30 பிளஸ் பெண்களுக்கான 6 விதமான சிகை அலங்காரங்கள்!

சிகை அலங்காரங்கள்...
சிகை அலங்காரங்கள்...

30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு குறிப்பிட்ட சில சிகை அலங்காரங்கள் அவர்களின் ஆளுமைத்தன்மை, நேர்த்தி மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கின்றன. அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். 

அழகு என்பது உண்மையிலேயே வயதைக் கடந்தது. அழகாக நேர்த்தியாக உடை அணிவதன் மூலமும் புதிய வகையான சிகை அலங்காரத்தை கடைப்பிடிப்பதன் மூலமும் ஒருவரை புத்துணர்ச்சியுடனும் அழகாகவும் தோற்றமளிக்கச் செய்யலாம். 

1. பாப் கட்;

பாப் கட்
பாப் கட்

குட்டையான தலைமுடியை வைத்துக் கொள்ள விரும்பும் பெண்களுக்கு ஏற்ற ஒரு ஹேர் ஸ்டைல். உயர் பதவியில் இருக்கும் பெண்களுக்கு இது ஒரு தனி அழகைத் தரும். ‌

கன்னம்  வரை நீளும் கூந்தலுடன் கூடிய பாப் கட் ஹேர் ஸ்டைல் பார்ப்பதற்கு எளிமையாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும். இது ஒரு அழகியல் தோற்றத்தை தரும். இது எக்காலத்திற்கும் ஏற்ற ஒரு கிளாசிக் ஹேர் ஸ்டைல். பாப் ஹேர் ஸ்டைல் உள்ள பெண்கள் தன்னம்பிக்கை மற்றும் நாகரீகத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறார்கள். 

2. லேயர் கட்;

லேயர் கட்
லேயர் கட்

இது இளம் பெண்களின் விருப்பமாகவும் இருக்கிறது. இந்த லேயர் கட் ஹேர் ஸ்டைல் மூலம் மென்மையான அலை அலையான கூந்தல் முகத்தைச் சுற்றி அழகாக விழும் இந்த நீண்ட அடுக்குகளின் சாராம்சம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். 

நல்ல அழகான நேர்த்தியான அடுக்குகள் கொண்ட இந்த லேயர் கட் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும் இது ஒரு தனிப்பட்ட பாணியை காட்டுகிறது. அலுவலகத்திற்கும் மற்றும் விருந்துகளுக்கு செல்லும் போதும் இந்த ஹேர் ஸ்டைல் ஏற்றது.

3. போனிடெயில்;

போனிடெயில்
போனிடெயில்
இதையும் படியுங்கள்:
சிறுவர் கதை - புது சைக்கிள்!
சிகை அலங்காரங்கள்...

இது ஒரு எளிமையான சிகை அலங்காரம். ‌மொத்த தலைமுடியையும் பின்னோக்கி இழுத்து உயரமாக தூக்கி பேண்ட் போடும் முறையில் அமைந்திருக்கும் இது உலகளவில் பொதுவாக கடைப்பிடிக்கப்படும் ஒரு சிகை அலங்காரமாகும் விளையாட்டு வீரர்கள் வணிக நிபுணர்கள் போன்றோர் இதை கடைப்பிடிக்கிறார்கள். இந்த ஹேர் ஸ்டைல் செய்து கொள்வது மிகவும் எளிது அதிக நேரம் பிடிக்காது. 

4. அப்டோ;

இது விசேஷமான சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற நேர்த்தியான சிகை அலங்காரம் ஆகும். இது கர்ள்ஸ், ட்விஸ்ட்டுகள் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு சிறந்த ஹேர் ஸ்டைல் என்று இளம் பெண்கள் மத்தியில் குறிப்பிடப்படுகிறது. இந்த சிகை அலங்காரத்தை உடைய பெண்கள் நேர்த்தியான அழகுடன் மிளிர்வார்கள். இது எல்லா நிகழ்வுகளுக்கும் பொருத்தமாக அமைகிறது. இந்த ஹேர் ஸ்டைலில் பளபளப்பான ஹேர்பின்கள், மென்மையான பூக்கள் கொண்டு அலங்காரம் செய்து கொள்ளலாம். இது நேர்த்தி நம்பிக்கை, மற்றும் புதுமையான நுட்பத்தின் அடையாளமாக உள்ளது. 

பீச் வேவ்ஸ்
பீச் வேவ்ஸ் Image credit - fabmood.com

5. பீச் வேவ்ஸ் (கடற்கரை அலைகள்) 

இது சாதாரண தோற்றத்தை விரும்பும் பெண்களுக்கு ஏற்றது. பொதுவாக கடற்கரை அலைகள் பார்க்க வசீகரமாக இருக்கும். இந்த சிகை அலங்காரம் அது போல தான். எளிமையான மற்றும்  அழகான தோற்றத்தையும் தருகிறது. இது எல்லா சூழ்நிலைகளுக்கும் ஏற்றது ‌. சுருள் சுருளாக அலைகள் போல முகத்திற்கு தனி அழகை கொடுக்கும் 

6. ஹாஃப் அப் ஹாஃப் டவுன்

ஹாஃப் அப் ஹாஃப் டவுன்
ஹாஃப் அப் ஹாஃப் டவுன் Image credit - fabmood.com

இது நேர்த்தியான சிகை அலங்காரமாக கருதப்படுகிறது. அதிநவீன தோற்றத்தை வழங்குகிறது அலுவலகத்துக்கு செல்லும்போதும் விசேஷங்களுக்கு விருந்துகளுக்கு செல்லும்போதும் இந்த சிகை அலங்காரம் ஏற்றது இது பரந்த முகம் கொண்ட பெண்களுக்கு ஏற்றது. தலைமுடியின் மேல் பகுதியை பின்னுக்கு இழுத்து பளபளப்பான நேர்த்தியான தோற்றத்தை உருவாக்கலாம். கீழ்ப்பகுதிகளில் அடுக்கடுக்கான சுருள் முடிகள் ஒட்டுமொத்த தோற்றத்தை மென்மையாக்குகின்றன. நகைகள் பதிக்கப்பட்ட ஹேர்பின்கள் அல்லது புதுமையான ஆக்சஸரிஸை சேர்த்தால் அந்த ஹேர் ஸ்டைல் இன்னும்  அழகாகும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com