ஆண்கள் அழக அழகாக உடை அணிந்து கொண்டால் மட்டும் போதாது. அணிந்திருக்கும் ஆடை, ஷூக்கள் மற்றும் செருப்புகளுக்கு ஏற்ற சாக்ஸ் அணிவது அவசியம். ஆண்களுக்கான சாக்ஸ்களில் பல வகைகள் உள்ளன. வெவ்வேறு நீளம் கொண்டவைகளாக இவை இருக்கும்.
1. நோ ஷோ சாக்ஸ் (No Show socks);
குறுகிய காலுறைகள் எனப்படும் இவை பார்வைக்கு அணிந்திருப்பது போல தெரியாவிட்டாலும் வழக்கமான சாக்ஸின் வசதியையும் பாதுகாப்பையும் வழங்கு கின்றன. வெயில் காலத்தில் அதிகமாக வியர்க்கும். மோசமான வியர்வை நாற்றத்தை இந்த சாக்ஸ் தடுக்கிறது. கணுக்காலுக்கு கீழே மறைந்திருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை காலிலிருந்து நழுவாத வண்ணம் சிலிக்கான் பிடிகளுடன் உள்ளது.
2. கணுக்கால் சாக்ஸ் ( Ankle Socks);
கணக்காலுக்கு மேலே வரை உள்ள இவற்றை சாதாரண உடைகள், சினீக்கர்கள் மற்றும் லோகட் ஷூக்களுடன் பயன்படுத்தலாம். இவை ஈரப்பதத்தை உறிஞ்சும் துணிகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இவை பல வித வண்ணங்களில் கிடைக்கின்றன. ஜிம்மிற்கு செல்லும் போதும் ஷார்ட்ஸ் அணியும்போதும் இது மேட்ச் ஆக இருக்கும்.
3. க்ரூ சாக்ஸ்; ( Crew Socks)
பருத்தி, கம்பளி அல்லது இரண்டும் சேர்ந்த கலவையால் தயாரிக்கப்படுகிறது. அன்றாட பயன்பாட்டிற்கும், அலுவலகத்துக்குச் செல்லும் போதும் அணிந்து கொள்ளலாம். கணுக்கால் மற்றும் முழங்காலின் கீழே வரை இதன் நீளம் இருக்கும். கப்பலின் பணியாளர்கள் தங்கள் ஆடைகளை தரமானதாக வைத்திருக்க வேண்டும். இந்த காலுறைகள் அவர்களுக்கு வசதியாக இருப்பதால் க்ரூ சாக்ஸ் என்று பெயர் வந்தது.
4. தெர்மல் சாக்ஸ்; (Thermal Socks)
குளிர்காலத்திற்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்படுபவை. இந்த வகையான சாக்ஸ்கள் நன்றாக குளிரை தாங்கி வெப்பத்தை வழங்குகிறது. தடிமனான கம்பளியால் செய்யப்படுகின்றன. இது கணுக்கால் முதல் காலின் காஃப் மசில் வரை நீண்டிருக்கும்.
5. தடகள சாக்ஸ்; (Atheletic Socks)
விளையாட்டு வீரர்களுக்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்படுபவை இவை. பலவிதமான பாணிகளில் நீளங்களிலும் கிடைக்கின்றன. சராசரி சாக்ஸை விட தடிமனான பொருளால் செய்யப்படுகின்றன. இவை கடினமாக உழைக்கும். பாதங்களில் உள்ள வியர்வையை உறிஞ்சுவதோடு குஷன் அமைப்பையும் கொண்டிருப்பதால் இது குதித்தல் ஓடுதல் போன்ற விளையாட்டுகளுக்கு ஏற்ற வகையில் இருக்கின்றன. ஜிம்மில் ஓட்டம் சைக்கிளிங் போன்ற செயல்களை செய்யும் போது இந்த வகையான காலுறைகள் அணிந்து கொள்ளலாம்.
6. டோ சாக்ஸ் ( Toe Socks)
ஓட்டப்பந்தய வீரர்களுக்காக தயாரிக்கப்படுவது இது. கால் விரல்களில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி எடுக்கவும், அணிந்திருக்கும் ஷூ அல்லது செருப்புடன் ஒட்டிக் கொள்வதையும் தடுக்கிறது. ஓட்டத்தின் போது அணிந்து கொள்ள ஏற்றது. அணிந்து கொள்ள வசதியாக இருக்கிறது. பருத்தி கம்பளி அல்லது இரண்டும் சேர்ந்த கலவையால் தயாரிக்கப்படுகிறது.
7. குவாட்டர் சாக்ஸ் (Quarter socks)
கணுக்கால் எலும்பை மறைக்கும் வண்ணம் உள்ளது. கணக்கால் மற்றும் க்ரூ சாக்ஸ்க்கு இடையே நீளமுள்ளது. சாதாரண உடைகள் அல்லது விளையாட்டு க்காக பயன்படுத்தப்படுகிறது. பருத்தி கம்பளி அல்லது இரண்டும் சேர்ந்த கலவையால் தயாரிக்கப்படுகிறது.
சாக்ஸ்களை எப்படித் தேர்ந்தெடுப்பது?
கால் உறைகளில் பல வகைகள் இருந்தாலும் அவரவருக்கு தேவையான வகைகளை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். எடுத்துக்காட்டாக குளிர் காலத்தில் பயன்படுத்தக்கூடிய சாக்ஸுகளை வெயில் காலத்தில் அணியக்கூடாது. விளையாட்டு வீரர்கள் அணியும் காலுறைகள் சாதாரண மனிதருக்கு தேவைப்படாது. அணியும் உடைகளுக்கேற்ற வகையில் சாக்ஸ் அணிவது முக்கியம். நம் நாட்டு சூழலுக்கு, கால் உறைகள் பருத்தியால் செய்யப்பட்டிருந்தால் அவை அணிவதற்கு வசதியாக இருக்கும்.