meta property="og:ttl" content="2419200" />

பொடுகு பிரச்னையைப் போக்கும் 5 எண்ணெய்கள்!

Essential oils
Essential oils
Published on

பெண்கள் ஆண்கள் என அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்னை பொடுகுத் தொல்லை. அதுவும் சிலருக்கு பொடுகு உதிரும் அளவிற்கு மோசமாக இருக்கும். பொடுகு தொல்லையைப் போக்கும் சில எண்ணெய்களைப் பார்க்கலாம்.

முடி கொட்டுவதற்கு முக்கிய காரணம் பொடுகுதான். கூந்தல் மற்றும் தலையை சுத்தமாக வைத்துக்கொண்டாலே முடி உதிர்வு ஏற்படாது. சுற்றுச்சூழல், ஊட்டச்சத்து குறைபாடு, முறையான பராமரிப்பு இன்மை போன்றவற்றால் பொடுகு ஏற்படுகிறது. இந்த பொடுகு பிரச்னையை சரி செய்ய சில முக்கியமான அத்தியாவசிய எண்ணெய்கள் குறித்துப் பார்ப்போம்.

புதினா எண்ணெய்:

புதினா இலையை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் புதினா எண்ணெயை தலையில் தேய்த்தால், உச்சந்தலையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனை தினமும் தேய்த்து வந்தால், முடி அடர்த்தியாக வளரும். மேலும் இது உச்சந்தலையில் வறட்சியை தடுக்கும். ஆகையால், பொடுகு பிரச்னையின் தீர்வு புதினா எண்ணெய்.

ரோஸ்மேரி எண்ணெய்:

 நிறைய முடி கொட்டுகிறது என்று சொல்பவர்கள் ரோஸ்மேரி எண்ணெயைப் பயன்படுத்தலாம். இது முடி உதிர்வுக்கு நிரந்தர தீர்வாகும். இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பொடுகு போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. மேலும் முடி வளர்ச்சியை தூண்டுகிறது.

யூகலிப்டஸ் எண்ணெய்:

இது இயற்கையான கிருமி நாசினியாக செயல்படுவதால் பொடுகு போன்ற பூஞ்சை பிரச்சனைகளை சரி செய்கிறது. இது கூந்தலைப் பாதுகாத்து முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சியையும் தூண்டும்.

லாவண்டர் எண்ணெய்:

முடி உதிர்வைத் தடுப்பதற்கு இந்த லாவண்டர் எண்ணெய் உதவுகிறது. மேலும் லாவண்டர் எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பொடுகு போன்ற பூஞ்சை பாதிப்பிலிருந்து கூந்தலை பாதுகாக்கிறது.

டீ ட்ரி எண்ணெய்:

பொடுகு பாதிப்பை ஏற்படுத்தும் பூஞ்சைகளையும், உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுகளையும் சரி செய்வதற்கு டீ ட்ரீ எண்ணெய் உதவுகிறது. இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பொடுகு பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
கற்றாழை ஜெல் முகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள்!
Essential oils

 மேற்சொன்ன ஐந்து எண்ணெய்களில் ஒன்றை வழக்கமாக பயன்படுத்தி வரலாம்.

எப்படி பயன்படுத்துவது?

Vegetable எண்ணெயுடன்  கலந்து வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் 20 முதல் 30 நிமிடங்கள் ஊறவைத்துவிட்டு தலைக்கு குளிக்க வேண்டும்.     கெமிக்கல் இல்லாத ஷாம்புகளை பயன்படுத்துவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com