மெட்டி, குங்குமம், வளையல் அணிவதால் இவ்வளவு நன்மைகளா..!

வளையல்
வளையல்

மெட்டி அணிவது அழகு மட்டுமல்ல… ஆரோக்கியத் திற்கும் நல்லது. திருமணமான பெண்கள் மட்டுமே அணியும் ஆபரணம் மெட்டி மட்டுமே. கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில்தான் கருப்பையின் நரம்பு நுனிகள் முடிகின்றன‌. அதனால் மெட்டி அணிவது கர்ப்பப்பையை வலுப்படுத்தும்‌. நம் கல்யாண சடங்குகளில் உள்ள அனைத்து வழக்கங்களும் மெட்டி வளையல் குங்குமம் இப்படி எல்லாம் அறிவியல் சார்ந்துதான் உள்ளது. அதன் பின்னே உடல் நலனும் காக்கப்படும் நோக்கமும் உள்ளது.

திருமணமான பெண்கள் கையில் கண்டிப்பாக வளையல் அணிந்திருக்க வேண்டும்‌. வளையல் அணியாமல் இருந்தால் அமங்கலம் என்றே சாஸ்திரம் கூறுகிறது. கண்ணாடி வளையல்கள் அணிவது மிகவும் சிறப்பு. கண்ணாடி வளையல்களின் ஒலி நேர்மறை ஆற்றலைத் தரும். கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு என்று செய்வது அவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதால்தான் வளை காப்பு என்ற பெயர் போலும். இந்த கண்ணாடி வளையல் களில் இருந்து வரும் சத்தம் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவிற்கு நேர்மறை எண்ணங்களை தருமாம்.

சுமங்கலிப் பெண்கள்...
சுமங்கலிப் பெண்கள்...

பெண்களின் அழகுக்கு அழகு‌சேர்ப்பது நெற்றியில் வைக்கும் குங்குமம்தான். காலம் மாறி தற்போது ஸ்டிக்கர் பொட்டு வைப்பது சௌகரியமாக இருக்கிறது. ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொண்டாலும் சுமங்கலிப் பெண்கள் இருபுருவங்களுக்கிடையேயும் நெற்றி வகிட்டிலும் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். இதிலும் அறிவியல் சார்ந்த பலன் உள்ளது‌‌. மூளைக்குச் செல்லக்கூடிய நரம்புகளின் சூட்டை குங்குமம் தணிப்பதாக கூறப்படுகிறது.

இப்படி ஒவ்வொரு ஆன்மீக சடங்குகளுக்கு பின்னாலும் அறிவியல் சார்ந்து உடல் உறுப்புகளை பாதுகாக்கும் விதமாக இருப்பதே மெட்டி  அணிவதும் வளையல் அணிவதும் நெற்றியில் குங்குமம் வைப்பதும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com