சீனர்களின் வாஸ்து சாஸ்திரம் ஃபெங் சுய்ங்கின் பயன்கள்!

Uses of Chinese Vastu Shastra Feng Shui
Uses of Chinese Vastu Shastra Feng Shuihttps://www.magicbricks.com

ம் நாட்டில் எப்படி வாஸ்து சாஸ்திரங்கள் உள்ளதோ, அதேபோல சீனாவில் ஃபெங் சுய் என்பது மிகவும் பிரபலமானது. ஃபெங் சுய் என்றால், தண்ணீர் மற்றும் காற்றுக்கு வழிவகுக்கக் கூடியது என்று பொருள். தேவையில்லாத பொருட்களை களைந்து வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை பரவச் செய்வதற்கான முறையாகும். நிறம், பொருள், இடம், ஒளி ஆகியவற்றை மாற்றுவதால் பாசிட்டிவ் எனர்ஜியை வீட்டில் உருவாக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

ஃபெங் சுய்ங்கின்படி வீட்டில் உள்ள பொருட்களையும், நிறத்தையும் மாற்றுவதால் நல்ல பாசிட்டிவ் எனர்ஜி உருவாவதோடு பணமும், செல்வம் வந்து சேரும் என்றும் நம்பப்படுகிறது. ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு இயற்கையாக உருவாகிய மூலப்பொருளான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றை குறிக்கிறது. நிறங்கள் நம் உணர்வுகளோடு தொடர்புடையது. இத்தகைய நிறங்களை நாம் பயன்படுத்துவதால் விரைவில் நம்முடைய இலக்கை அடைய உதவும் என்று நம்பப்படுகிறது. வீட்டில் உள்ள மரச்சாமன்களான நாற்காலி, மேசை, படுக்கை, அலமாரி போன்றவற்றை மாற்றி அமைப்பது கூட பாசிட்டிவ் எனர்ஜியை தரும் என்று கூறுகிறார்கள். பண வரவு வேண்டும் என்பது இலக்காக இருப்பின், சொல்லபோகும் நிறங்களை வீட்டில் பயன்படுத்துவது நன்மையை தரும்.

பர்புள் நிறம்: கிருஸ்தவ மதம் முதல் ஃபெங் சுய்ங்கின் வரை பர்புள் நிறம் ஆன்மிகத்துடன் தொடர்புடையதாகும். இந்த நிறம் அதிக பண வரவை தரும். பர்புள் நிறத்துடன் வெள்ளை அல்லது தங்க நிறத்தை சேர்த்து ஹாலில் பயன்படுத்துவது சிறந்தது. இளம் ஊதா நிறத்தை பாத்ரூம் மற்றும் படுக்கையறையில் பயன்படுத்தலாம். இந்த நிறம் அதிக செல்வத்தை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.

அடர்நீல நிறம்: ஃபெங் சுய்ங்கின்படி அடர்த்தியான நீல நிறம் இயற்கையாக உருவாகிய மூலப்பொருளில், தண்ணீரை குறிக்கிறது. செல்வ செழிப்பு வர வேண்டும் என்பதுதான் இலக்கு என்றால் நீலம் அதற்கேற்ற நிறமாகும். பணம் வரக்கூடிய இடங்களில் நீலநிற பொருட்களை வைப்பது சிறந்தது. நீலநிறத்தை வெள்ளை நிறத்துடன் சேர்த்து வைப்பது நல்லதாகும். நீலநிறம் வைப்பதால் ஆரோக்கியமும், குடும்ப ஒற்றுமையும் நிலைக்கும். நீலநிற சுவர் மற்றும் வாசற்கதவை நீலநிறத்தில் அமைப்பது, வீட்டில் உள்ள சோபா போன்றவற்றை நீலநிறத்தில் அமைப்பது சிறந்ததாகும். மீன் தொட்டி மற்றும் நீரூற்றை அமைப்பது வீட்டில் அமைதியை பரவச்செய்யும்.

இதையும் படியுங்கள்:
கண்ணியமானவர்களை கண்டுபிடிப்பது ரொம்ப சுலபம்தான்!
Uses of Chinese Vastu Shastra Feng Shui

தங்கநிறம்: ஃபெங் சுய்ங்கின்படி தங்க நிறம் அதிர்ஷ்டம் மற்றும் பணத்தை ஈர்க்கக்கூடியது என்று சொல்லப்படுகிறது. வீட்டிலுள்ள மரப்பொருட்கள், அழகுபடுத்த உபயோகிக்கும் பொருட்கள் இவை அனைத்திலும் தங்க நிறம் பயன்படுத்தப்பட்டிருக்கும். தங்க நிறம் வீட்டை அழகுப்படுத்த பயன்படுத்தப்படும் நிறமாகும். இது செல்வம் மற்றும் பாதுகாப்புத் தன்மையை தரக்கூடியதாகும். தங்க நிறத்தை புகைப்படத்தினுடைய பிரேம், திரைச்சீலை ஆகியவற்றில் பயன்படுத்தலாம். சாப்பாட்டு அறை, சமையலறை போன்ற இடங்களில் தங்க நிறத்தை பன்படுத்தலாம்.

கரும்பச்சை நிறம்: கரும்பச்சை அமைதி, நிலையான தன்மை ஆகியவற்றை குறிப்படுகிறது. இது இயற்கையான நிறத்தை குறிக்கிறது. இயற்கையாகவே செல்வத்தை ஈர்க்கக்கூடிய நிறமாகும். வீட்டில் பச்சை நிற செடிகள் வளர்ப்பது சிறந்ததாகும். படுக்கையறையில் பச்சைநிறம் பயன்படுத்துவது தூக்கமின்மையை போக்கும்.

எனவே, வீட்டில் சில நிறங்களையும், பொருட்களையும் மாற்றியமைப்பது நல்ல சக்தியை கரை புரண்டு ஓட வைக்கும் என்று நம்பப்படுகிறது. வீட்டின் உள்ள விளக்குகளின் ஒளியை மாற்றுவது கூட வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இது எதுவும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது, வீட்டிற்குத் தேவையில்லாத பொருளை ஒழிப்பது போன்ற நல்ல விஷயங்களை கூறும்போது அதை நாம் ஏற்றுக்கொள்ளலாம்தானே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com