புடவைக் கட்டும் பொழுது பெண்கள் செய்யக்கூடாத 9 தவறுகள்!

9 Mistakes Women Shouldn't Make
while tying a saree womenImage credit -pixabay
Published on

பெண்களுக்கு புடவை அழகுதான். எனினும், புடவை கட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன. அவற்றை சரியாக கவனித்து புடவையை கட்டவில்லை என்றால், புடவை கட்டிய முழு அழகு கிடைக்காது. அத்தகைய சின்னச் சின்ன தவறுகளை எப்படி சரிசெய்து புடவையில் ஜொலிப்பது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. புடவை கட்டும்போது பிட்டான பிளவுஸ் அணிவது மிகவும் அவசியம். Drape எடுப்பது போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்திவிட்டு பிளவுஸில்  கோட்டை விட்டால், அது புடவையின் மொத்த அழகையும் கெடுத்துவிடும்.

2. புடவைக்கு சரியான Drape எடுத்துக் கட்டுவது மிகவும் அவசியமாகும். ஒவ்வொரு விழாவிற்கு ஏற்றாற்போல விதவிதமாக Drape style எடுத்துக் கட்டலாம். நீங்கள் தேர்வு செய்யும் Drape style உங்களுக்கு பொருத்தமான Drape style ஆக இருப்பது சிறந்தது.

3. சரியான உள்பாவாடை அணிவது மிக அவசியமாகும். ‘உள்பாவாடை வெளியிலே தெரியப்போவதில்லை. அதில் என்ன இருக்கிறது?’ என்று நினைக்க வேண்டாம். உள்பாவாடை அணிவதற்கு பதில் Shapewear அணிந்தால், அது உங்கள் உடல்வாகை அழகாக எடுத்துக்காட்டும்.

4.புடவை கட்டும்போது அவசியம் கவனமாக செய்ய வேண்டிய விஷயத்தில் Pallu Pleats இருக்கிறது. இதை அழகாக எடுத்துக் கட்டும் பொழுது அது பெண்களுக்கு நளினத்தைக் கூட்டும். Drape க்கு இணையாக Pallu pleats இருக்க வேண்டும்.

5.புடவையின் நீளம் மிகவும் முக்கியமாகும். அதிகமாக இருப்பதோ அல்லது குறைவாக இருப்பதோ உங்களை அசௌகரியமாக உணரவைக்கும்.

6.திருமண விழா, பண்டிகை போன்ற சமயங்களில் புடவைக் கட்டுவதில் நிறைய ஆப்சென்ஸ் இருக்கும். எனினும், நமக்கு எது வசதியாக இருக்கிறதோ அதை தேர்வு செய்து உடுத்துவதே சிறந்தது. Classic saree, pre pleated sarees எதுவாக இருந்தாலும் வசதியாக உணரவில்லை என்றால் மகிழ்ச்சியான தருணம் கெட்டுவிடும்.

7. சரியான Blouse neckline அணிவது மிகவும் அவசியம். நம்முடைய உடல்வாகுக்கு ஏற்றாற்போல பிளவுஸில் Neckline தேர்வு செய்து அணிவது மேலும் அழகைக் கூட்டும்.

இதையும் படியுங்கள்:
Waxing Vs Hair removal cream: சருமத்திற்கு சிறந்த சாய்ஸ் எது தெரியுமா?
9 Mistakes Women Shouldn't Make

8. புடவையை தேர்வு செய்யும்போது சரியான Fabric ஐ தேர்வு செய்வது மிகவும் அவசியமாகும். நிறைய புடவைக்கட்டிய அனுபவமில்லை என்றால் Heavy fabrics saree ஐ தேர்வு செய்யாதீர்கள். அதற்கு பதில் Georgette அல்லது Chiffon போன்ற Light fabric saree ஐ தேர்வு செய்யுங்கள். அதை கையாள்வது சுலபமாக இருக்கும்.

9. கடைசியாக, புடவை அணியும்பொழுது சரியான காலணிகளை தேர்வு செய்து அணிவது மிகவும் முக்கியமாகும். வசதியில்லாத காலணிகளை அணிவதன் மூலம் அசௌகரியமாக உணரக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. எனவே சுலபமான, சௌகரியமான காலணிகளை அணிவது சிறந்ததாகும். இந்த 9 டிப்ஸை புடவைக் கட்டும் பொழுது பின்பற்றி புடவையில் அசத்துங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com