முடி உதிர்வை கட்டுப்படுத்தும் கற்றாழை: உச்சந்தலையை ஆரோக்கியமாக்கும் இயற்கை வழிமுறை!

ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பொடுகால் உதிரும் முடியை மீண்டும் வளரச் செய்ய உதவும் கற்றாழை பயன்பாடு, வாரத்தில் இருமுறை செய்ய வேண்டிய நடைமுறை விளக்கம்.
aloe-vera
aloe-vera
ஆர்.ஐஸ்வர்யா

I am a Fashion Technologist graduated from National Institute of Fashion Technology, Gandhinagar, Gujarat. I am interested in creating fashion related articles, Psychology and lifestyle articles. I am grateful to CEO of Kalki group, and it’s publishers. I am thankful to the readers for reading my contributions.

Updated on: 

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர் என அனைவருக்கும் இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று முடி உதிர்தல் ஆகும். இதற்காக சந்தையில் பல வகையான ரசாயனப் பொருட்கள் விற்கப்பட்டாலும், மக்கள் பெரும்பாலும் இயற்கை மருத்துவத்தையே நாடுகிறார்கள். அதில் மிக முக்கியமானது கற்றாழை. புதிதாகப் பறித்த கற்றாழையின் ஜெல்லை எடுத்து தலையில் தடவினால் கொட்டிப்போன முடி மீண்டும் வளருமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

கற்றாழையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

கற்றாழை ஜெல்லில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் ஏ, சி மற்றும் இ அதிக அளவில் உள்ளன. இந்த வைட்டமின்கள் அனைத்தும் செல்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, சேதமடைந்த செல்களைப் புதுப்பிக்கவும் உதவுகின்றன. மேலும், இதில் வைட்டமின் பி12 மற்றும் போலிக் அமிலம் நிறைந்துள்ளன, இவை முடி உதிர்வதைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

முடி வளர்ச்சிக்கு கற்றாழை எவ்வாறு உதவுகிறது?

கற்றாழை நேரடியாக புதிய முடியை உடனடியாக முளைக்க வைக்காது. ஆனால், முடி வளர்வதற்குத் தேவையான ஆரோக்கியமான சூழலை ஸ்கால்ப் எனப்படும் உச்சந்தலையில் உருவாக்குகிறது. இதன் முக்கிய நன்மைகள் பின்வருமாறு:

உச்சந்தலையை சுத்தம் செய்தல்: கற்றாழையில் உள்ள என்சைம்கள் உச்சந்தலையில் உள்ள இறந்த செல்களை நீக்குகின்றன. இதனால் மயிர்க்கால்களில் உள்ள அடைப்புகள் நீங்கி, முடி தடையின்றி வளர முடிகிறது.

இரத்த ஓட்டத்தை அதிகரித்தல்: கற்றாழை ஜெல்லை உச்சந்தலையில் தேய்த்து மசாஜ் செய்யும்போது, அந்தப் பகுதியில் இரத்த ஓட்டம் சீராகிறது. இது மயிர்க்கால் களுக்குத் தேவையான ஊட்டச்சத்தைக் கொண்டு சேர்க்கிறது.

பொடுகு மற்றும் அரிப்பைக் கட்டுப்படுத்துதல்: இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பொடுகை முற்றிலும் போக்குகின்றன உச்சந்தலையின் வறட்சி மற்றும் அரிப்பைக் குறைத்து ஈரப்பதத்துடன் வைக்கிறது.

சீபம் அளவைச் சீராக்குதல்: தலையில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையே முடி உதிர்வுக்குக் காரணமாகும். கற்றாழை இந்த எண்ணெய் பசையைச் சமநிலைப்படுத்துகிறது.

அறிவியல் கூற்று: அறிவியல் பூர்வமாகப் பார்க்கும்போது, பரம்பரைத் தன்மை அல்லது முழுமையான வழுக்கைத் தலையில் கற்றாழை ஜெல் புதிய முடியை மீண்டும் வளரச் செய்யாது. ஆனால், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் பொடுகினால் தற்காலிகமாக உதிர்ந்த முடிகளை மீண்டும் வளரச் செய்ய இது பெரிதும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
ஸ்டைலா? ஆரோக்கியமா? ஹேர் ஜெல் உபயோகிப்பதால் முடி கொட்டுமா? ஓர் அலசல்!
aloe-vera

பயன்படுத்தும் முறை:

கற்றாழையை பறித்து, அதன் வெளிப்புறத் தோல் பகுதி, முட்களை நீக்க வேண்டும். அதிலிருந்து வெளிவரும் மஞ்சள் நிற திரவத்தை முழுமையாகக் கழுவி நீக்க வேண்டும். பின்னர் உள்ளே இருக்கும் வெள்ளை நிற ஜெல்லை மட்டும் எடுத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். இந்த ஜெல்லை உச்சந்தலையில் மற்றும் முடியின் வேர்களில் படும்படி தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். அதன்பின் வீரியம் குறைந்த ஷாம்பூ அல்லது சீயக்காய் கொண்டு தலையை அலசலாம். வாரத்திற்கு இரண்டு முறை இவ்வாறு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை ஜெல் நேரடியாக புதிய முடியை உருவாக்கும் ஒரு மாயாஜால மருந்து அல்ல. எனினும், அது முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்து, ஏற்கனவே இருக்கும் முடிகளை அடர்த்தியாகவும் வலுவாகவும் மாற்றுகிறது. ஆரோக்கியமான உணவு முறையோடு கற்றாழையைப் பயன்படுத்தி வந்தால், நிச்சயம் ஆரோக்கியமான முடி வளர்ச்சியைப் பெறமுடியும்.

logo
Kalki Online
kalkionline.com