
பாதாம் எண்ணையை நகத்தில் தடவி வர நகங்களுக்கு கூடுதல் பளபளப்பு கிடைக்கும்.
முகம் பொலிவுபெற, பாதாம் பருப்பை ஊறவைத்து பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்து பேஸ்ட்போல ஆக்கிக்கொள்ளுங்கள். இந்த பேஸ்டை முகத்தில் பூசுங்கள். 25 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவுங்கள்.
முகம் பொலிவுபெற, பப்பாளிப் பழத்தை நன்றாக அரைத்து அத்துடன் சில துளிகள் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசலாம்.
பாதாம் பருப்பை பவுடராக்கி, அத்துடன் சிறிதளவு பன்னீர் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவவேண்டும். இதனால் சுருக்கம் நீங்கும்.
சீனி சேர்க்கப்படாத பாதாம் பால் எடையைக் குறைக்க உதவுகிறது. உடல் பருமன் உடையவர்கள் பாதாமின் துணை கொண்டு எடையைக் குறைக்க முயற்சி செய்யலாம்.
பாதாம் எண்ணெயுடன், தேன் விட்டு நன்கு கலக்கவும். பின்பு அதனை ஒரு சிறிய டப்பாவில் போட்டு ஒரு வாரத்திற்கு உதடுகளில் வறட்சி ஏற்படும் போதெல்லாம் தடவ வேண்டும். இதனால் உதடுகளில் வெடிப்புகள் போவதோடு, உதடுகள் மென்மையாகவும், சற்று உதட்டின் நிறங்களும் கூடும்.
தினமும் முகத்திற்கு பாதாம் எண்ணெயை துணியால் தொட்டு, முகத்தில் கண்களுக்கு அடியில் மற்றும் கரும்புள்ளிகள் இருந்தால் முகம் முழுவதும் தடவி சற்று நேரம் மசாஜ் செய்யவும். அவ்வாறு தொடர்ந்து செய்தால், முகமானது பளபளப்பாக இருக்கும்.
பாதாம் எண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து, முகத்திற்கு தடவி காய வைத்து கழுவ வேண்டும். இதனால் முகமானது அழகாக இருக்கும்.
நம்மை பளப்பளக்க வைக்கும் பப்பாளி
பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.
பப்பாளிப் பழ பேக்கை முகத்தில் அடிக்கடி போட்டுக்கொண்டால், முகம் நல்ல நிறமாக இருக்கும். இதற்கு காரணம், முகத்தின் மேற் பகுதியில் அதிக அளவு மெலனின் சேர்வதை, பப்பாளி தடுத்து விடுகிறது.
பப்பாளி பழத்தை வெட்டி கூழாக்கி அதில் சிறிது முல்தானி மட்டியை கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் மெதுவாகப்பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுதண்ணீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும்.
பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேகவைத்து அரைத்துக்கொள்ளவும். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவவும். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், வெகு சீக்கிரமே முகம் மென்மையானதாக மாறிவிடும்.
சோற்றுக்கற்றாழை இலை ஜெல்லுடன் பப்பாளி கூழை கலந்து கொள்ளவும். இதை கழுத்து மற்றும் முகத்தில் பூசி நன்றாக தேய்க்கவும், பின் காய்ந்ததும் தண்ணீரில் கழுவும். வாரம் இரண்டு முரை இப்படி செய்தால் கருப்பு புள்ளிகள் மறையும்.
பப்பாளி கூழ். கஸ்தூரி மஞ்சள் தூள், விளக்கெண்ணை ஆகிய மூன்றையும் கலந்து பாதங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் உங்கள் பாதங்கள் வெடிப்புகள் இல்லாமல் மென்மையானதாக மாறிவிடும்.