உலக கரன்சிகளில் இடம்பெற்றுள்ள பெண் ஆளுமைகள் யார் யார்?

Who are the female personalities featured in world currencies?
Who are the female personalities featured in world currencies?https://tamil.goodreturns.in

ந்தவொரு நாட்டிலிருந்தும் வெளியிடப்படும் கரன்சி நோட்டுகளில் பொதுவான ஒரு அம்சம் உண்டு. அது என்னவென்றால், நோட்டுகளில் பெரும்பாலும் முக்கிய நபர்கள் இடம் பெறுவார்கள் என்பதே. அவர்கள் அந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு ஏதோ ஒரு வகையில் பங்களித்துள்ளவர்களாக இருப்பர். உலகின் பல நாடுகளில் அந்நாட்டின் ஆண் ஆளுமைகள்தான் அந்நாட்டு கரன்சிகளில் இடம் பெறுகிறார்கள்.

உலகின் ஏறத்தாழ 196க்கும் மேற்பட்ட நாடுகளில் கரன்சி நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்திற்கு வெளிவருகிறது. அந்த வகையில் உலகில் 48 நாடுகள் மட்டுமே பெண்களை அந்நாட்டு கரன்சிகளில் படமாக அச்சிட்டு கெளரவப்படுத்தி உள்ளது. இந்தியாவில் எந்தப் பெண்மணிக்கும் இந்தப் பெருமை கிடைக்கவில்லை. பண்டித ரமாபாய், அருணா ஆசிப் அலி, பகாஜி காமா, கமலா தேவி, சோடிபாத்தியாயா, கோமெலியா, சார்ஜ், சாவித்திரி பாலே போன்ற இந்தியப் பெண் ஆளுமைகளை இந்திய 100 ரூபாய் நோட்டுகளில் படமாக வெளியிட முயற்சிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் கைகூடவில்லை என்பது வருத்தத்துக்குரியது.

 கனடாதான் முதன் முதலாக 1935ம் ஆண்டில் தங்களது நாட்டின் 20 டாலர் கரன்சிகளில் மகாராணி இரண்டாம் எலிசபெத் படத்தை வெளியிட்டது. இங்கிலாந்து நாட்டின் இரண்டாம் குயின் எலிசபெத் மகாராணியின் உருவப்படம்தான் அதிக முறை கரன்சியில் இடம்பெற்ற பெண்மணி என்ற பெருமையை பெற்றது. அவர் 19 நாடுகளின் கரன்சியில் இடம்பெற்று உள்ளார்.

1960 வரை இங்கிலாந்து நாட்டின் அனைத்து பவுண்டு கரன்சிகளிலும் அந்நாட்டின் ராணி எலிசபெத் படம் மட்டுமே இடம்பெற்று வந்தது. அதன் பின்னர்தான் பிரிட்டிஷ் கரன்சி நோட்டுகளில் பிரபல ஆங்கில நாடகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர், விஞ்ஞானி ஐசக் நியூட்டன், பொறியியலாளர் ஜார்ஜ் ஸ்டீபன்ஸன், பொருளாதார வல்லுநர் ஆடம் ஸ்மித் போன்றோரும் இடம் பெற்றிருந்தனர்.

இங்கிலாந்து நாட்டின் கரன்சிகளில் எலிசபெத் மகாராணியை அடுத்து இடம் பெற்றவர், ‘செவிலியர்களின் தாய்’ என புகழ் பெற்ற பிளாரன்ஸ் நைட்டிங்கேல். அதனையடுத்து அந்நாட்டின் சமூக சீர்திருத்தவாதி எலிசபெத் ஃப்ரை இடம் பெற்றார். அதன் பிறகு18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பிரபல நாவலாசிரியையான ஜேன் ஆஸ்டின் இடம் பெற்றார். ‘சென்ஸ் அண்ட் சென்ஸிபிலிட்டி’, ‘ப்ரைட் அண்ட் ப்ரிஜுடிஸ்’, ‘மேன்ஸ்பீல்ட் பார்க்’ மற்றும் ‘எம்மா’ போன்ற புகழ் பெற்ற புதினங்களை எழுதியவர் இவர்.

