ஒரு நல்ல ஹேர் ஸ்டைல் என்பது ஒரு ஆணின் தோற்றத்தை முழுமையாக மாற்றும் சக்தி கொண்டது. ஆனால் ஒருவர் சரியான ஹேர் ஸ்டைலைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்லாமல், அதை சரியாகப் பராமரிப்பதும் முக்கியம். தவறான ஹேர் ஸ்டைல் ஒருவரின் தோற்றத்தைக் கெடுத்து நம்பிக்கையின்மையை உண்டாக்கும். இந்தப் பதிவில் ஆண்கள் தவிர்க்க வேண்டிய பொதுவான ஹேர் ஸ்டைல் தவறுகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.
ஆண்கள் தவிர்க்க வேண்டிய ஹேர் ஸ்டைல் தவறுகள்:
1. ஒவ்வொருவரின் முகவடிவமும் வித்தியாசமானது. நீளமான முகம், வட்ட வடிவ முகம், சதுர வடிவ முகம் என பல்வேறு வகையான முக வடிவங்கள் உள்ளன. தங்களது முக வடிவத்திற்கு ஏற்ற ஹேர்ஸ்டைலை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். உதாரணமாக நீளமான முகம் கொண்டவர்கள் தலைக்கு முன்பகுதியில் அதிக வால்யூம் கொடுத்து முகத்தை குறுகியதாகக் காட்டும் ஹேர் ஸ்டைலை தேர்ந்தெடுக்கலாம்.
2. தலைமுடியின் தன்மைக்கு ஏற்றவாறு ஹேர்ஸ்டைல் தேர்ந்தெடுப்பது முக்கியம். நேரான, சுருள் வடிவ, அடர்த்தியான என பல வகையான முடியின் தன்மைகள் உண்டு. எனவே, ஒவ்வொருவரும் தங்கள் முடியின் தன்மைக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல் வைப்பது முக்கியம். சுருள் தலைமுடி கொண்டவர்கள் தலைமுடியை அதிகமாக வெட்டி குறைந்த பராமரிப்பு தேவைப்படும் ஹேர் ஸ்டைலைத் தேர்ந்தெடுக்கலாம்.
3. ஃபேஷன் என்பது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். பழைய டிரெண்டுகளைப் பின்பற்றுவது ஒருவரின் தோற்றத்தை பழையதாகக் காட்டும். எனவே, தற்போதைய டிரண்டுகளைப் பின்பற்றுவதன் மூலம் ஆண்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்.
4. அதிகப்படியான ஸ்டைலிங் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இது தலைமுடியை பாதித்து அதன் இயற்கையான அழகை கெடுக்கும். எனவே, தேவையான அளவு மட்டுமே ஸ்டைலிங் பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
5. தலைமுடியை தவறாக வெட்டுவது ஒருவரின் தோற்றத்தை முற்றிலமாக கெடுத்துவிடும். எனவே, முடி வெட்டுவதற்கு நல்ல ஹேர் ஸ்டைலிஸ்ட்டை தேர்ந்தெடுத்து அவர்களின் ஆலோசனையை பின்பற்றி தலைமுடியை வெட்டுவது நல்லது.
6. எந்த ஸ்டைலாக இருந்தாலும் தலைமுடி இருந்தால்தான் அதை செட் செய்ய முடியும். எனவே, தலை முடி பராமரிப்புக்கு கவனம் கொடுக்க வேண்டும். உங்கள் தலைமுடியை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவு ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்தி ஆரோக்கியமாகப் பராமரிக்கவும்.
ஒரு நல்ல ஹேர் ஸ்டைல் என்பது ஒருவரின் ஆளுமையை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான அம்சம். மேற்கண்ட தவறுகளைத் தவிர்ப்பதன் மூலம், நீங்கள் உங்களுக்கு ஏற்ற ஹேர் ஸ்டைலைத் தேர்ந்தெடுத்து உங்கள் தோற்றத்தை மேம்படுத்தலாம்.