பொதுவாக வேலைக்கு சீக்கிரமாக செல்லும் பெண்களுக்கு மிக தொல்லையாக அமைவது கரடுமுரடான தலை முடிகள்தான். அவசரத்தில் என்ன செய்வது என்றறியாமல் ஒன்று அப்படியே சிக்கு எடுக்காமல் முடியை கட்டிவிட்டு வந்துவிடுவர். இல்லையெனில் பொறுமையாக சிக்கு எடுத்து முடித்து தலை சீவிவிட்டு வேலைக்கு பொறுமையாக செல்வர். இந்த இரண்டையும் ஒரே சமையத்தில் சமாளிக்க மிக உதவியாக இருப்பதே ஹேர் சீரத்தின் வேலை. அதன் நன்மைகள் மற்றும் எப்படி பயன்படுத்துவது என்று இந்த தொகுப்பில் பார்ப்போம்.
ஹேர்சீரத்தின் நன்மைகள்:
1.ஹேர் சீரம் கூந்தலுக்கு மட்டுமே பயன்படுத்தகூடிய ஒரு திரவம். இது கூந்தலில் தேய்த்தால் சுருட்டை முடிகளை சீராக மற்றும் கூந்தலின் மென்மையை மேலும் அதிகரிக்கும்.
2. ஹேர் சீரம் சுற்றுப்புற மாசிலிருந்து உண்டாகும் பாதிப்பை தடுத்து முடியை வலுவாக்குகிறது.
3. இது சிலிக்கான் அடிப்படையிலான சீரம் என்பதால் முடி சேதத்தை குறைக்கும். பொதுவாக சீரம் போன்ற முடிக்கு பராமரிக்கப்படும் அனைத்து விதமான பொருள்களிலும் பயன்படுத்தப்படும் டைமெதிகோன் மற்றும் பாலி சிலாக்ஸேன் இருப்பதால் முடி உடையாமல் இருப்பதற்கு உதவும்.
4.ஹேர் சீரமில் உள்ள செயலிகள் மற்றும் அமினோ அமிலங்கள் தலைமுடியில் ஆழமாக ஊடுருவி முடி உதிவதை தடுக்கும்.
5.ஹேர் சீரம் முடிகளை ஒன்றாக வைத்துக்கொள்வதால் காற்றில் பறக்காமல் இருக்கவும், சிக்கலாவதை தடுக்கவும் உதவி செய்கிறது.
6. இது சூரிய ஒளியில் தீங்கு விளைவிக்கும் சில இராசயங்கள் மற்றும் வெப்பம் தரும் ஹேர் ஸ்டைட்டனர் களிலுருந்து முடி உதிராமல் இருப்பதற்கு உதவுகிறது.
எப்போதெல்லாம் ஹேர்சீரம் பயன்படுத்தலாம்:
தலைமுடி ஈர்ப்பதம் இல்லாதபோதும், அதிக சிக்கல் ஏற்படும்போதும், முடி அதிகமாக உடையும்போதும், முடிகள் சமநிலையில் இல்லாதபோதும் ஹேர் சீரம் பயன்படுத்தலாம்.
பொதுவாக ஹேர்சீரத்திற்கு மட்டுமல்ல அழகுசார்ந்த பொருட்கள் பயன்படுத்தும்போது சருமம் மற்றும் முடியின் தன்மை குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். தன் தலைமுடிக்கு ஏற்ற பிராண்ட் ஹேர்சீரம் தேர்வுசெய்துகொள்ளவேண்டும்.
ஹேர் சீரம் முடியை தட்டையாக்கும் தன்மை கொண்டதால் அடர்த்தியான ஹேர் உள்ளவர்கள் ஹேர் சிரம் பயன்படுத்த கூடாது என்று நினைக்கிறார்கள். அதேபோல் மெல்லியான முடி கொண்டவர்கள் இலகுவான சீரம் பயன்படுத்தலாம்.
கெரட்டின் கொண்ட சீரம் தேர்வு செய்வது நல்லது. இது முடிக்கு ப்ரோட்டின் சத்துகளை அதிகரிக்கும். அதனால் முடி வறண்டிருக்கும் பொழுது அந்த நாளில் எப்போது வேண்டுமென்றாலும் தேய்க்கலாம்.
ஹேர் சீரம் தேய்ப்பதற்கு முன்பு நன்றாக கூந்தலை ஷாம்பு போட்டு அலசிவிட வேண்டும். கூந்தலை அலசாமல் பயன்படுத்தினால் எந்த பயனும் இல்லை. ஷாம்பு, கண்டிஷனர் மற்றும் ஹேர் சீரம் என்று முழு பராமரிப்புடன் பயன்படுத்தினால் நல்ல ரிசல்ட்டை தரும். ஆகையால் முதலில் ஹேர் சீரம் தடவுபவர்கள் ஷாம்பு, கண்டிஷனர் பின் ஹேர் சீரம் பயன் படுத்தலாம்.
முடி அளவிற்கு ஏற்றவாரு ஐந்து அல்லது ஆறு சொட்டு சிரத்தை உள்ளங்கையில் விட்டு முடியை முன்பக்கம் போட்டு நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். ஈரமான முடியில் சீரம் தடவினால் கூந்தலை நன்றாக உலரவைப்பது மிகவும் அவசியம். இல்லையெனில் தலையில் தூசி மற்றும் அழுக்கை ஒட்ட வைக்கும்.