கால் நகங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள 7 எளிய வழிகள்!

Clean Nails
Clean Nails

ஒருவர் எந்த அளவு சுத்தமாக இருக்கிறார் என்பதை அவர் நகங்களைப் பராமரிப்பதை வைத்து கூறலாம். சிலர் நகங்களைப் பெரிதாக வளர்த்து அதில் பாலிஷ் போட்டு அழகாகவே வைத்துக்கொள்ள விரும்புவார்கள். சிலர் நகங்களுக்கு மட்டுமே பார்லர் சென்று பராமரிப்பார்கள். அந்தவகையில் கால் விரல்களில் உள்ள நகங்களை நாம் எப்படி பராமரிப்பது என்பதைப் பற்றி பார்ப்போம்.

1.  கைவிரல்களின் நகங்களை நாம் அழகுக்காக நீளமாக வளர்ப்போம். ஆனால் கால் விரல்களை நீளமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று எந்த அவசியமும் இல்லை. நாம் என்னதான் காலணி போட்டு நடந்தாலும் அதிகமான அழுக்குகள் கால் நகங்களில் சேரத்தான் செய்யும். இதுவே சிறிய நகங்களாக வைத்துக்கொண்டால் அழுக்குகள் சேர்வது குறையும். ஆகையால், நகங்களை முறையாக வெட்டி சிறியதாக வைத்துக்கொள்ளுங்கள்.

2.  நகங்களை சுத்தம் செய்ய அதற்கான Brushகளைப் பயன்படுத்துங்கள். இது எளிமையாக நகங்களுக்கிடையே இருக்கும் இறந்த தோல்களை நீக்கிவிடும். ஆகையால் அழுக்குகள் நீங்கி நகங்கள் அழகாக இருக்கும்.

3.  குளிக்கும்போது எப்படி உடலின்  அழுக்கை நன்றாகத் தேய்த்து நீக்குகிறோமோ, அதேபோல் ஒவ்வொருமுறையும் சோப் பயன்படுத்தி கால் விரல்கள், நகங்கள், குதிகால், பாதம் ஆகியவற்றையும் நன்றாக அழுக்குப் போகும் அளவுக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

4.  ஷூவை எப்போதும் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் வியர்வை தேங்கி விரல் நகங்கள் அழுக்குப் படிவதோடு, நகங்கள் உடையக்கூடியதாகவும் மாறிவிடும். அதேபோல் காலணிகளை நன்றாக உலரவைத்த பின்னர்தான் அணிய வேண்டும். காலையில் ஷூ அணிவதற்கு முன்னர் காலில் டால்கம் பவுடரை பயன்படுத்திவிட்டு அணியலாம். இது புத்துணர்ச்சியாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

5.  ஒவ்வொருமுறையும் நகம் வெட்டும்போது அதிலிருக்கும் அழுக்கை நீக்கும் கருவிகளையும் மறக்காமல் பயன்படுத்துங்கள்.

6.  இவையனைத்தையும் விட மிக முக்கியமானது ஒன்று உள்ளது. அழுக்குகளை நீக்கிய பின்னர் வாரம் ஒருமுறை தோலின் நிறத்திற்கேற்ப நெயில் பாலிஷ் போட வேண்டும். இது உங்கள் கால் நகங்கள் புதியதாக இருப்பதுபோல காண்பிக்கும். அதேபோல் ஒவ்வொரு வாரமும் பழைய நெயில் பாலிஷை நீக்கிவிட்டு புதிதாக போட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் சருமத்திற்கு ஏற்ற Primer-ஐ தேர்ந்தெடுப்பது எப்படி?
Clean Nails

7.   நகங்கள் வெட்டும்போது வளைவுகளை கவனித்து நேர்த்தியாக வெட்ட வேண்டும். அதேபோல் ஒவ்வொரு நகங்களையும் ஒரே மாதிரியாகவும் சீராகவும் வெட்ட வேண்டும். அப்போதுதான் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

இந்த 7 வழிகளை பின்பற்றி கால் நகங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். கைகள் மற்றும் கால்களின் நகங்களை பல வண்ண நெயில் பாலிஷ் போட்டு அழகுப்படுத்த வேண்டுமென்பதில்லை, சுத்தமாக வைத்துக்கொண்டாலே அழகாகத்தான் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com