வெள்ளரிக்காயின் அற்புத பலன்கள்!

 ஃபேஸ் மாஸ்க்
ஃபேஸ் மாஸ்க்Image credit - pixabay.com
Published on

கோடைக் காலத்தில் நிறைய வெள்ளரிக்காய் கிடைக்கும் இந்த வெள்ளரிக்காய் கோடைக்கு இதமளிக்கும் காய்தான். அது எப்படியெல்லாம் அழகுக்கும்  பயன்படுகிறது என தெரியுமா?

பருக்கள், கரும்புள்ளிகள் வறண்ட முகம் போன்றவை மாற மதிய உணவில் வெள்ளரிக்காய் பச்சடியை பாசிப்பருப்பு சேர்த்து சாப்பிட வேண்டும். இத்துடன் தினமும் வெள்ளரிக்காய் அரைத்து முகத்தில் பூச வேண்டும் . பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவலாம். தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளரிக்காய் சாற்றை முகத்தில் தேய்த்து ஐந்து நிமிடம் ஊறவைத்து பின்பு முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

இரண்டு தேக்கரண்டி முல்தானிமெட்டி பவுடருடன் இரண்டு தேக்கரண்டி வெள்ளரிக்காய் சாறு இரண்டையும் முகத்தில் கலந்து தடவி இருபது நிமிஷம் கழித்து முகத்தை கழுவினால் முகப்பருக்கள் தழும்புகள் போன்றவை மறைந்து முகம் இளமையுடன் இருக்கும்

வெள்ளரிக்காயை நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் புதினா சேர்த்துக் கொள்ள வேண்டும் அதை வெள்ளரிக்காயுடன் ஒரு முட்டையின் வெள்ளை கருவையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதனை முகத்தில் தடவ வேண்டும் கண்களைச் சுற்றி தடவக் கூடாது ஏனெனில் இதனால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் இப்படி முகத்திற்கு மாஸ்க் போட்ட பின்னர் கண்களின் மேல் வெள்ளரிக்காய் துண்டுகளை வைத்து இருபத்தைந்து நிமிடம் நன்கு உலர வைத்து பின்பு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் இந்த மாஸ்க் சரும ஈரப்பதத்தை பாதுகாக்கும்.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய்Image credit - pixabay.com

வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். சுமார் 2 மணி நேரம் உலர்ந்த பிறகு அந்த தண்ணீரை எடுத்து குடிக்கலாம். அந்த தண்ணீரில் அரை ஸ்பூன் மஞ்சள் சேர்த்துக் கொள்ள வேண்டும் .அந்த தண்ணீருடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போடலாம்.

வெள்ளரிக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பிறகு இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவிவிட வேண்டும் இவ்வாறு செய்தால் முகத்தில் தோன்றும் கரும்புள்ளியை நீக்கிவிடலாம்..

முகத்தில் வடியும் எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கி பளபளப்பாக வைத்துக்கொள்ள வெள்ளரிக்காய் உதவுகிறது சரும துளைகள் சுவாசம் பெற்று புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது.

முகச் சுருக்கக் கோடுகள் முகச்சுருக்கும் ஏற்படும் அறிகுறிகள் இருந்தால் உடனே வெள்ளரிக்காய் அரைத்து வாரம் மூன்று முறை முகத்தில் தடவி வர வேண்டும் முகம் இளமையை திரும்ப பெற்றுக் கொள்ளும்.

 ஃபேஸ் மாஸ்க்
ஃபேஸ் மாஸ்க்Image credit - pixabay.com

நீளமான முடிகளை பெற வெள்ளரிக்காயை ஜூஸ் எடுத்து வாரம் இரண்டு முறை அருந்தினால் முடி கருகரு என நீளமாக வளரும். முடிக்கு பளபளப்பையும் கொடுக்கும்.

100 கிராம் வெள்ளிரிக்காயில் கலோரி 16 தான் வெள்ளரிக்காய் குளிர்ச்சியானது. அப்படியே  வெள்ளரிக்காயில் 96 சதவீதம் ஈரப்பதம்தான். இது உடலில் வறட்சித்தன்மையை போக்குவதால் வறண்ட தோலும் காய்ந்துவிட்டு முகத்தோற்றம் உடையவர்கள் தோல் பளபளப்பாகி இளமையுடன் காட்சி அளிப்பார்கள்.

சிறுநீர் கழிக்க கஷ்டப்படுபவர்கள் வெள்ளரிக்காய் சாறுடன் தனியாக வெள்ளரி விதைகளையும் சாப்பிட்டு வர வேண்டும்.

வெள்ளரிக்காயை நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறாக சாப்பிடலாம் அப்படி சாப்பிடும் போது அதில் எந்த சத்தும் அழிந்து போகாது வெள்ளரிக்காய் அதிகமாக கிடைக்கும் காலங்களில் தினமும் வெள்ளரிக்காய் சாறு பருகி வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.

இதையும் படியுங்கள்:
முழு மனதோடு செய்யும் எந்த செயலும் வெற்றியைத் தரும்!
 ஃபேஸ் மாஸ்க்

வெள்ளரிக்காய் தக்காளி கேரட் பீட்ரூட் முள்ளங்கி ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி தயிரில் ஊற போட்டு வைத்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான எல்லா வகையான சத்துக்களும் கிட்டும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்..

கோடையில் ஏற்படும் நீர் சுருக்கு நீர்க்கடுப்பு நீர் பிரியாமை முதலிய நோய்களை விரைவில் குணப்படுத்தும் சக்தி இந்த வெள்ளரிக்காய்க்கு உண்டு.

கோடையில் கிடைக்கும் இந்த வெள்ளரிக்காயை மறக்காமல் வாங்கி தினமும் சாப்பிட்டு அழகையும் ஆரோக்கியத்தையும் பராமரிக்கலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com