
முகத்தில் சிலருக்கு கரும்புள்ளிகள் இருப்பது சகஜம். ஆனால் அவை உங்கள் அழகை குறைப்பதுதான் பிரச்னை. அத்தகைய சூழ்நிலையில் அதை அகற்ற நீங்கள் பல்வேறு வகையான ஸ்கரப்புகள் கரும் புள்ளிகளை அகற்றும் பொருட்களை பயன்படுத்துவீர்கள். ஆனால் பல சமயங்களில் அவை பலன் அளிப்பது இல்லை. சில நேரங்களில் கெமிக்கல் தயாரிப்புகள் பக்க விளைவுகளையும் உண்டாக்கலாம்.
கரும்புள்ளிகளை நீக்க இங்கே ஐந்து வீட்டு குறிப்புகளை முயற்சி செய்து பாருங்கள். அவை கரும்புள்ளிகளை விரைவாக அகற்றுவதோடு எந்த பக்க விளைவுகளும் இருக்காது.
முல்தானி மிட்டி.
கரும்புள்ளிகளை நீக்க முந்தானை மெட்டி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இதற்கு ஒரு ஸ்பூன் முந்தாணி வெற்றியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிது வேப்பம்பூ எலுமிச்சைசாறு ரோஸ் வாட்டர்கள் வந்து மென்மையான பேஸ்ட்டாக்கி முகத்தில் 15 நிமிடம் காயவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் முகம், மூக்கில் உள்ள புள்ளிகள் நாளடைவில் மாறும்.
மஞ்சள்.
மஞ்சளை கொண்டும் கரும்புள்ளிகளை நீக்கலாம். இதற்கு ஒரு ஸ்பூன் மஞ்சளை எடுத்து அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் ஆக்கி இதனை முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊறவைத்து கைகளால் மசாஜ் செய்து, பின் நீரிரில் முகத்தை கழுவி வரலாம். இதனால் முகம், மூக்கில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.
எலுமிச்சை.
கரும்புள்ளிகளை நீக்க ஒரு தேக்கரண்டி தேன் எடுத்து அதில் சம அளவு எலுமிச்சைசாறு கலந்து, இந்த பேஸ்ட்டை கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் காயவைத்து அதன் பின் நீரில் முகத்தை கழுவவும்.
பேக்கிங் சோடா.
ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் ஆரஞ்சு தோல் பேஸ்ட்டை கலக்கவும். அதன் பின் கலவையை முகத்தில் 15 நிமிடங்கள் தடவி காயவிடவும். பின்னர் சிறிது தண்ணீர் தடவி லேசான கைகளால் மசாஜ் செய்து பின் நீரில் கழுவவும். இதனால் கரும்புள்ளிகள் நீங்கும்.
இலவங்கப் பட்டை
இலவங்க பட்டை மசாலா மட்டும் அல்ல. இது சருமத்துக்கும் உடலுக்கும் பல நன்மைகளை தரும். இதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கரும்புள்ளிகளை அகற்ற செய்யும். இதை பொடியாக்கி தேனுடன் கலந்து பயன்படுத்தி பேஸ்ட் ஆக்கி கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் மெதுவாக தடவி, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் கரும்புள்ளிகளை காணாமல் போகச்செய்யும்.
இதில் ஏதாவது ஒன்றை வாரம் ஒருமுறை செய்தால் கரும்புள்ளிகள் நீங்கும்.