மணப்பெண்ணின் முகம் போல பளிச்சென மின்ன எளிய ஃபேஸ்பேக் உங்களுக்காக…

 எளிய ஃபேஸ்பேக்...
எளிய ஃபேஸ்பேக்...

ல்யாண தேதி குறித்ததும் தங்கள் முகத்தை மெருகேற்ற பலவிதமான அழகு சாதனங்களை பெண்கள் தேடிப் பிடித்து பயன்படுத்த தொடங்குவார்கள். சருமத்திற்கு எந்தவித தீங்கும் விளைவிக்காத சில இயற்கை பொருட்களை வைத்து ஃபேஸ்பேக் செய்யலாமா? 

பளபளக்கும் சருமத்திற்கு:

பனீர் ஒரு துண்டு

தேன் 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு‌1 ஸ்பூன்

விட்டமின் இ கேப்சூல் 1

ஒரு கிண்ணத்தில் பன்னீரை போட்டு நன்கு மசித்து கொள்ளவும். அத்துடன் தேன் எலுமிச்சைசாறு கலந்து நன்கு மை போல கலக்கவும். இப்போது பனீர் பேஸ்ட்டில் விட்டமின் ஈ சேர்த்து நன்கு கலந்து விடவும். இதனை அப்படியே மூடி ஒரு ஐந்து நிமிடம் வைத்திருக்கவும்.

முகம் கழுத்து பகுதிகளை நன்கு கழுவி ஈரம் போகத் துடைத்து தயார் செய்து வைத்துள்ள பேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தாராளமாக தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். பிறகு ஒரு 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தையும் கழுத்தையும் நன்கு கழுவி விட பளிச்சென்று மின்னும் சருமம். இந்த ஃபேஸ் பேக்கை வாரம் இருமுறை பயன்படுத்த முகம் பளபளப்பாகும்.

ஓட்ஸ் தயிர் ஃபேஸ் பேக்:

ஓட்ஸ் இறந்த சரும செல்களை அழிக்கவும், சருமத்தில் உள்ள துளைகளில் சேரும் அழுக்குகளை நீக்கவும் பயன்படுகிறது. இது தயிரில் உள்ள லாக்டிக் அமிலத்துடன் சேர்ந்து அற்புதமாக செயல்படும்.

ஓட்ஸ் ரெண்டு ஸ்பூன் 

தயிர் ஒரு ஸ்பூன்

இரண்டையும் நன்கு கலந்து ஐந்து நிமிடங்கள் அப்படியே வைத்து விடவும் பிறகு அதனை முகத்தில் வட்ட வட்டமாக மெதுவாக மசாஜ் செய்து தேய்க்கவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் நன்கு கழுவி விட பளிச்சென்று மின்னும் சருமம்.

ஃபேஸ் பேக்
ஃபேஸ் பேக்

கற்றாழை ஜெல் அவகோடா ஃபேஸ் பேக்:

கற்றாழை ஜெல்லுடன் அவகோடாவை பாதி எடுத்து நன்கு மசித்து சேர்த்து கலக்கவும். அவகோடா வில் ஆரோக்கியமான குறிப்புகள் உள்ளது. இந்த கலவையை முகத்தில் சிறிது திக்காக அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பிறகு குளிர்ந்த நீரால் நன்கு தேய்த்து கழுவி விட புத்துணர்ச்சியுடன் பிரஷ்ஷாக இருப்பதோடு முகப்பரு, எண்ணெய் சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ்பேக் இது.

முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்:

மஞ்சள் தூள் 1 ஸ்பூன்

முல்தானி மெட்டி 2 ஸ்பூன்

ரோஸ் வாட்டர் சிறிது

முல்தானி மெட்டி முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்க உதவும். மஞ்சள் தூள் முல்தானி மெட்டி இரண்டையும் சேர்த்து தேவையான அளவு ரோஸ் வாட்டர் கலந்து அந்த கலவையை முகம், கழுத்துப் பகுதிகளில் தடவி நன்கு காய விடவும். 20 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீர் கொண்டு மெதுவாக தேய்த்து கழுவ பளிச்சென்று இருக்கும்.

கடலை மாவு பாலாடை ஃபேஸ்பேக்:

கடலை மாவு ஒரு ஸ்பூன் 

பாலாடை 2 ஸ்பூன்

பன்னீர் சிறிது

கடலை மாவுடன் பாலாடை, சிறிதளவு பன்னீர் கலந்து குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்திருந்து பின் குளிர்ந்த நீரால் கழுவி விட முகம் மாசு மருவின்றி களையுடன் காணப்படும்.

இதையும் படியுங்கள்:
தமிழ்நாட்டில் சுற்றுலா செல்ல சிறந்த சில மலை வாசஸ்தலங்கள்!
 எளிய ஃபேஸ்பேக்...

திராட்சை பழ ஃபேஸ்பேக்:

கருப்பு திராட்சை 10 எடுத்து கொட்டை எடுத்து கையால் மசித்து அல்லது மிக்ஸியில் அரைத்து முகத்தில் தடவவும். நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீர் கொண்டு கழுவவும்.

ஆரஞ்சு ஆப்பிள் கலவை:

ஆப்பிள் ஒரு துண்டு

ஆரஞ்சு சுளை 2

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

விட்டமின் ஏ, பி, சி, இ போன்ற சத்துக்கள் நிரம்பிய  இந்த இரண்டு பழங்களையும் கொட்டை நீக்கி மிக்ஸியில் அரைத்து மஞ்சள் தூள் கலந்து பேஸ்ட் போல் குழைத்து முகம் கழுத்து பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட நல்ல பலன் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com