

எலுமிச்சை பழம் பொதுவாகவே நம்மை புத்துணர்வாக்க உதவும். அதில் சிட்ரிக் ஆசிட் நிறைய இருப்பதால் நமக்கு எப்போதும் ஒரு எனர்ஜி கிடைக்கும். ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவர்கள் கூட லெமன் தான் கையில் வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட எலுமிச்சைப்பழம் உடலில் உள்ள செல்களை மட்டும் அல்ல.. தோளில் உள்ள கெட்ட செல்களை நீக்கி, சருமத்தை ஜொலிக்க செய்யும். எப்படி குடித்தால் நல்லது என பார்க்கலாம் வாங்க.
ஊட்டச்சத்து மதிப்பு கொண்ட எலுமிச்சை நீரானது சருமத்திற்கு ஏற்ற ஒரு நல்ல நீரேற்ற மூலமாகும். காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரை குடித்தால் அது உங்கள் சருமத்தின் ஆரோக்கியதில் பெரிய தாகத்தை ஏற்படுத்தும்,
எலுமிச்சை சாறு தீங்கு விளைவிக்கும் நசுக்களை நீக்குவது மட்டுமல்லாமல் சருமத்திற்கு சில அற்புதமான நன்மைகளையும் தருகிறது.
இதை குடிப்பதால் சருமத்தின் தெளிவை ஊக்குவிக்கும் ரத்த ஓட்டத்தில் இருந்து தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் (அ) நச்சு பொருட்களை வெளியேற்றும்
எலுமிச்சையில் காணப்படும் வைட்டமின் சி, தோல் சுருக்கங்கள், வறண்ட சருமம், சருமம் வயதாவதையும் சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளையும் குறையும் உதவுகிறது.
இது முகப்பருவை தடுக்க உதவுகிறது மற்றும் உங்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை கொடுக்கிறது.