6 ’வாவ்’ ஜிமிக்கி கம்மல் வகைகள்!

ஜிமிக்கி கம்மல் வகைகள்
ஜிமிக்கி கம்மல் வகைகள்www.nakkheeran.in/24-by-7-news

முன்பெல்லாம் ஒரு நகை செட் எடுத்தாலே அதில் தோடு, மோதிரம், நெக்லஸ் ஆகியவை வந்துவிடும். அதைதான் பெரும்பாலும் நிறைய பெண்கள் பயன்படுத்தினார்கள். ஃபேஷன் என்பது சுழற்சிமுறையில் மாறிக்கொண்டே வருகிறது. ஒரு காலத்தில், பண்டிகை நாட்களில் பெண்கள் தங்களை நிறைய ஆபரணங்களால் அலங்கரித்துக் கொள்ளவே விரும்புவார்கள். ஆனால், இப்பொழுது ஒன்று அல்லது இரண்டு ஆபரணங்களைப் பயன்படுத்தியே தங்களை அழகாகக் காட்டிக் கொள்கின்றனர். ஆம்! புடவை அணியும்போது, ஒரே பெரிய ஜிமிக்கி போட்டால் அவ்வளவுதான் முடிந்தது. அணியும் புடவைக்கும் பெரிதான ஜிமிக்கிக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் இந்த மாடல் லேட்டஸ்ட் ட்ரெண்டிங்கில் உள்ள ஒன்று. அப்போது நாம் ஜிமிக்கி மாடல் பற்றித் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்தானே?

1. மீனாக்காரி ஜிமிக்கி

மீனாக்காரி ஜிமிக்கி
மீனாக்காரி ஜிமிக்கி

ந்த மீனாக்காரி ஜிமிக்கி மிகவும் பளிச்சென்ற நிறத்தில் இருக்கும். ஆகையால் பண்டிகை காலங்களில் இது மிகவும் அழகாக இருக்கும். மீனாக்காரி ஜிமிக்கியில் அனைத்து வகையுமே உங்கள் உடைக்கு ஏற்றவாறுதான் இருக்கும். குறிப்பாக பனாரஸின் குலாபி மீனாக்காரி ஜிமிக்கி வெள்ளை நிறத்தில் இளஞ்சிவப்பு மீனாக்காரி வேலைப்பாட்டுடன் செய்யப்படும் ஒன்று.

2. ஹூப் ஜிமிக்கி

ஹூப் ஜிமிக்கி
ஹூப் ஜிமிக்கி

ந்த வகையான ஜிமிக்கி வளையத்திற்குகீழ் ஜிமிக்கி இருக்கும்படியான வடிவமைப்புடன் இருக்கும். இந்த வகை ஜிமிக்கியை வெஸ்டர்ன் அவுட்பிட்டிற்கும் பயன்படுத்தலாம்.

மேலும், பெரிதாக காதை மறைக்கும் அளவிற்கு ஜிமிக்கி அணிய விரும்பாதவர்கள் ஹூப் ஜிமிக்கி பயன்படுத்தலாம். ஏனெனில் இது காது பகுதியில் வளையம் வந்து கீழே ஜிமிக்கியாக தொங்கும். சற்று காதை இழுப்பது போல்தான் இருக்கும்.

3. சாந்த் பாலி ஜிமிக்கி

சாந்த் பாலி ஜிமிக்கி
சாந்த் பாலி ஜிமிக்கி

து நிலா வடிவில் செய்யப்படும் ஒரு ஜிமிக்கி. அதிக வேலைப்பாடு இல்லாமல், மிகவும் சாதாரணமாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருக்கும். ஆகையால் எந்த வகையான ஆடைக்கும் இந்த ஜிமிக்கியை பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
சாதிப்பதற்கு வேண்டிய 7 திறமைகள்!
ஜிமிக்கி கம்மல் வகைகள்

4. சூரியகாந்தி ஜிமிக்கி

சூரியகாந்தி ஜிமிக்கி
சூரியகாந்தி ஜிமிக்கி

து சூரியன் வடிவில் காதில் பெரிய வட்ட தோடுடன் கீழே பெரிய ஜிமிக்கியாகவும் இருக்கும். இது உலோக வகை ஜிமிக்கி என்பதால் பண்டிகை காலம் மற்றும் பார்ட்டிக்கும் பயன்படுத்தலாம். சிறிய வகை சூர்யகாந்தி ஜிமிக்கிகளை தினமும் பயன்படுத்தலாம்.

5. ஜிமிக்கி

ஜிமிக்கி
ஜிமிக்கி

ந்த வகையான ஜிமிக்கி கீழே அடுக்கடுக்காக இருக்கும். இப்போது இந்த வகையான ஜிமிக்கிகள் நிறைய வடிவமைப்புகளுடன் கிடைக்கின்றன. மெட்டல் மாடலும் உள்ளது.

6. காஷ்மிரி ஜிமிக்கி

காஷ்மிரி ஜிமிக்கி
காஷ்மிரி ஜிமிக்கி

ந்த வகையான ஜிமிக்கியின் தனித்துவமே அதனுடைய சரம்தான். நீளமான சரத்திற்கு கீழ்தான் ஜிமிக்கி இருக்கும். மேலும், கழுத்துப் பகுதி வரை மூன்று சரங்கள் அடுக்கடுக்காக இருக்கும். ஆகையால், குறுகிய கழுத்துடன் இருப்பவர்கள் இந்த வகையான ஜிமிக்கி பயன்படுத்துவது அழகாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com