உலகின் டாப் 10 பல்கலைக்கழகங்கள்!

Top 10 Universities
Top 10 Universities

மேற்படிப்புற்காக பல கல்லூரிகளில் சேர துடிக்கும் மாணவமணிகள் உலகின் தலைசிறந்த டாப் 10 பல்கலைக்கழகங்களை தெரிந்து கொள்ள வேண்டாமா? அவர்கள் தெரிந்து கொள்ள உதவும் தொகுப்பே இது. உலகின் தலைசிறந்த 10 பல்கலைக்கழகங்கள் வரிசை... (2025 தரவரிசை)

1. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் (Oxford University):

Oxford University
Oxford University

பிரிட்டனைச் சேர்ந்த இந்தப் பல்கலைக்கழகம், லண்டனில் இருந்து 50 கிமீ தொலைவில் தேம்ஸ் நதியும், சேர்வெல் நதியும் இணையும் இடத்தில் ஆற்றங்கரையில் உள்ளது. உலகப்புகழ் பெற்ற இந்த பல்கலைக்கழகம் 1168 ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் கல்வி ஆண்டு அக்டோபரில் தொடங்கி ஜூனில் முடியும். இதில் சேர ஆங்கிலம் சரளமாக பேசவும் எழுதவும் தெரிய வேண்டும். காமன் வெல்த் நாடுகளின் மாணவர்கள் படிக்க உபகாரச்சம்பளம் உண்டு.

2. மாசாசூட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (Massachusetts Institute of Technology):

Massachusetts Institute of Technology
Massachusetts Institute of Technology

அமெரிக்காவைச் சேர்ந்த இந்தப் பல்கலைக்கழகம் 1861 ம் ஆண்டு நிறுவப்பட்டது. உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான எம்.ஐ.டி சமகால அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கு குறிப்பிட்ட பங்களிப்பபை அளித்துள்ளது. அமெரிக்காவின் சார்லஸ் ஆற்றின் வடகரையில் கிட்டத்தட்ட ஒரு மைல் வரை நீண்டுள்ளது இந்த பல்கலைக்கழகம். அமெரிக்க ஜனாதிபதி காம்ப்டன், ஹார்வர்டு பிஸ்னஸ் ஸ்கூல் ஜார்ஜஸ் மற்றும் டோரியட் ஆகியோரின் முயற்சியால் உருவான நிறுவனம் இது.

3. ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (Harvard University):

Harvard University
Harvard University

அமெரிக்காவைச் சேர்ந்த மிகவும் பழமையான இந்தப் பல்கலைக்கழகம் 1636 ம் ஆண்டு நிறுவப்பட்டது. கேம்பிரிட்ஜ் பாஸ்டன் நகருக்கு வட மேற்கே மூன்று மைல் தொலைவில் 209 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதன் நிறுவனர் ஜான் ஹார்வர்ட்.

4. கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (California Institute of Technology):

California Institute of Technology
California Institute of Technology

அமெரிக்காவைச் சேர்ந்த இந்தப் பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து வடகிழக்கே 15 கிமீ தொலைவில் உள்ள கலிபோர்னியாவின் பச்டேனாவில் உள்ளது. கால் டெக் என்று அழைக்கப்படுகிறது.

5. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் (Stanford University):

Stanford University
Stanford University

அமெரிக்காவைச் சேர்ந்த இந்தப் பல்கலைக்கழகம் கலிபோர்னியாவில் உள்ள பிரபல தனியார் கூட்டுறவு பல்கலைக்கழகம். இது பாலோ ஆல்டோவுக்கு அருகில் உள்ளது. இது 1885ம் ஆண்டு அமெரிக்க தனியார் ரயில்வே அதிபர் லேலண்ட் ஸ்டான் போர்ட் மற்றும் அவரது மனைவி ஜேன் ஆகியோரால் அவர்களது ஒரே குழந்தையான லேலண்ட் ஜூனியர் நினைவாக 1891 ம் ஆண்டு லாப நோக்கமற்ற அறக்கட்டளை நிறுவனமாக தொடங்கப்பட்டது.

6. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (Cambridge University):

Cambridge University
Cambridge University

பிரிட்டனைச் சேர்ந்த இந்தப் பல்கலைக்கழகம், லண்டன் கேம் ஆற்றங்கரையில் 1209 ம் ஆண்டு துவங்கப்பட்டது. பொது ஆராய்ச்சி நிறுவனமான இது வருடத்திற்கு 18,000க்கும் மேற்பட்ட உலகளாவிய மாணவர்களை வரவேற்கிறது. இங்கு 100 க்கும் மேற்பட்ட நூலகங்கள் உள்ளன. அவற்றில் 15 மில்லியனுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. உலகின் இரண்டாவது பழமையான பல்கலைக்கழகமாகும் .

7. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் (Princeton University):

Princeton University
Princeton University

அமெரிக்காவைச் சேர்ந்த இந்தப் பல்கலைக்கழகம், உலகின் முன்னணி ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களில் ஒன்று. 40 க்கும் மேற்பட்ட நோபல் பரிசைப் பெற்றவர்களை தந்த பல்கலைக்கழகம் 1746 ம் ஆண்டு நியூ ஜெர்சி பிரின்ஸ்டனில் தொடங்கப்பட்டது.

8. யேல் பல்கலைக்கழகம் (Yale University):

Yale University
Yale University

அமெரிக்காவைச் சேர்ந்த மிகவும் பழமையான இந்தப் பல்கலைக்கழகம் 1701 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது நியூஹேவனின் 260 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது . 68 நோபல் பரிசைப் பெற்றவர்களையும், 5 அமெரிக்க ஜனாதிபதி மற்றும் 10 உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் தலைவர்களையும் உருவாக்கிய பல்கலைக்கழகம்.

9. கலிபோர்னியா பல்கலைக்கழகம் பெர்க்லி (University of California, Berkeley):

University of California, Berkeley
University of California, Berkeley

அமெரிக்காவைச் சேர்ந்த இந்தப் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் மதிப்பு மிக்க மாநில பல்கலைக்கழகங்களில் ஒன்று சான் பிரான்சிஸ்கோவின் விரிகுடா பகுதியில் 1868 ம் ஆண்டில் தொடங்கியது. 19 நோபல் பரிசை பெற்றவர்களை தந்த நிறுவனம்.

இதையும் படியுங்கள்:
அடிக்கு ஒரு குழந்தை அருளிய குழந்தையானந்த ஸ்வாமிகள்!
Top 10 Universities

10. இம்பீரியல் காலேஜ் லண்டன் (Imperial College London):

Imperial College London
Imperial College London

பிரிட்டனைச் சேர்ந்த இந்தப் பல்கலைக்கழகம் லண்டனில் உள்ள சவுத் கென் சிங்டனில் உள்ளது. இந்த பொதுத்துறை பல்கலைக்கழகம் 1907 ம் ஆண்டு பிரிட்டிஷ் இளவரசர் முயற்சியில் தொடங்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com