பலருக்கு பொடுகு என்பது ஒரு வெறுப்பூட்டும் பெரும் பிரச்சனையாகும். ஆனால் இதற்கு இயற்கையான பல தீர்வுகள் உள்ளன. அதில் ஒன்றைத்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். சரி வாருங்கள் இந்த பதிவில் ஆப்பிள் சைடர் வினிகர் பயன்படுத்தி எப்படி பொடுகுத் தொல்லையிலிருந்து முழுவதும் விடுபடலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
Apple Cider Vinegar (ACV) Vs பொடுகு: பொடுகு பெரும்பாலும் உச்சந்தலையில் pH அளவு சமநிலையின்மையால் ஏற்படுகிறது. இது Malassezia என்ற பூஞ்சையின் அதிகப்படியான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ACV-ல் இருக்கும் லேசான அமிலத்தன்மை கொண்ட pH, உச்சந்தலையில் pH அளவை மீட்டெடுக்க உதவுகிறது. இது பூஞ்சையின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, படிப்படியாக பொடுகுப் பிரச்சனையை நீக்குகிறது.
ACV-ன் அமிலத்தன்மை உச்சந்தலையை மெதுவாக பூஞ்சை பாதிப்புகளில் இருந்து மீட்டெடுத்து, பொடுகு உருவாக்கத்திற்கு பங்களிக்கும் இறந்த செல்களை நீக்க உதவுகிறது. இது உச்சந்தலையில் உள்ள பெரிய துளைகளை அடைத்து, செதில் போன்ற தோலின் உருவாக்கத்தைத் தடுக்க உதவும். மேலும் பொடுகுத் தொல்லையால் உச்சந்தலையில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கத்தைத் தணிக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ளன.
எவ்வாறு பயன்படுத்துவது?: ஆப்பிள் சைடர் வினிகரை தலையில் பயன்படுத்துவது மிகவும் எளிது. அதை 1:1 என்ற விகிதத்தில் தண்ணீரில் கலந்து, ஸ்ப்ரே பாட்டில் பயன்படுத்தி தலையில் தெளிக்கவும். பின்னர் லேசாக மசாஜ் செய்வது மூலமாக, அது உச்சந்தலை முழுவதும் படர்ந்துவிடும். இதை அப்படியே 15 நிமிடங்கள் ஊர விடவும்.
நீங்கள் வழக்கமாக செய்யும் முடி பராமரிப்பில் ஒரு பகுதியாக வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை இப்படி செய்யலாம். நீங்கள் ஆப்பிள் சைடர் வினிகர் பயன்படுத்திய பிறகும், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட முடியவில்லை என்றால், உடனடியாக அதன் பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சை பெற, தகுந்த சுகாதார நிபுணரை அணுகி ஆலோசனை பெற வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
பெரும்பாலும் ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்தினாலே பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட்டு விடலாம். இயற்கையான இந்த தீர்வு மூலமாகவே, பொடுகின் தொந்தரவிலிருந்து விடுபட்டு, உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.