கோடைகாலத்தில் முகப்பருவை தடுக்க 10 டிப்ஸ்! 

10 tips to prevent acne in summer!
10 tips to prevent acne in summer!

கோடைகாலத்தில் வெப்பம் அதிகம் இருக்கும் என்பதால் முகப்பரு வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். எனவே முன்கூட்டியே அதை தடுப்பதற்கான சில நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டியது அவசியம். முதலில் முகப்பரு எதனால் வருகிறது என்பதைத் தெரிந்துகொண்டால் மட்டுமே, அதைத் தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி யோசிக்க முடியும்.

முகப்பரு வருவதற்கான காரணங்கள்:

முகப்பரு வருவதற்கான முதல் காரணமாக சொல்லப்படுவது அதிக எண்ணெய் பசை. சிலருக்கு முகம் அதிகம் எண்ணெய்த் தன்மையுடன் காணப்படும். இத்துடன் உடலில் இருக்கும் கொழுப்புச் சத்துக்கள் சேர்ந்து அலர்ஜியால் முகப்பரு ஏற்படுகிறது. மேலும் சிலருக்கு ஹார்மோன் மாற்றங்களினாலும் முகப்பரு ஏற்படும். மேலும் மோசமான உணவு முறை மற்றும் மன அழுத்தம் போன்றவற்றாலும் முகப்பருக்கள் உண்டாகிறது. எனவே முகப்பரு உள்ளவர்கள் அவ்வப்போது முகத்தை நன்கு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

முகப்பருவைப் போக்க எளிய 10 வழிகள்: 

  1. முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்க மென்மையான ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி தினமும் இரண்டு முறை உங்கள் முகத்தை சுத்தம் செய்யுங்கள்.

  2. மஞ்சள் மற்றும் சந்தன பொடியை பேஸ்ட் செய்து தடவினால் முகப்பருவின் வீக்கம் குறைந்து, முகப்பரு உண்டாகும் பாக்டீரியாவை அழிக்கும்.

  3. முகப்பருவை கட்டுப்படுத்தவும், முகப்பரு வெடிப்பதைத் தடுக்கவும் வேப்ப எண்ணெயைப் பயன்படுத்தி லேசாக மசாஜ் செய்யுங்கள்.

  4. அவ்வப்போது முகப்பருவை தொடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் கையில் இருக்கும் பாக்டீரியா பருக்களின் நிலைமையை மோசமாக்குகிறது.

  5. முகப்பரு பாதிப்பு உள்ள சருமத்தை குணப்படுத்த கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துங்கள்.

  6. தேயிலை மர எண்ணெய் ஸ்பாட் சிகிச்சை முறையைப் பயன்படுத்தி குறிப்பிட்ட பருக்களையும், முகத்தில் சிவப்பு நிறத்தையும் குறைக்கலாம். 

  7. பருக்களைத் தடுத்து ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  8. முகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் நிறைய தண்ணீர் குடிக்கவும்.

  9. அதிகம் எண்ணெய் நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும். 

  10. தினசரி போதுமான அளவு தூங்குங்கள். குறிப்பாக மன அழுத்தத்தை நிர்வகிக்க கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் இவை இரண்டுமே ஹார்மோன் அளவை பாதித்து முகப்பருக்களைத் தூண்டும்.

இதையும் படியுங்கள்:
கோடை விடுமுறை: குழந்தைகளின் நேரத்தை பயனுள்ளதாக மாற்றும் யோசனைகள்!
10 tips to prevent acne in summer!

இந்த எளிய இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி கோடை காலத்தில் முகப்பருக்களின் பாதிப்பிலிருந்து நீங்கள் விடுபட முடியும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலே முகப்பரு பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். எனவே இந்த கோடை காலத்தில் சருமத்திற்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து, ஆரோக்கியமாக இருக்க முயலுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com