Number thirteen
Number thirteen

Triskaidekaiphobia: உலகமே பயப்படும் '13'ம் நம்பர்! உண்மை காரணம் என்ன?

Published on

லகம் முழுவதுமே பொதுவாக 13ம் நம்பரை அபசகுனமாகக் கருதுகிறார்கள். 13ம் நம்பரைக் கண்டாலே பயப்படுபவர்களும் இருக்கிறார்கள். இதற்கான காரணம் என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

வெளிநாடுகளில் உள்ள ஹோட்டல்களில் 13ம் நம்பரை பார்க்கவே முடியாது. அதுமட்டுமில்லாமல், கட்டடத்தில் 13வது தளமே இருக்காது. ஹோட்டல்களில் 12க்குப் பிறகு 14வது தளம் வந்துவிடும். விமானங்களிலும் 13ம் எண் கொண்ட சீட் இருப்பதில்லை. வெளிநாடுகளில் 13 என்ற எண்ணைக் கேட்டாலே மக்கள் பயப்படுவார்கள். அதிலும் 13ம் தேதி வெள்ளிக்கிழமையில் வந்தால் சொல்லவே வேண்டாம்.

13ம் நம்பர் ஏன் வெளிநாடுகளில் அபசகுனமாகப் பார்க்கப்படுகிறது தெரியுமா? கிருத்துவ மதத்தில் இயேசு கடைசியாக விருந்து சாப்பிட்ட நபர்களின் எண்ணிக்கை 13 ஆகும். அதுமட்டுமில்லாமல் இயேசு மரித்த நாளும் 13ம் தேதி வெள்ளிக்கிழமையாகும்.

அதனால்தான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்கள் 13 என்ற நம்பரை பார்த்தாலும், கேட்டாலும் பயங்கரமாக பீதியடைவார்கள்.

இதையும் படியுங்கள்:
கிணறு வெட்ட மாடுகளும் எறும்புகளும் உதவியதா? நம்ப முடியாத பண்டைய தொழில்நுட்பம்!
Number thirteen

மருத்துவர்கள் இதை ஒருவகையான Phobia என்று கூறுகிறார்கள். 13ம் எண்ணை பற்றிய பயத்திற்கு, Triskaidekaiphobia என்று கூறுகிறார்கள். அதனால்தான் வெளிநாடுகளில் 13ம் நம்பர் ரூமையும், தளத்தையும் பார்க்க முடியாது. 13ம் நம்பர் என்பது முழுமையடையாத நம்பராகக் கருதப்படுவதால், இதை மக்களால் கெட்ட சகுனமாகப் பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் பெரும்பாலும் 13ம் தேதியில் முக்கியமான நிகழ்வுகளை நடத்துவதை தவிர்த்துவிடுவார்கள்.

ஆன்மிக ரீதியாக 13ம் எண் நல்ல மாற்றத்தையும், வளர்ச்சியையும் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்துக்கள் 13ம் நம்பர் அதிஷ்டத்தை தரும் என்றே நம்புகிறார்கள். ஏனெனில், சிவபெருமானுக்கு உகந்த எண்ணாக 13 உள்ளது. ‘திரயோதசி‘ என்றால் சமஸ்கிருதத்தில் 13 என்று அர்த்தம். சீன பாரம்பரியத்தில்,  நம்பர் 13ஐ அபசகுணமாக கருதுவதில்லை. 13ம் எண் வளர்ச்சியைக் கொடுக்கும் என்று நம்புகிறார்கள். எனவே, சீனர்களும் 13 என்னும் எண்ணை அதிர்ஷ்டமாகவே கருதுகிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com