குளிர்காலத்தில் உதடு வெடிப்பு நீங்க 5 எளிய வழிகள்!

Get rid of chapped lips in winter
lips care tips
Published on

குளிர்காலத்தில் சிலருக்கு உதடுகள் வெடிப்பு ஏற்படும். வெளியே பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமாகவும், உதடு காய்ப்பு  இருப்பதுபோல காணப்படும்.

உதடுகளுக்கு ஊட்டமளிக்க உதவும் சில எளிய வழிகள் உதடுகளை இதனை உபயோகப்படுத்தி சிலவற்றை பயன்படுத்தலாம்.

தேன், தேங்காய் எண்ணெய்

தேன் மற்றும் தேங்காய் எண்ணெயின் கலவையானது உலர்ந்த உடைந்த உதடுகளில் தடவுவதால் மாய்சரைசர் மாதிரி ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும். ஒரு டேபிள் ஸ்பூன் தேனுடன் ஒரு  தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை கலந்து படுக்கு முன் உதடுகளில் தடவி காலையில் கழுவிவர உதடுகள் மென்மையாகும்.

சர்க்கரை ஸ்கரப்

சர்க்கரையை தேங்காய் எண்ணெய் கலந்து வட்டமாக  உதடுகளில் ஸ்கிரப்  மாதிரி மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து வெது  வெதுப்பான நீரில் கழுவிவர இறந்த சரும செல்களை அகற்றி புதிய செல் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

கற்றாழை ஜெல்

உலர்ந்த உதடுகளுக்கு சிறந்த இயற்கை தீர்வாக கற்றாழை ஜெல் உதவுகிறது. சிறிது கற்றாழை ஜெல்லை உதடுகளில் தடவி பத்து நிமிடம் கழித்து  வெது வெதுப்பான நீரில் கழுவி வந்தால் உதடுகள் ஈரப்பதம் பெற்று மென்மையாகும்.

இதையும் படியுங்கள்:
இயற்கையான முகத்தை பிரகாசமாக்கும் 3 ஃபேஸ் ஸ்க்ரப்புகள்!
Get rid of chapped lips in winter

வெள்ளரி துண்டுகள்

வெள்ளரி கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தை  குறைப்பது மட்டுமல்லாமல் வறண்ட உதடுகளை நீரேற்றமாக்கி ஈரப்பதத்தை தக்க வைக்கும். உதடுகளில் வெள்ளரித் துண்டுகளை தேய்த்து வந்தால் மென்மையாகும்.

தண்ணீர் நிறைய குடிக்கவும்

நிறைய தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கவும். ஈரப்பதமான உதடுகளை பராமரிப்பதற்கு நீரேற்றமாக இருப்பது முக்கியம் சருமத்தின் உள்ளே என்று நீரேற்றமாக வைத்திருக்க நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். வறண்ட உடைந்த உதடுகளுக்கு நல்ல வழி வகுக்கும். உதடுகள் அழகாகவும், சிறந்ததாகவும் இருக்க அதிக தண்ணீர் குடிப்பதால் சருமம் உதடுகள் ஈரப்பதமாக இருக்கும்

இதில் ஏதாவது ஒன்றை செய்துவர உதடுகள் வெடிப்பு ஏற்படாமல் ஈரத்தன்மையுடன் உதடுகள் அழகாக பள பளக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com