கனடாவில் மகாராணி எலிசபெத் அந்நாட்டின் டாலர் கரன்சிகளில் இடம் பெற்ற பிறகு சமூக சீர்திருத்தவாதி வயலா டெஸ்மென்ட் இடம் பெற்றார். பெண்கள் சமத்துவம் பேசும் அமெரிக்க நாட்டில் ஒரே ஒரு முறை அந்நாட்டின் ஒரு டாலர் கரன்சிகளில் 1886ம் ஆண்டில் மார்தா வாஷிங்டன் இடம் பெற்றார். இவர் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டனின் மனைவி. அதன் பிறகு எந்த பெண்ணின் உருவமும் அமெரிக்க டாலர் கரன்சிகளில் இடம்பெறவில்லை.

உலகிலேயே அந்நாடு வெளியிடும் கரன்சிகளில் அதிகம் பெண்கள் இடம்பெற்ற நாடு ஆஸ்திரேலியாதான். அந்நாட்டின் கரன்சிகளில் இதுவரை ஐந்து பெண்கள் இடம்பிடித்துள்ளார்கள். அவர்கள் முதலாம் குயின் எலிசபெத், அந்நாட்டின் பிரபல எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் டேம் மேரி கில்மோர் (10 டாலர் கரன்சிகளில் இடம் பெற்றார்), சமூக சீர்திருத்தவாதி மேரி ரெய்பே (20 டாலர் நோட்டுகளிலும்), அந்நாட்டின் முதல் பாராளுமன்ற பெண் உறுப்பினர் எடித் கோவன் (50 டாலர் நோட்டுகளிலும்), பிரபல பாடகி டேம் நெல்லி மெல்டா (100 டாலர்கள் நோட்டுகளிலும்) இடம் பெற்றனர்.

England currency
England currencyhttps://tamil.goodreturns.in

உலகிலேயே இன்றும் தாங்கள் வெளியிடும் ஒவ்வொரு கரன்சிகளிலும் ஒரு பகுதியில் பெண்கள் படத்துடன் வெளியிடும் ஒரே நாடு ஆஸ்திரேலியாதான். இதனையடுத்து ஸ்கான்டிநேவியா நாடு தங்களது நாட்டின் கரன்சிகளில் 60 சதவீத நோட்டுகளிலும், டென்மார்க் 50 சதவீத நோட்டுகளிலும் பெண்கள் படத்தை வெளியிடுகின்றன.

ஆஸ்திரேலியாவை அடுத்து சுவீடன் மற்றும் ஸ்காட்லாந்து நாடுகள் தங்களது நாட்டின் கரன்சிகளில் நான்கு பெண்களை இடம்பெறச் செய்தது. கொலம்பியா, இங்கிலாந்து மற்றும் டென்மார்க் போன்ற நாடுகள் மூன்று பெண்களின் படத்தை தங்களது கரன்சிகளில் இடம்பெறச் செய்தது. கனடா, நார்வே, மெக்சிகோ, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், அர்ஜென்டினா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் அந்நாட்டின் கரன்சிகளில் இரண்டு பெண்கள் இடம் பெற்றனர்.

இதையும் படியுங்கள்:
உலகின் புகழ் பெற்ற மெழுகு சிலை மியூசியம் உருவான கதை தெரியுமா?
Who are the female personalities featured in world currencies?

போலந்து நாடு அந்நாட்டின் பிரபல அறிவியல் அறிஞர் மேரி கியூரி படத்தை தங்களது நாட்டின் கரன்சிகளில் இடம்பெறச் செய்தது. ஐஸ்லாந்து, பெரு, தென் கொரியா, கிரேட் குடியரசு இத்தாலி, ஜமைக்கா, மெக்சிகோ, கஜகஸ்தான், ஹைடி, வெனிசுலா, டொமினிக் தீவுகள், துருக்கி, உக்ரைன், செர்பியா, ஜப்பான், சிலி, சுவிட்சர்லாந்து, கோஸ்டாரிக்கா, உருகுவே, சிரியா போன்ற நாடுகள் தங்களது கரன்சிகளில் தலா ஒரு பெண்ணின் உருவத்தை பண நோட்டுகளில் வெளியிட்டு பெண்களை பெருமைப்படுத்தி உள்ளன.

உலகெங்கிலும் 1006 பணத்தாள்களை ஆய்வு செய்ததில் மொத்தம் 15 சதவீத கரன்சிகளில் மட்டுமே பெண்களின் உருவப்படங்கள் இடம் பெற்றுள்ளன. எத்தனை எத்தனையோ வீர மங்கையரைப் பெற்றெடுத்த நம் தாய்நாட்டில் இதுவரை எந்தப் பெண்மணிக்கும் இந்தப் பெருமை கிடைக்கவில்லை. இனியும் கிடைக்குமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com