வீட்டிலேயே கருவளையத்தை சரி செய்யும் 6 முறைகள்!

Azhagu kurippugal...
Beauty tipsImage credit - pixabay
Published on

ன்றைய பரபரப்பான வாழ்க்கையில் இரவு வெகுநேரம் தூங்காமல் விழித்திருப்பதும், பகலில் மொபைல் போன் லேப்டாப் ஆகியவற்றில் வேலை பார்ப்பதும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இதனால் ஆரோக்கியம் கெடுவதுடன், அழகில் அதாவது கண்களுக்கு கீழே கருவளையம் ஏற்படுகிறது. இது சோர்வு மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இதற்கு தீர்வாக வீட்டிலேயே கடைபிடிக்க வேண்டிய 5 முறைகள் குறித்த பதிவுதான் இக்கட்டுரை.

1. குங்குமப்பூவின் நன்மைகள்

குங்குமப்பூவில் உள்ள கரோட்டின் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் குரோசின் போன்ற பண்புகள் சருமத்தை பிரகாசமாக்கி, கண்களைச் சுற்றியுள்ள தோலை ஒளி மற்றும் பிரகாசமாக மாற்றி கருவளையத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

2. துளசியின் நன்மைகள்

துளசியில் உள்ள இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்ட்டி பாக்டீரியல் பாக்டீரியாவை எதிர்த்து போராடி சருமத்தை ஆரோக்கியமாகவும் மேலும் வீக்கத்தையும் சிவப்பையும் குறைப்பதோடு கண்களில் ஏற்படும் கருவளையத்தையும் குறைக்கிறது.

3. தேனின் நன்மைகள்

தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் ஈரப்பதத்தை ஆழமாக தக்க வைப்பதில் முக்கிய பங்காற்றுவதால் கருவளையத்தை நீக்குவதில் தேனின் பங்கு அபிரமிதமானது.

4. ஆம்லா ஜூஸின் நன்மைகள்

நெல்லிக்காயில் உள்ள கொலாஜன் வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் சருமத்தின் முன்கூட்டிய முதுமையை தடுப்பதோடு சருமத்தை பளபளப்பாக்கி கண்களைச் சுற்றியுள்ள சருமத்தையும் இளமையாக வைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

இதையும் படியுங்கள்:
வாசனை திரவியங்களும், அவற்றின் வகைகளும்!
Azhagu kurippugal...

5. கொழுப்பு வகை உணவை உண்ணல்

முந்திரி, வேர்க்கடலை, வெல்லம் மற்றும் தேங்காய் போன்ற சிற்றுண்டிகளை மாலை 4 மணிக்கு சாப்பிடுவதால் இந்த உணவில் உள்ள நல்ல கொழுப்புகள் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருந்து கண்களுக்கு கீழ் உள்ள கருவளையத்தை சரி செய்கின்றன.

6. கருவளையங்களுக்கு வெல்லம்

வெல்லத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்காற்றுவதால் இது சிறந்த ரத்த ஓட்டத்தை கண்களை சுற்றி வழங்கி கருவளையத்தைப் போக்குகிறது.

மேற்கண்ட முறைகள் சருமத்தை தரமுள்ளதாக்கி கண்களுக்கு கீழ் உள்ள கருவளையத்தை போக்குவதில் பெரும் பங்காற்றுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com