நியூசிலாந்தின் பழங்குடி மக்களான மாவோரி பற்றி சிலர் அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், இந்த மாவோரி மக்களுக்கும் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்று தெரியுமா?
இந்த மாவோரி மக்களைப் பற்றி ஏற்கனவே சிலர் அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் சமீபத்தில் நியூசிலாந்தில் 21 வயதான ஒரு இளம்பெண் எம்பியாக பதவியேற்றுக்கொண்டார். அவர் நாடாளுமன்றத்தில் பழங்குடி மக்களின் முறைப்படி போர் முழக்கம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது. அதாவது ஹக்கா என்றழைக்கப்படும் இந்த உரையில், “உங்களுக்காக சாகவும் தயார். ஆனால், உங்களுக்காக வாழ்வேன்.” என்று பொருள். அந்தவகையில், அவர்கள் யாரென்பதைப் பார்ப்போம்.
மாவோரிகள் 13ம் நூற்றாண்டில் கிழக்கு பாலிசேனியா பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள். அதன்பின்னர் 18ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் அங்கு சென்றதும், இரு தரப்பினருக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டது. அதில் மாவோரிகள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர். காலப்போக்கில் ஐரோப்பியர்களின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளும் சூழல் மாவோரிகளுக்கு ஏற்பட்டது.
இந்த மாவோரி மக்கள் தங்கள் மதத்தின் தனித்துவத்திற்கும், முன்னோர்கள் மற்றும் கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் டாட்டூ குத்திக்கொள்வார்கள். இவர்களின் ஹகா என்ற நடனம் மிகவும் உற்சாகமாக இருக்கும். துடிப்பான அசைவுகள், தாளங்கள் பார்ப்பவர்களை ஆட வைத்துவிடும். 18ம் நூற்றாண்டில் நியூசிலாந்து விளையாட்டு அணிகள் ஹக்கா அசைவுகளை செய்தனர். அந்த அசைவுகள் அனைவரையும் கவர்ந்ததால், இன்றுவரை அந்த நடனம் பின்பற்றப்படுகிறது.
தற்போது இந்த மாவோரி இனத்தின் 50 சதவீதம் பேர் மதமற்றவர்களாக தங்களை அறிவித்துக்கொண்டார்கள். இன்னும் சிலர் சிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுகிறார்கள்.
அந்தவகையில் தமிழர்களுக்கும் மாவோரிகளுக்கும் என்ன தொடர்பு என்று பார்ப்போம்.
தமிழ் மிகவும் பழமையான மொழி என்பது நம் அனைவருக்குமே தெரியும். அதேபோல் மாவோரி மொழியும் மிகவும் பழமையானதாம். மாவோரிகள் பேசும் மொழிக்கும், தமிழுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மாவோரிகளின் மொழியை ஏறதாழ ஒன்றரை மில்லியன் மக்கள் பயன்படுத்துகிறார்களாம்.
தமிழ் மொழிக்கும் மாவோரி மொழிக்கும் உள்ள ஒற்றுமைக்கு ஆதாரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது நியூசிலாந்து நாட்டின் கரியோரா என்ற இடத்தில் தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வெண்கல மணி ஒன்று கிடைத்துள்ளது. மாவோரிகள் கடல் கடந்து பயணம் செய்ததாக கூறப்படுகிறது. ஆகையால், அப்படி ஏற்பட்ட தொடர்புதான் இதுவோ என்று கணிக்கின்றனர்.
இதற்கான மேலும் ஒரு தகவல் என்னவென்றால், கடந்த 2022ம் ஆண்டு மாவோரிகளின் புத்தாண்டை நியூசிலாந்து முழுவதும் கொண்டாடியது. அப்போது தங்களது முன்னோர்கள் என தமிழர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இரு மொழிகளுக்குமான கற்பித்தல் குறித்தும், வேறுபாடு குறித்தும் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
இப்போது புரிகிறதா? தமிழர்கள் கடல்கடந்து சென்று தங்கள் கலாச்சாரத்தையும் மொழியையும், தமிழர்களின் பெருமையையும் வித்திட்டு மரமாக முழைக்கச் செய்தார்கள் என்று.