வேற்றுமையிலும் ஒற்றுமை! ஆங்கில மொழியின் சில ஆச்சரியங்கள்!

unity in diversity
unity in diversity
Published on

26 எழுத்துக்களை மட்டுமே கொண்ட ஆங்கிலம், உலகப்பொது மொழியாகத் திகழ்ந்து வருகிறது. அதற்குக் காரணம், பல மொழிச் சொற்களையும் அது எடுத்துக் கொள்ளத் தயங்குவதில்லை என்பர் மொழியறிவாளர்கள்! உதாரணமாக, நம் பழந்தமிழில் உள்ள ‘கட்டு மரம்’ என்ற சொல்லை ஆங்கிலத்தில் ‘Catamaran’ என்று அழைப்பதைக் கூறலாம் என்பர்.

பல எதிர்மறைச் சொற்களுக்கும், அதைப்போலவே பல வேறுபட்ட சொற்களுக்கும் ஒரே எண்ணிக்கையிலான எழுத்துக்களே வருவதைப் பார்க்கையில் வியப்பாக இருக்கிறது! அவை எந்தெந்தச் சொற்கள் என்றுதானே யோசிக்கிறீர்கள்? ரொம்ப யோசிக்க வேண்டாம் பாஸ்!

அவற்றைச் சொல்லத்தானே இந்தக் கட்டுரையே! கட்டுரையைப் படித்தாலே போதுமே! சாரி! படித்தால் மட்டும் போதாது!இதைப்போல இன்னும் பல வார்த்தைகள் இருக்குமல்லவா?அவற்றைக் கண்டு பிடிக்க, ஆர்வமுள்ளவர்கள் முயன்றால், அது அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு வழிகோலும்!

கண்டுபிடித்தால் கமெண்ட் செய்யுங்கள். நாங்களும் தெரிந்துக்கொள்கிறோம். பள்ளி,கல்லூரி மாணவர்கள் முயன்றால், நிறைய வார்த்தைகளைத் தெரிந்து கொண்டு, ஆங்கிலத்தில் எளிதாக உரையாடலாம்; கட்டுரைகள் எழுதலாம்!

வாருங்கள் கட்டுரைக்குள் போவோம்!

Cry (அழுதல்) க்கும் மூன்று; அதுபோல Joy(மகிழ்ச்சி)க்கும் மூன்றே!         

Life(வாழ்வு)க்கும் நாலெழுத்து; அதைப்போலவே Dead(சாவு)க்கும் நாலெழுத்து!

Love(நேசித்தல்)க்கும் அதுவே; Hate(வெறுத்தல்)க்கும் நாலெழுத்தே!

Hurt(காயப்படுத்தல்)க்கும் நாலு; Heal(குணமாக்கல்)க்கும் நாலே!

Rich(பணக்காரர்)க்கும் அதுவே; Poor(ஏழை)க்கும் நாலே!

Pass(வெற்றி)க்கும் நாலு; அதுபோல Fail(தோல்வி)க்கும் நாலு!

Good(நல்லது)க்கும் நாலு; Evil(கெட்டது)க்கும் நாலு.

Adult(வயது வந்தவர்)க்கும் ஐந்து; அதுபோல Youth(இளைஞர்)க்கும் ஐந்து!

Black(கருப்பு)க்கும் ஐந்து; White(வெள்ளை or வெளுப்பு)க்கும் ஐந்து.

Bible(பைபிள்)Geeta(பகவத் கீதை) Quran(குரான்)-அனைத்துக்கும் ஐந்தே!

Lying(பொய் சொல்லல்) க்கும் Truth(உண்மை பேசல்)க்கும் ஐந்தே!

Below(கீழே)க்கும் ஐந்து; அதுபோலவே Above(மேலே)க்கும் ஐந்து.

இதையும் படியுங்கள்:
7 ஆண்டுகளாக சொன்ன சொல் மாறாத 'யூத் ஹீரோ' SK ... குவியும் வாழ்த்துகள்...
unity in diversity

Angry(கோபம்)க்கும் ஐந்து; Happy(மகிழச்சி)க்கும் ஐந்து.

Right(சரி)க்கும் ஐந்து; Wrong(தவறு)க்கும் அதுவே.

Church(தேவாலயம்), Mosque(மசூதி), Temple(கோயில்), Mandir(ஆலயம்) என்ற அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் ஆறு எழுத்துக்களே!

Enemies(எதிரிகள்) மற்றும் Friends(நண்பர்கள்) ஆகியவற்றுக்கு ஏழு எழுத்துக்களே!

Failure(இயங்காமை)க்கும், Success(அடுத்தபடிக்கு முன்னேறல்)க்கும் ஏழு எழுத்துக்களே!

Negative(எதிர்மறை)க்கும் Positive(நேர்மறை)க்கும் எழுத்துக்கள் எட்டே!

Permanent(நிரந்தரம்)க்கும் Temporary(தற்காலிகம்)க்கும் எழுத்துக்கள் ஒன்பது!

Knowledge(அறிவு) மற்றும் Ignorance(அறியாமை)க்கும் எழுத்துக்கள் ஒன்பதே!

‘வேற்றுமையிலும் ஒற்றுமை என்பது உலக அமைதிக்கு வழி வகுக்கும்’ என்பர் பெரியோர்! நம் இந்திய நாடு வெவ்வேறு மொழிகளையும்,மதங்களையும், கலாச்சாரங்களையும் கொண்டிருந்தாலும் நாம் அனைவரும் அந்த வேற்றுமையை மறந்து ஒற்றுமையுடன் வாழ்வதால்தான் உலகில் மதிக்கப்படுகிறோம்!

வேற்றுமையிலும் ஒற்றுமை காண்போம்! உலக அமைதிக்கு வழி வகுப்போம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com