள் நம் உடல் ஆரோக்கியத்தைக் காக்கும். அதேபோல், வீட்டில் விளையாடக்கூடிய விளையாட்டுகள் நமது நினைவாற்றலைக் காக்கும்.

நமது முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்தையும் நினைவாற்றலையும் தாண்டி வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுத்தரும் விளையாட்டுகளை உருவாக்கியுள்ளனர். அதுவும் இந்த வாழ்வியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட விளையாட்டுகள் ஆண்கள், பெண்கள்; சிறியவர், பெரியவர் என்று எந்தப் பாகுபாடுகளும் இல்லாமல் உருவாக்கப்பட்டன. காலங்கள் சென்ற பின்னும் எத்தனையோ விளையாட்டுகள் வந்துவிட்டன. ஆனாலும், இந்த பாரம்பரிய விளையாட்டுகளை இன்றும் சலிக்காமல் மக்கள் விளையாடித்தான் வருகின்றனர். ஆம்! என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் பாரம்பரிய விளையாட்டுகளை மொபைல் போனிலும் விளையாடும் வசதிகளும் இப்போது வந்துவிட்டன. இது காலத்தின் சுழற்சியே ஆயினும், பாரம்பரிய விளையாட்டுகள் இன்னும் அதன் முக்கியத்துவத்தை இழக்காமல் இருப்பதைத்தான் உணர்த்துகிறது. அந்த வகையில் நமது பாரம்பரிய விளையாட்டுகள் காலம் காலமாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதற்கான காரணம் அதனுடைய மகத்துவம்தான்.

பாரம்பரிய விளையாட்டுகள் கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடங்கள்:

பல்லாங்குழி
பல்லாங்குழிhttps://twitter.com/

பல்லாங்குழி: 14 குழிகள் கொண்ட இந்த விளையாட்டில் ஒவ்வொரு குழியிலும் 5 காய்கள் வைத்து விளையாடும் விளையாட்டு. இது வாழ்வில் வெற்றியோ தோல்வியோ எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதை குறிக்கிறது. இப்போது நீங்கள் இருக்கும் இடம் முன்னதாக இன்னொருவர் இருந்தது, நாளை வேறொருவர் வரப் போவது. ஆகையால், எந்த இடத்தில் இருந்தாலும் பொறாமை, புகழ்ச்சி ஆகியவை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதைக் கற்றுத்தரும் விளையாட்டு இது.

பரமபதம்
பரமபதம்https://www.hindutamil.in

பரமபதம்: இது டைஸ் பயன்படுத்தி விளையாடும் விளையாட்டு. ஏணியில் ஏறியும் பாம்புக் கொத்தி இறங்கியும் என பல ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கும் விளையாட்டு. வாழ்விலும் இதுபோன்ற ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். எந்த சூழ்நிலைகளையும் சமாளிக்க வேண்டும் என்பதே இந்த விளையாட்டின் வாழ்க்கைப் பாடம்.

தாயம்
தாயம்https://www.hindutamil.in

தாயம்: இது காய் மற்றும் டைஸ் பயன்படுத்தி விளையாடும் விளையாட்டு. எத்தனை முறை ஒருவர் உங்களை வெட்டினாலும் அந்த காய் போன்று மீண்டும் முயற்சி செய்து சாதிக்க வேண்டும் என்பதே இந்த விளையாட்டின் வாழ்வியல் தத்துவம்.

சதுரங்கம்
சதுரங்கம்https://www.pothunalam.com

சதுரங்கம்: இந்த விளையாட்டு வாழ்வில் எல்லா திசைகளையும் அடைத்து, உங்களுக்கு எந்த வழிகளும் இல்லாதபோது மன உறுதியுடன் எப்படிப் போராடி வெல்வது என்பதைக் கற்றுத்தரும் விளையாட்டு.

நொண்டி விளையாட்டு
நொண்டி விளையாட்டுhttps://roar.media

நொண்டி விளையாட்டு: இந்த விளையாட்டில் ஒரு காலை மடக்கி நொண்டிக்கொண்டுத்தான் கல்லை எடுப்பார்கள். நமது வாழ்வில் எதை இழந்தாலும், இலக்கை அடையும் வழி கட்டாயம் இருக்கிறது என்பதை உணர்த்துவதுதான் இந்த விளையாட்டு.

கண்ணாமூச்சி
கண்ணாமூச்சிhttps://www.hindutamil.in

கண்ணாமூச்சி: ஒளிந்து இருப்பவர்களைக் கண்டுப்பிடிப்பதன் மூலம் நாம் பொறுமையைக் கற்றுக்கொள்கிறோம். இன்னும் சில குழந்தைகள் கண்ணாமூச்சி மூலம்தான் எண்களையே கற்றுக்கொள்கிறார்கள்.

இப்படி, பாரம்பரிய விளையாட்டுகள் மனிதர்களுக்கு வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுத்தருபவையாக உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com