மூக்கறுப்பு: அவமானத்தின் நிழல்! 

Nose Cut
மூக்கறுப்பு
Published on

“கூப்பிட்டு வச்சு மூக்கு அறுத்துட்டாண்டா”, “தானா வந்து மூக்கு அறுபட்டு போறான் பார்” என்றெல்லாம் ஒருவரை அவமானப்படுத்த சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மூக்கு அறுபடுவது என்ன அவ்வளவு அவமானமான ஒன்றா? 

மனித குல வரலாறு பல கொடூரங்கள், அநியாயங்கள் வன்முறைகளால் நிறைந்தது. அத்தகைய கொடூரங்களில் ஒன்றுதான் மூக்கறுப்பு. இது வெறும் உடல் உறுப்பு துண்டிப்பு மட்டுமல்ல; மனித மானத்தை சிதைக்கும், ஒருவரது அடையாளத்தை அழிக்கும் கொடூரச் செயலாகும். 

மூக்கறுப்பு: இது ஒருவரின் மூக்கை முழுமையாக அல்லது பகுதியாக வெட்டி எடுக்கும் செயல். இது பொதுவாக போர்க்களங்களில் தண்டனை முறையாக, பிறரை பழிவாங்கப் பயன்படுத்தப்பட்டது. இது வெறும் உடல் ரீதியான துன்பம் மட்டுமல்ல; மனரீதியாகவும் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். மூக்கறுப்பு செய்யப்பட்டவர்கள் சமூகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் அடையாளம் முற்றிலுமாக அழிக்கப்படும். 

இது ஏன் அவமானத்தின் குறியீடாகப் பார்க்கப்படுகிறது? 

முகம் என்பது ஒருவரின் அடையாளம். அதில் மூக்கு என்பது முகத்தின் மையப்பகுதி. மூக்கை அறுப்பதால் ஒருவரின் அடையாளம் முழுமையாக சிதைக்கப்படுகிறது. பண்டைய காலங்களில் மூக்கறுப்பு செய்யப்பட்டவர்கள், சமூகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களின் குடும்பத்தினராலேயே கைவிடப்பட்டார்கள். மூக்கறுப்பு செய்யப்பட்டவர்கள் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டதால், தற்கொலைக்கு முயற்சி செய்வது, மனச்சோர்வுக்கு ஆளாவது போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். 

வரலாறு: மூக்கறுப்பு பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வந்துள்ளது. பண்டைய எகிப்து, ரோம், கிரீஸ் போன்ற நாகரிகங்களில் மூக்கறுப்பு தண்டனை முறையாகப் பயன்படுத்தப்பட்டது. இடைக்காலத்தில், ஐரோப்பியாவில் சூனியக்காரிகள் என்று குற்றம் சாட்டப்பட்ட பெண்களுக்கு மூக்கறுப்பு தண்டனை வழங்கப்பட்டது. இந்தியாவில், குறிப்பாக மதுரை நாயக்கர் காலத்தில் மைசூர் படையினர் மூக்கறுப்பு செய்ததாக வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. இது “மூக்கறுப்பு போர்” என்று அழைக்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
பல பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது பூனைக்காலி பழம்!
Nose Cut

ஆப்பிரிக்காவில் பல பழங்குடி சமூகங்களில் மூக்கறுப்பு ஒரு சடங்கு முறையாக இருந்துள்ளது. பருவமடைதல், திருமணம் போன்ற சந்தர்ப்பங்களில் பெண்களுக்கு மூக்கில் துளையிட்டு அலங்கார பொருட்களை அணிவிக்கும் வழக்கம் இருந்தது. இதில் மூக்கை சிதைத்து மோசமாக மாற்றி விடுவார்கள். 

அந்த காலத்தில் மூக்கறுப்பு தண்டனை என்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. ஆட்சியாளர்களுக்கு எதிராக எவ்விதமான எதிர்ப்பும் செய்ய முடியாதபடி மக்கள் அடக்கப்பட்டனர். மூக்கறுப்புக்கு உள்ளானவர்கள் சமூகத்தில் ஒடுக்கப்பட்டார்கள். அவர்களுக்கு திருமணம், வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டது. அந்த காலத்தில் நடந்த மிகப்பெரிய மனித உரிமை மீறல் இந்த மூக்கறுப்பு. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com