ஆண்களே! உங்கள் முகம் மென்மையாக இருக்க நச்சுனு 4 டிப்ஸ்!

Men's Beauty
Men's Beauty
Published on

உடுத்தும் உடையில் தொடங்கி காலணிகள் வரை அனைத்தையும் மிக கச்சிதமாக தேர்வு செய்யும் இன்றைய ஆண்களுக்கு, முகத்தின் அழகை பராமரிக்க டிப்ஸ் கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்வார்கள். அவ்வகையில் ஆண்கள் தங்களின் முகத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும் 4 குறிப்புகளை இப்போது காண்போம்.

பொதுவாக ஆண்கள் பலரும் தங்களின் முக அழகை பராமரிப்பதில் அதிக அக்கறை செலுத்த மாட்டார்கள். ஏனெனில் வேலை நிமித்தமாக அவசரச் சூழலிலேயே எப்போதும் இருக்கின்றனர். ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஆண்களும் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கி விட்டனர். முகத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தாலே பருக்கள் ஏதும் வராமல் இருக்கும். இருப்பினும், ஆண்களின் முகம் மிகவும் மென்மையாக இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது நல்லது.

வறட்சியைத் தவிர்க்க வேண்டும்:

எத்தனை முறை முகத்தைத் கழுவினாலும், சில ஆண்களுக்கு முகம் கூடிய விரைவிலேயே வறண்டு விடும். இவர்கள் எந்த ஃபேஸ் க்ரீமை முகத்தில் தேய்த்தாலும் முகம் வறண்ட நிலையிலேயே இருக்கலாம். நீங்கள் மாய்ஸ்சரைசரைத் தவறான முறையில் பயன்படுத்துவதே இதற்கு முக்கிய காரணம். முகம் ஈரமாக இருக்கும் நேரத்தில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தினால், அது நீண்ட நேரத்திற்கு நீடித்திருக்கும். முகம் உலர்ந்திருக்கும் போது பயன்படுத்தினால், அது நீண்ட நேரத்திற்கு நீடிக்காது.

கிளைக்கோலிக் அமிலம்:

முக அழகைப் பராமரிக்க விரும்பும் ஆண்கள், காலையில் தூங்கி எழுந்த பின்னும், இரவில் தூங்குவதற்கும் முன்பும் முகத்தைக் கழுவ வேண்டும். தண்ணீருக்கு பதிலாக கிளைக்கோலிக் அமிலத்தைப் பயன்படுத்தி முகத்தைக் கழுவினால், முகத்தில் ஆரோக்கியமான சருமத்தைப் பெற முடியும். இந்த அமிலத்தை நேரடியாக முகத்தில் பயன்படுத்த விருப்பம் இல்லையெனில், கிளைக்கோலிக் அமிலம் இருக்கும் க்ளென்சரைப் பயன்படுத்தினாலும் நல்ல பலன் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு எது?
Men's Beauty

சரியான அழகு சாதனப் பொருள்கள்:

ஆண்கள் முகத்தின் அழகைப் பராமரிக்க ஸ்க்ரப்பர்கள், க்ளென்சர் மற்றும் மாய்ஸ்சரைசர் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இருப்பினும் இவற்றில் சாயம் மற்றும் ஆல்கஹால் போன்ற முகத்திற்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இல்லாதவாறு தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியமாகும். முகத்தில் இருக்கும் தாடியை சுத்தம் செய்யும் போது பலரும், நுரை வரும் லோஷன்களை பயன்படுத்துகின்றனர். இவற்றை கண்டிப்பாக உபயோகிக்க கூடாது. ஏனெனில், இவை சருமத்தை உலர்த்தி விடும்.

ஒரே க்ரீம் வேண்டாம்:

சில ஆண்கள் உடலுக்குப் பயன்படுத்தும் பாடி லோஷன்களையே, முகத்திற்கும் பயன்படுத்துகின்றனர். இப்படிச் செய்வது மிகவும் தவறான செயலாகும். இதனால் முகத்தில் உள்ள துளைகள் அனைத்தும் அடைத்துக் கொள்ளும். ஆகையால் முகத்திற்கு ஃபேஸ் க்ரீம் மற்றும் உடலுக்கு பாடி லோஷன் எனத் தனித்தனியாக பயன்படுத்துவது தான் நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com